Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள் கர்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால் . . .!

பெண்கள் கர்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால், மிகவும் பயமாக இருக்கும். அதிலும் முதல் தடவை லேசான வலி ஏற்பட்டாலே, அனைவரும் பதட்டம் அடை வோம். ஆனால் கர்பமாக இருக்கும் போது, இவ் வாறான வலிகள் ஏற்படுவது சாதா ரணம் தான். அதற்காக சாதார ணமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் சில சமயங்களில் சிக்கலா ன பிரசவம் நடைபெறப் போகிறது என்பதற் கான அறிகுறியாகவும் அடிவயிற்றி வலி ஏற் படும். மேலும் இத்தகைய வலி, கர்ப காலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படும். சொல்லப்போ னால், கர்பத்தில் ஒவ்வொரு நிலையி லும் ஒவ்வொரு விதமான வலி அடி வயிற்றில் ஏற் படும். அதிலும் கர்பத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலிக ளைவிட, இரண்டாம் கட்டத்தில் ஏற்படும் வலியில் மிகவும் கவன மாக இருக்க வேண்டும். சரி, இப்போது அத்தகைய வலி அடிவயி ற்றில் ஏற்படுவதற் கான காரண த்தைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!
* கர்பத்தின் 2 முதல் 6 வாரங்க ளில், கருவானது உருவாக ஆரம் பிக்கும். அவ்வாறு அவை உரு வாகும் போது, ஒருவிதமான வலி, அடிவயிற்றில் ஏற்படும். சொல்லப்போனால், இந்த காலத்தில் மாத விடாய் சுழற்சி ஏற்ப டப் போவது போன்று உணர்வு இருக் கும். ஆனால் உண்மையில், இந்த காலத்தில் வலி ஏற்பட்டால், கரு உருவாக ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.
*கர்ப்பமாக இருக்கும்போது ஹார்மோன் களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய ஹார்மோன் மாற்றங்களாலு ம், வயிற்றில் வலி அல்லது ஒருவித பிடிப்பு ஏற்படும். இதுகூட, கர்பத்தின் ஆர ம்ப காலத் தில் தான் உண்டாகும்.
* சில சமயங்களில் கருமுட்டையானது கருப்பையில் இல்லாமல், பெல்லோப்பியன் குழாய்களில் இருந் தால், அது வளரும் போது மிகவும் கடுமையான வலியானது ஏற் படும். இந்த நிலையில் மருத் துவரிடம் சென்றால், நிச்சயம் கருவை அகற்றிவிட வேண் டும். இல்லையெனில் கருச்சிதைவு ஏற்படும். இந்த மாதிரியான வலி, 4-6 வாரங்களில் ஏற்படாது. ஆனா ல் அதற்கு பின்னர் வலியானது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும். ஏனெனில் கரு வளரும் போது, குழாயும் விரிவடைந்து கடும் வலி ஏற்படும்.
*கர்பமாக இருக்கும்போது வலியுடன்கூடிய இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச் சிதைவிற் கான அறிகுறியாகும். அதிலும் இரத்தப்போக்கு அதிகமாக இரு ந்து, வலி தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
* பொதுவாகவே 36 வாரங்கள் முடிந்ததும், எந்த நேரத்திலும் பிரசவ வலி ஏற்படலாம். சில நேரங்களில் அவை பிரசவ வலி யாக இல்லாவிட்டாலும், சில சமயங்களில் குறை பிரசவத்தை ஏற்படுத்தும். அதிலும் 7 அல்லது 8 ஆவது மாதத்தில், இந்த மாதிரி யான வலி ஏற்பட்டால், அது குறை பிரவத்திற்கான அறிகுறியாக இரு க்கும். இவையே கர்ப காலத்தில் அடி வயிற்றில் ஏற்படும் வலிக்கா ன காரணங்கள். வேறு ஏதாவது காரண ங்கள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளு ங்கள்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply to Kavitha Madhan Cancel reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: