Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“சொன்னது நீ தானா?” – என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

சொன்ன‍து நீதான என்ற அற்புத பாடல் இடம்பெற்ற‍ திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம். இத்திரைப்படம் 1961 ஆம் ஆண்டில், சித்ராலயா தயாரிப்பில்,  இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் கை வண்ண‍த்தில் உருவான காவியச் சித்திரம். இதில் முத்துராமன், கல்யாண் குமார், தேவியகா நாகேஷ், குட்டி பத்மினி உட்பட மற்றும் பலர்  நடித்திருக்கின் றனர். இத் திரைப் டத்தில் இடம் பெற்ற‍ எங்கிருந் தாலும் வாழ்க, முத்தான முத்த‍ல்லவோ, சொன்ன‍து நீதானா?, ஏன் இந்த கோலத்தை கொடுத்தா யோ?, நினைப்பதெல் லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை ஆகிய கவியரசர் கண்ண‍தாசன் அவர்க ளின் அற்புத பாடல்கள் அனைத்தும் தேனில் ஊறிய பலாச்சுளைகள், இந்த பாடல் களுக்கு மெல்லிசை மன்ன‍ர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைய மைத்து, பாடல்களுக்கு செறிவூட்டியுள்ள‍னர். இத்திரைப் படத்தின் சிறப்புக் களையும் சொன்ன‍து நீதானா பாடலின் சிறப்புக்களையும் விதை2 விருட்சம் இணையம் மூலமாக பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

கதைச்சுருக்க‍ம்

கல்யாண் குமாரும் தேவிகாவும் தெயவீக காதலர்கள்.ஆனால் ஏனோ விதிவசத்தால் பிரிந்து விட்ட‍னர். தேவிகாவோ, முத்துராம னை மணந்து கொண்டு இல்ல‍ற வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் கல்யாண்குமாரோ தனது காதலி தேவிகாவை நினைத்து, அவரது நினைவில் இருந்து கொ ண்டு திருமணத்தையே வெறுக்கி றார்.  ஒரு கட்ட‍த்தில் தேவிகா, தனது கணவர் முத்து ராமனின் புற்று நோயைக் குணப்படுத்த, புற்றுநோய் மருத்துவ மனைக்கு வர அங்கே, எதிர்பாராத திருப்ப‍ மாய் தனது பழைய காதலன் கல்யாண்குமார் இருப்ப‍தை காண் கிறார். இருவருக்கும் திகைப்பில் ஆழ்த்திய பேரர‍திர்ச்சியா இருந் தது, ஆனாலும் இரு வரும் கண்ணியம் காத்து வந்தனர். ஒரு கட்ட‍த்தில் தனது கணவனை உயிரை மீட்டுக்கொடுக்கும் பொறுப் பை தனது முன்னால் காதலனிடம் தேவிகா ஒப்ப‍டைக்கிறார். தனது முன்னாள் காதலி யின் தற்போதைய கணவனின் உயிரை அந்த முன்னாள் காதலன் மீட்டாரா ? இல்லையா? என்பதே கதை யின் முடிவாகும். இத்திரை ப்படத்தில் ஆங்காங்கே நாகேஷ் மற்றும் குட்டி பத்மினியின் வந்து நமது மனங்களை கொள்ளை அடித்துச் செல்கின்றனர். இத் திரைப்படம், பெண்மை, கற்பு, கடமை, பெருந்தன்மை ஆகிய பல பெரும் நற்குணங்களைச் சிறப்புற எடுத்துக்காட்டுவதாக அமைந் திருப்ப‍து இதன் தனிச்சிறப்பு ஆகும்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற‍ அற்புத பாடல்களுள் ஒன்றான சொன்ன‍து நீதானா என்ற பாடல், விதை2விருட்சம் ரா. சத்திய மூர்த்தி ஆகிய எனக்கு ரொம்ப பிடித்த‍மான பாடலாகும்.

இந்த பாடலின் வரும அத்த‍னை வரி களுமே! மிகவும் ரசிக்கும் படியாக வும் பெண்மையின் உன்ன‍த தன் மையை வெளிக்காட்டும் விதமாக வும் அமைந்திருக்கிறது. மேலும் தேவிகா அவர்களது நடிப்பை இங்கு பாராட்டியே ஆகவேண்டும். இந்த பாடலை சிதார் இசைக் கருவி யை இசைத்த‍படியே பாடுவதாக காட்சி, இதில் சிதார் இசைக்கருவி யை உண்மையில் அவரே இசைப்பது போல வே அவரது கைவிரல் மேலும் கீழும் சென்று வரும். இன்றும் இந்த பாடலை நான் பார்க்கும் போதும் இவரது கைவிரல்களையே கவனித்து அதிசயிப்பேன். மேலும் பாடலின் ஒவ்வொரு வரிக ளில் உள்ள‍ உட்பொருளை அவர் ஆழமாக கிரகித்து, தனது அசாதாரண நடிப்பை வெளிப் படுத்தி, அந்த கதா பாத்திரத் திற்கு உயிரூட்டி யிருப்பார்.

மேலும் ஒரு பேட்டியில் ஒளிப் பதிவா ளர் திரு. ஏ. வின்சென்ட் அவர்கள், பாடல், படம் பிடிக் க‍ப்பட்ட‍ ஒரு காட்சியை விளக்கியி ருப்பார்! “சொன்னது நீதானா’ என்ற பாடல் காட்சியில் கேமரா, முத்துராமன் அமர்ந்திருக்கும் கட்டிலின் கீழே புகுந்து வெளி வரு வது போன்று அமைக்கப்பட்ட ஷாட்களை படம் பார்த்தவர்கள் பெரிதும் பாராட்டினார்கள். இந்தக் காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்றால் அரை வட்ட வடிவ டிராலி போட்டு, அதன் மேல் கட்டில் போட்டிருந்தோம். கேமரா கட்டில் அருகில் வந்ததும் மேலே கட்டி யிருக்கும் கயிறு மூலம் கட்டிலை தூக்கி விடுவார்கள். கேமரா கட்டிலுக்கு அடியில் இருப்பதுபோல் காட்சியில் தெரியும்.

பாடல் பிறந்த கதை

பாடலுக்கு மெட்டு அமைக்க‍ எம்.எஸ்.வி.ஐயாவும், உட்பட பி. சுசீலா அம்மா, சித்ராலயா கோபு உட்பட அனைவரும் கவியரசு கண்ண‍தாசனுக்காக காத்திருந்தனர். வெகுநேரம் ஆகியும் கண் ண‍தாசன் வரவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த மெல்லிசை மன்ன‍ர் விஸ்வநாதன் அவர் கள் “என்னய்யா இந்த குடிகாரரோடு இதே வேலையா போச்சு. சொன்ன நேரத்துக்கு வந்து தொலைய மாட்டேங் கிறார்” என்று சத்த‍ம்போட்டுவிட்டார். (கண்ணதாசனை, எம்.எஸ்.வி. அவர்கள் இவ்வ‍ளவு தரக்குறைவாகப் பேசமாட் டார். ஆனால் அடுத்த‍தாக இசை அமை க்க‍ப் போகும் கம்பெனியில் இருந்து அடிக்கடி வந்த போன்வந்த்தால் அவர் பொறுமையிழந்து இவ்வா று சத்த‍ம் போட்டுவிட்டார்).

சிறிது நேரத்தில் எலாலம் கண்ணதாசனும் வந்து சேர்ந்தார். இய க்குர் ஸ்ரீதரும் சிச்சுவேஷனை சொல்ல‍ ஆரம்பித்தார்.  மருத்துவ மனையில் புற்று நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டி ருக்கும் கணவன், தான் எப்படியும் இறந்துவிடுவோம் என்பதை யும், அந்த மருத்துவமனை மருத்துவர், தனது மனைவியின் முன்னாள் காதலன் என்பதையும் அறிந்து, தான் இறந்துவிட்டால் அந்த மருத்துவரை, தன் மனைவி மறு மணம் செய்து கொள்ள சம்ம திக்கவேண்டும் என்றுகூற, மனம் நொறுங்கிப்போகும் மனைவி தன் சோகத்தைப் பிழிந்து பாடுவ தாக காட்சியை விளக் கினார். பாடகி பி.சுசீலாவும் தயாரானார். விஸ்வநாதன் அவர்க ளும் மெட்டுக்க ளைப்போட்டு காட்டுகிறார். அந்த மெட் டுகளுக்கு, பாடல்வரிகளை மின்ன‍ல் வேகத்தில் கொண்டுவரும் கண்னதாச னுக்கு அன்று ஏனோ வார்த்தைகள் வரவில்லை தட்டுத் தடுமாறி அப்ப‍டியே வார்த்தைகள் வந்தாலும் அந்த வார்த் தைகளும்  இயக்குநர் ஸ்ரீதருக்குப் பிடிக்க வில்லை.

பின் கிடைத்த‍ சின்ன‍ இடைவேளையில், கவியரசு கண்ணதாசன், சிறுநீர் கழிக்க‍ கழி வறை சென்று திரும்பும் வழியில், ஒருவர் கண்ணதாசனிடம் “நீங்க வர லேட்டாச்சுன் னு விஸ்வநாதன் சார் உங்களை குடிகார ர்னு திட்டிட்டாருங்க” என்று போட்டுக் கொ டுத்துவிட்டார்.

கண்ணதாசன் கோபப்படவில்லை. மீண்டும் வந்து, அமர்ந்தவர், எம்.எஸ்.வி.அவர்களிடம் “ஏண்டா விசு, என்னை நீ குடிகாரன்னு திட்டினியாமே! அப்படியா, ஆச்சரியமா இருக்கே! நீ இப்படியெ ல்லாம் சொல்லமாட்டியே! நீயா இப்படிச் சொன்னே! என்னால் நம்பவே முடியலை” என்றவர் சட்டென்று ராகத்தோடு “ சொன்ன து நீதானா… சொல்… சொல்… சொல்… என்னுயிரே” என்று பாடிக் காட்ட… இந்த வரி இயக்குநர்  ஸ்ரீதருக்கு பிடித்து விட்ட‍து. இதே வரியினை பல்ல‍வியாக கொண்டு பாடலை எழுதுமாறு கண்ண‍ தாசனை இயக்குநர் ஸ்ரீதர் கேட்டுக் கொள்ள‍, அதனை தொடர்ந்து விஸ்வ நாதன் மெட்டு அமைக்க‍, கவியரசரின் சிந்தையி லிருந்து நீர்வீழ்சியாக வரிகள் வந்து விழுந்தனவாம்.

சொன்ன‍து நீ தானா? என்ற பாடலில் இடம்பெற்ற‍ காவிய‌ வரிகள்

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே       (சொன்னது)

இன்னொரு கைகளிலே யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே!    (சொன்னது)

மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே    (சொன்னது)

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா     (சொன்னது)

– விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி
 

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: