Thursday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை” – நடிகை அஞ்சலி

அப்பாவிப்பெண்ணாக, நடிகர் ஜீவாவுடன் ‘கற்றது தமிழ்’ திரைப் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. ‘அங்காடி தெரு’, ‘மங்காத்தா’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு’, ‘சேட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இவர் படவிழாக்கள் மட்டுமல்லாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் தன்னுடைய தாயாருடனே வலம் வருவ தை வழக்கமாக கொண்டிருந்தார். இருவ ரும் தாய்-மகள் என்ற உற வைத் தாண்டி நல்ல நண்பர்க ளாகவே இருந்து வந்தனர்.  இந் நிலையில், தற்போது அஞ்சலி தனது தாயை பிரிந்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப் படுகிறது.

இதுகுறித்து அஞ்சலி,  நான் சென்னையில் எனது சித்தி பாரதியு டன் வசித்தேன். அவர் எனது அம்மா என்றே பலரும் நினைத்தனர். ஆனால் அவர் என் அம்மா கிடையாது. சென்னையில் என்னு டன் இருக்கும் குடும்பமும் எனது சொந்த குடும்பம் இல்லை. சித்தி குடும்பத்தினர் என்னோடு தங்கி இருக்கிறார்கள்.

அவர்களுக்காக நான் நிறைய செய்து விட் டேன். ஆனாலும் எனக் கு தெரியாமலேயே சித்தி எனக்கு எதிராக நிறைய மோசடி வலைகள் பின்னி வைத்துள்ளார். என்னுடை ய கோடிக்கணக்கான பணத் தை கையாடல் செய்து விட்டார். . இவருக்கு உறுதுணையாக இருந்து வருபவர் இயக்குனர் களஞ்சியம். இருவரும் என்னை ஒரு மெசின் போல வே நடத்துகிறார்கள். என்னை தாங்கமுடியாத அளவுக்கு கொடு மைப்படுத்தியிருக்கிறார்கள்.

எனது சொந்த அண்ணன், அக்காவைக்கூட பார்க்கவோ, பேசவோ அனுமதிப்பதில்லை. இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் மேஜர். என்னு டைய சொந்தக் காலில் நிற்க முடிவு எடுத்து விட்டேன். இப் போது ஐதராபாத்தில் குடியேறி யிருக்கிறேன். தற்போது எனக்கு யாரும் துணையில்லை. என்னுடன் தொடர்புடையவர்களின் போன் நம்பர் களைக்கூட அவர்கள்தான் வைத்திருக்கிறார்கள்.  நான் வேறு யாருட னோ ஓடிவிட்டதாக சித்தி தவறான செய்தி யை பரப்பக்கூடும். மேலும் பல வகைகளில் என் னைப் பற்றி அவதூறு பரப்பவும் தயாராக இருக்கிறார்கள். அத னால்தான் உன்மைகளை உங்களிடம் சொல்கிறேன். சென்னை வந்தால் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே இப்போதை க்கு அங்கு வரமாட்டேன்.

என் உடலில் சிறு கீறல் ஏற்பட்டாலும் அதற்கு என்னுடைய சித்தியும், இயக்குனர் களஞ்சியமும்தான் முழுப் பொறுப்பு. நான் சினிமாவில் இதுவரை சம்பாதித்த பணம் அனை த்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

எனக்கென்று இப்போது எதுவுமில்லை. இனிமேல்தான் என்னுடை ய தேவைக்கு பணம் சேர்க்க வேண்டும். எனது உண்மை நிலையை விரைவில் பத்திரிகையாளர் களை சந்தித்து வெளிப்படுத்துவேன் ’’என்று  தெரிவித்துள்ளார்.

– என்று மாலை இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: