Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மஹாகவி பாரதியாரின் மன வேதனை!

முண்டாசுக் கவிஞன், மஹா கவி, என்றெல்லாம் தமிழ்கூறும் நல்லுகத்தால் போற்ற‍ப்படும் பாரதியாரின் நெஞ்சம் பொறுக்க‍ வில்லையாம், ஏன் என்னாயிற்று, அப்ப‍டி என்ன‍ பாரதியாருக்கு நேர்ந்துவிட்ட‍து.

பாரதியாரின் நெஞ்சம் ஏன் பொறுக்க‍ முடியவில்லை?

தன்னிடம் பணம் இல்லையே என்று வேதனை அடைந்தானா?
 இல்லை,
தன்னிடம் புகழ் இல்லையே என்று வேதனை அடைந்தானா?
 இல்லை
த‌னது குடும்பத்தை வறுமை வாட்டுகி றதே என்று வேதனை அடைந்தானா?
 இல்லை
த‌னக்கு பதவி கிடைக்க‍ வில்லையே என்று வேதனை அடைந் தானா?
இல்லை இல்லை இல்லை

மேற்கூறிய காரணங்களுக்குக்காக வருந்த, பாரதியார் என்ன‍ சாதாரண பிறவியா? அவன், “காளனே உனை காலால் எட்டி உதைப்பேன்” என்று சொன்ன‍வனாயிற்றே! பின்பு ஏன் அப்ப‍டி கூறினான்.

பாரத தேசம்தான் அவனது சுவாசம் ஆயிற்றே!

அந்த மஹாகவி தனது வேதனைகளை தமது பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நெஞ்சு பொறுக்கு திலையே!

1.     

நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
      நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர்
      அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த
      மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத்
      துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்.     (நெஞ்சு)

2.

மந்திர வாதி என்பார்-சொன்ன
      மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;
யந்திர சூனியங் கள்-இன்னும்
      எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே-ஜனம்
      தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்;
அந்த அரசிய லை-இவர்
      அஞ்சதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர் வார்     (நெஞ்சு)

3.

சிப்பாயைக் கண்டு அஞ்சு வார்-ஊர்ச்
      சேவகன் வருதல்கண்டு மனம்பதைப் பார்;
துப்பாக்கி கொண்டு ஒருவன்-வெகு
      தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப் பார்;
அப்பால் எவனோ செல்வான்-அவன்
      ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற் பார்;
எப்போதும் கைகட்டு வார்-இவர்
      யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப் பார்     (நெஞ்சு)

4.

நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
      நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்,
கொஞ்சமோ பிரிவினை கள்?-ஒரு
      கோடிஎன் றால் அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன்
      ஆறுதலை யென் றுமகன் சொல்லிவிட் டால்
நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு
      நெடுநாள் இருவரும் பகைத்திருப் பார்.     (நெஞ்சு)

5.

சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச்
      சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன் றாயிருந்தா லும்-ஒரு
      கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச்
      சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடு வார்;
ஆத்திரங்கொண் டேஇவன் சை வன்-இவன்
      அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடு வார்.     (நெஞ்சு)

6.

நெஞ்சு பொறுக்கு திலையே-இதை
      நினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே
கஞ்சி குடிப்பதற் கிலார்-அதன்
      காரணங்கள் இவையென்னும் அறிவுமி லார்.
பஞ்சமோ பஞ்சம் என்றே-நிதம்
      பரிதவித் தேஉயிர் துடிதுடித் தே
துஞ்சி மடிக்கின் றாரே-இவர்
      துயர்களைத் தீர்க்கவோர் வழியிலை யே     (நெஞ்சு)

7.

எண்ணிலா நோயுடை யார்-இவர்
      எழுந்து நடப்பதற்கும் வலிமையி லார்
கண்ணிலாக் குழந்தை கள்போல்-பிறர்
      காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள் வார்;
நண்ணிய பெருங்கலை கள்-பத்து
      நாலாயிரங் கோடி நயந்துநின் ற
புண்ணிய நாட்டினி லே-இவர்
      பொறியற்ற விலங்குகள் போலவாழ் வார்     (நெஞ்சு)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: