இன்றைய தொழில்நுட்ப உலகில், பல அரியத்தகவல்களையும் செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள பல்வேறு இணையங்கள் நமக்கு பேருதவியாக இருக்கின்றன• ஆனால் இவற்றை பார்வையிட இணையத் தொடர்பு இருந்தால்தான் பார்க்க, படிக்க முடியு ம்.
இந்த குறையை போக்கும் விதமான நாம் விரும்பும் இணையங்க ளை இணையத்தொடர்பு இல்லாமல் பார்வை யிட நமக்கு உதவும் ஓர் உன்னத மென்பொருள்தான் இந்த வெப் காபி (WebCopy) எனும் சிறிய மென்பொருள் உதவுகிறது. இதில் சேமிக்கப்படவேண்டிய இணைய முகவரியையும், கணி னியி ல் சேமிக்கப்பட வேண்டிய இடத் தினையும் கொடுத்தால் போதும் குறி த்த இணையத் தளத் தின் அத்தனை பக்கங்களும் சேமிக்கப்பட்டுவிடும். பின்னர் எந்த நேரத்தில் வேண்டுமா னாலும் அவ்விணையத்தளத்தினை படித்து பயன்பெறலாம். இணையத் தொடர்புள்ள சந்தர்ப்பத்தில் பார்வை யிட்ட ஒரு இணையத்தில் காணப் படும் இணைய பக்கம் ஒன்றி னை சேமித்து, அதை மீண்டும் இணையத் தொடர்பு அற்ற சந்தர்ப் பத்தில் பார்வையிடலாம்.
இதில் உள்ள ஒரு பின்னடைவு என்னவென்றால், அத்தளத்திலுள் ள அனைத்து விடயங்களையும் ஒரே தடவையில் சேமித்து வைக் க முடியாது.
நன்று , தங்களுடைய வலைப்பதிவுகள் மிகவும் சுவாரியசியமாக உள்ளன…