ஒருநாள் என்ற தலைப்பில் நான் எழுதிய சிற்றுரை, இந்த (ஏப்ரல்) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழ்-ல் சென்னையில் ஒரு நாள் என்ற தலைப்பில் பக்க எண்.54-ல்) வெளி வந்துள்ளது. அதை உங்கள் பார்வைக்கு. . .
சென்னையில் ஒரு நாள் . . . !
(விதை2விருட்சம் சத்தியமூர்த்தி)
மாலை வேளையில் பூஞ்சோலையில் புல்வெளியில் புற்களோடு புற்களாக, மரத்தடி நிழலில் நான் படுத்திருந்தேன். எனது விழிக ளால் அந்த வானத்து மீன்களை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போதே உறக்கம் என் கண்களைத் தழுவியது. அதிகாலை வேளை, காலைக் கதிரவன் என் விழி தொடவே, நானும் கண் மலர்ந் தேன். சோம்பலை முறித்தவாறே சுற்றும் முற்றும் பார்த்தேன். மரக்கிளைகளில் தேங்கிய பனித் துளி களெலாலம், உருகி என் கன்னத்தை நனைத்தது. மங்கையர் களின் தாவணி தீண்டுவதுபோல தென்றல் காற்று என்னை
கடந்தவாறே இருந் தது, அங்கே புற்களின் பசுமையும், மரத்தின் பழுப்பு நிறமும், வானத்தின் நீல நிறமும், சூரியக் கதிர்களின் செந் நிறமும், அங்கே பூக்களில் பூத்திருக்கும் பல வண்ணங்களும் என் கண்களுக்கு அற்புத விருந்தா க அமைந்தது. என் எதிரில் நடக்கும் அணிலின் வேட்டையும், குரங்குக ளின் சேட்டைகளையும் எனது மனதிற்கு இதம் அளித்தது. குயில் களின் பின்னணி இசையில் கிளிகளும், குருவிகளும் தத்தமது மொழிகளில் கீதம் பாட, அதற்கேற்ப மயில்கள் நடனம் ஆட,
அதைக்கண்ட புள்ளி மான்க ளோ, துள்ளாட்டம் போட, அடடா, அடடடா என்னே! கண் கொள்ளா காட்சி இது!
நான் பசியாற, அங்கே வீசிக் கொண்டிருந்த தென்றல் ஒரு மரத் திலிருந்து, கனி ஒன்றை பறித்து, என்மீது வீசியது. அக் கனியினை பார்த்த அடுத்த கனமே! நாவில் எச்சில் ஊற்றெக்க சுவைத்து பசியாறினேன். மெல்ல மெல்ல என் பாதங்களை, புற்களின் மீது வைத்து நடக்க ஆரம்பித்தேன். ஏதோ ஒரு தேசத்து ராஜா வரும் போது, குளிர்ச்சி யான மலர்களை தூவி, அவனது பாதங்களுக்கு இதமளிப்பது போல புற்களின் மீதுள்ள பனித்துளி என் உள்ளங் கால்களை குளிர்வித்த து. திடிரென கார்மேகம் சூழ்ந்து, மழைத் தூறலை பன்னீராய் என் மீது தூவியது ஆஹா! என்னே இயற்கை யின் அற்புதம் என்றே மனதில் நினைத்து,
அங்கே நடைபோட்ட வேளையில் திடீரென்று ஒரு குரல் என்னங்க ! , லாரி வர நேரமாச்சு சீக்கிரமா எழுந்துருங்க என்று, சற்றுக் குழப்பத்துடன் விழித் தெழுந்தேன். அங்கே சென்னை மாநகரத் தெருவில் நானும் என் மனைவியும், காலிக் குடங்க ளுடன் தண்ணீர் லாரிக்காக காத்திருந்தோம்.
(“அங்கே பாலைவனத்தின் நடு வில் நானும் என் மனைவியும், காலிக் குடங்களுடன் தண்ணீர் லாரிக்காக காத்திருந்தோம்”. என்ற வரிக்கு பதிலாக “சென்னை மாநகரத்தெருவில் நானும் என் மனைவியும், காலிக் குடங்களு டன் தண்ணீர் லாரிக்காக காத்தி ருந்தோம்” என்று நம் உரத்த சிந்தனை ஆசிரியர், திரு. உதயம் ராம் அவர்களால் மாற்றப்பட்டுள்ளது. )