Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய மாடல் செல்ஃபோனை, தந்தை வாங்கித் தராததால், தற்கொலை செய்து கொண்ட மகள்!

கோவை ஆர்.எஸ்.புரம், டி.கே.வீதி, பட்டுநூல்கார வீதியில் வசிக்கும் நகை வடிவமைப்பாளர் கே.முருகனின் ஒரே மகள் நாக நந்தினி (19) பீளமேடு, கொடிசியா அருகில் உள்ள தனியார் கல்லூரி யில் பி.காம். பட்ட‍ப்படிப்பை படித்து வந்தார். தனது தோழர் தோழிகள்  வைத்திருக்கும் விலை யுயர்ந்தசெல் போனை, தனக்கும்  வாங்கித் தருமா று நாக நந்தினி தனது தந்தையிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.

நாகநந்தினி ஆசைப்பட்ட‍ செல்ஃபோனின் விலை ரூ.37,000 மதிப் பு உடையதாகும். இதனால், முருகன், தனக்கு பணம் கிடைக்கும் போது வாங்கித் தருவதாகக்கூறி வந்துள்ளார். ஆனால் இதுநாள்வரை வாங்கித்த‍ரவில்லை. இதன்காரண மாக மனமுடைந்த நாக நந்தினி, கடந்த‌ புதன்கிழமை காலையில் தனது வீட்டிலேயே தூக்கில் தொங்கி னார். தகவல் அறிந்தது அதிர்ச்சி அடைந்த அக்க‍ம் பக்க‍த்தினர், உயிரு க்குப் போராடிய நாக நந்தினி யை, மீட்டு ரேஸ்கோர்ஸ் அருகே யுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்களது சிகிச்சை பலனளிக்காமல் அந்த மருத்துவ மனையிலேயே நாக நந்தினி உயிரிழந்தார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

%d bloggers like this: