Wednesday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செருப்பைக் கழற்றச் சொன்னதால் சிறையா?

மருத்துவமனையின் ஐசியு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் முதல்வர் ஜெயலலிதா சென்றபோது செருப்பை கழற்றும்படி கூறிய மருத்துவர், காவலரை கடமை செய்யவிடாது தடுத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டது தவறு என இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் மருத்துவர் கே விஜயகுமார் கூறினார்.

தமிழக தலைநகர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவ மனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச் சை பெற்று வரும் தினத் தந்தி நாளிதழின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தனை சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா நேரில் சென்று நலம் விசாரித் தார்.

அப்போது ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் செல்லும் போது காலணிகளை கழற்றிவிட்டுச் செல்லும்படி கோரிக்கை விடு த்த, சிவந்தி ஆதித்தனின் சிறப்பு மருத்துவர் கருணாநிதி, அன்று இர வே காவலரை பணிசெய்யவிடாமல் தடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியிரு க்கிறது.

எழுபது வயதான இந்த மருத்து வர் இரவோடிரவாக கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்ட செயல் பரவலான கண்ட னங்களுக்கு உள்ளாகியிருக்கி றது.

இதை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் திமுக தலைவர் மு கருணாநிதி, “70 வயதான ஒரு மூத்த மருத்துவர்மீது இந்த அளவிற் குத் தீவிரமாக இரவோடு இரவாக கைது செய்து புழல் சிறையிலே அடைக்கும் அளவிற்கு அவர் செய்த குற்றம் என்ன? யாரையாவது கொலை செய்து விட்டாரா? கொள் ளை அடித்து விட்டாரா? அல்லது யாரையாவது கடத்தித்தான் சென்று விட்டாரா?” என்று கேள்வி எழுப்பி யுள்ளார்.

பல்வேறு மருத்துவ சங்கங்களும், வழக்கறிஞர் அமைப்புக்களும் கூட இந்த கைது நடவடிக்கையை கண்டித் திருக்கின்றன.

மருத்துவர் கருணாநிதி மீதான வழக்கு பொய்வழக்கு என்று கூறிய இந்திய மருத்துவர் சங்கத்தின் தேசியத் தலைவர் மருத்துவர் விஜய குமார், அந்த வழக்கை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண் டும் என்று கோரிக்கை விடுத்தார் என்று யூத்தமிழாவில் செய்தி வெளி வந்துள்ள‍து

 

Leave a Reply