பெண்களைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாமலேயே பெரும் பாலான ஆண் கள் “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்’ என, அவர்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். ஆனால் பெண்கள் அப்ப டிப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் புறக் கணிக்கப்படுவதாலேயே வெறுப்படைகி ன்றனர். பெண்கள் உற்சாகமாக இருந்தா லே குடும்பம் உற்சாகமாக இருக்கும்.
.
• பெரும்பாலான பெண்களின் மனதை வாட்டும் விஷயம் குண்டாக இருப்பது. ஏனெனில் உடலில் சதை போடுவது பெண் களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும். கணவர்
அதை வாங்கிக் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.
• மனைவி என்பவள் வேலைக்காரி அல்ல, அதேபோல் சம்பாதி த்து கொடுக்கும் மிசினும் அல்ல. அவ ளும் உணர்வு பூர்வமானவள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சரிசமமாக நடத்த வேண்டும் என்பதையே ஒரு பெண் எதிர்பார்ப்பாள்.
•
அம்மா போல யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனால் மனைவி யின் சமையலை ஆகா, ஓகோ என்று பாராட்டுங்கள். அவர்கள் உச்சிக்குளிர்ந்து போவார்கள்.
• விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.
• எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக்கூடாது. குழந்தைக்கு உடல்நிலை சரியி ல்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
• மனைவி உடுத்தும் உடைகளைப் பார்த்து இந்த உடை உனக்கு
நன்றாக இருக்கிறது’ என பாராட்ட வேண்டும்.
• வருமானம் முழுவதும் கணவனி டமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு முறை யாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
• நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கண வர்களின் பங்கு முக்கியம். படுக்கை யறையில் போர் அடிக்கும் வகை யில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.
பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவர் நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
I welcome for your information
Every man and woman must follow this…