Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு: சோன் பப்டி

தேவையான பொருட்கள்.

மைதா – 1 1/2 கப்
பால் – 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 1 1/2 கப்
சர்க்கரை – 2 1/2 கப்
ஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 1/2 கப்
பாலிதீன் ஷீட் – 1
நெய் – 250 கிராம்

செய்முறை:

பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் கடலை மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்த மாவை போட்டு, லேசாக பொன்னிறத்தில் வரும் போது இறக்கி விடவும். பின் அதனை குளிர வைக்க வேண்டும்.

அதே சமயம், ஒரு வாணலியில் தண்ணீரை ஊற்றி, சர்க்கரை மற்றும் பாலை ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை நன்கு கொதிக் க விடவும். அந்த பாகு கெட்டியா னதும் இறக்கி, அதனையும் குளிர வைக்க வேண்டும்.பின் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு, அதில் நெய்யை தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு குளிர வைத்துள்ள மாவை, சர்க்கரை பாகுவுடன் கரண்டி யை வைத்து கிளற வேண்டும். அவ் வாறு கிளறும் போது நீள நீளமாக மாவானது சுருளும். அதுவும் குறைந்தது 1 இன்ச் நீளத்தில் இருக் குமாறு கிளற வேண்டும்.

பின் அதனை அந்த தட்டில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய் பவுட ரைத் தூவி, குளிர வைக்க வேண்டும்.பின்னர் அதனை சதுர வடி வத் துண்டுகளாக்கி, பாலிதீன் ஷீட்டில் வைத்து, அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்கரித்து, சுற்றிவைக்க வேண்டும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: