மாதம் தோறும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 1 முதல் அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக, மத்திய அரசுடன் ஏற்பட்ட உடன்பாட் டை அடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மாதம் ஒரு முறை டீசல் விலை உயர் வு, 8ஆம் வகுப்பு வரை படித்த வருக்கே லாரி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலி யுறுத்தி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் காலவைரயற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையா ளர் சங்கம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து மத்திய அரசு நடத்திய 2 கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் தலைமையில் மத்திய தரை போக்குவரத்து செயலர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, ஏப்ரல் 1 முதல் அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத் தத்தை திரும்பப் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவி த்துள்ளது.
மத்திய அரசின் எந்த மாதிரியான உடன்பாடு ஏற்பட்டது என்பது குறி த்த தகவல் இதுவரை தெரியவில்லை. இது குறித்து தகவல்கள் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த பின்னரே தெரியவரும்.
– படித்த செய்தி