Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாலியல் கல்வி தேவையா?

கேள்வி : “பாலியல் கல்வி தேவையா?”

பதில் : “சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை” 

இப்படி ஒரு கேள்வி பதிலை சமீபத்தில் மிக மிகப் பிரபலமான வார இதழ் ஒன்று பிரசுரித்திருந்தது.

பாலியல் கல்வியின் தேவையும், பாலியல் கல்வி என்பது என்ன என்பதையும் முதலில் அவருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் எனப்படுகிறது.

பாலியல் கல்வி என்பது வாத்சாயனாரின் காமசாஸ்திரத்தை விலாவரியாகக் கற்றுக் கொ டுக்கும் விஷயம் போலிருக் கிறது என்றே தான் பெரும் பாலானவர்கள் கருதிக் கொள்கின்றனர்.

இதற்குக் காரணம் பாலியல் என்பதே உடலுறவு என்பது மட்டும் தான் என்னும் சிந்தனை நமக்குள் நுழைக்கப்பட்டது தான்.

பாலியல் கல்வியை பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிப்பதை விட தொலைக்காட்சி வழியாகக் கற்றுக் கொடுக்கலாம். அப்போது தான் பெற்றோரும் கூடவே இருந்து குழந்தை சரியாக கற்றுக் கொள்கிறதா, தேவையானவை மட்டும்தான் கற்றுக் கொடுக்கப் படுகிறதா என்பதை கவனிக்க முடியும்.

மேற்குறிப்பிட்ட தத்துவத்தை உதிர்த்தது நானல்ல, ஒரு பிரபல வார இதழின் “தலையங்கம்” ! பள்ளிக்கூடத்தில் குழந்தை பாடமாகக் கற்பதை விட வீட்டில் அமர்ந்து படிப்பதே சிறந்ததாம்.

அப்படியெனில் ஒவ்வொரு குழந் தையின் வயது வாரியாக, வகுப்பு வாரியாக பாடங்கள் எடுப்பது எப்படி என்பதும், கற்றுக் கொள்ள வேண்டிய மாணவர்களை விட்டு விட்டு குழந்தைகளும் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

மட்டுமன்றி “தேவையானது” என்பதை ஒவ்வொரு பெற்றோரும் எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண் டியது அவசியமாகிறது.

ஆசிரியர்களிடம் சங்கோஜப்படும் குழந்தைகள், பெற்றோர் முன்னி லையில் சகஜமாக கற்றுக் கொள்ளும் என்பதையும் ஏற் றுக் கொள்வதற்கில்லை.

இந்தியாவில் நிகழும் பாலியல் கொடுமைகளை தினம் தோறும் பத்திரிகைகளில் வாசித்தும், எயிட்ஸ் நோயாளிகள் அதிகம் கொ ண்ட நாடு எனும் பட்டியலில் இடம்பெற்றும், 80 விழுக்காடு குழந் தைகள் குடும்ப உறவி னர்களால் ஏதோ ஒருவகை யான பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள் என்னும் புள்ளி விவரங்களைத் தெரிந்திருந் தும் பாலியல் கல்வியை மக்கள் எதிர்ப்பது வியப்பு க்குரியதாய் இருக்கிறது.

பாலியல் கல்வி என்ன என்பதையும் பாலியல் கல்வியில் இடம் பெறப் போகும் பாட திட்டங்கள் என்ன என்பதையும் முடிவு செய்து அரசு பெற்றோருக்குத்தெரியப்படுத்தலாம். இதன்மூலம் குழந்தை கள் என்ன கற்றுக் கொள்கிறார் கள் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக, மேலை நாட்டு பாலியல் கல்வி முறையிலிருந் து வேறுபட்டு நமது பாலியல் கல்வி முறை இருத்தல் நலம். மேலை நாடுகளில் சொல்லப் படும் “திரு மணத்திற்கு முன்பான பாதுகாப் பான உடலுறவு” போன்றவற்றையும், கருவுறாமல் இரு க்க செய்ய வேண்டியவை பற்றியும், உடலுறவு வகைகள் பற்றி யும் சொல்லாமல் இருக்கலாம்.

அதற்குப் பதிலலக திருமணத்திற்கு முன்பான உடலுறவு தீமை யானது என்பதையும், நமது கலாச்சாரம் குறித்தும், குடும்ப உறவு களின் தேவை குறித்தும் விளக்கலாம்.

பால்வினை நோய்கள், அதுகுறித்த விழிப் புணர்வு மாணவர்களு க்கு இருத்தல் மிக மிக அவசியம். மேலும் வாழ்க்கை முறை பாலியல் வளர்ச்சியில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை விளக் குதல் அவசியம். இதன் மூலம் புகை பிடித்தல், மது அருந்து தல் போன்ற தீய பழக்கங்களை மாணவ ர்கள் விலக்கும் வாய்ப்பு உண்டு.

மிக மிக முக்கியமாக பாலியல் கல்வி குறித்து ஆசிரியர்களுக்கு தெளிவான வரையறையும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்.

மெரிக்காவிலேயே பாலியல் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர் கள் நிறைய பாடங்களை சொல் லாமல் விட்டு விடுவதாகவும், அதற்குக் காரணம் அவர்களுக்கு அதில் போதிய பயிற்சி இல்லா மல் இருப்பதும், சொல்வதற்கு தயங்குவதுமே காரணம் என நியூ யார்க் ஆராய்ச்சி ஒன்று கடந்த வாரம் அறிக்கை சமர்ப்பித்தி ருந்தது.

பாலியல் கல்வி தேவையானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் சரியான அணுகு முறையுடனும், தெளி வான பார் வையுடனும், உறுதியான வரை முறையுடனும் அதை அரசு செயலா க்கம் செய்ய வேண்டியது அவசியம்.

– nk

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: