Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நடிகை அஞ்சலி, என்மீது கூறிய குற்ற‍ச்சாட்டுக்கள் தவறானவை!” – இயக்குநர் களஞ்சியம் – செய்தி & வீடியோ

நேற்றைய தினம், நடிகை அஞ்சலி, மாலை இதழ் ஒன்றிற்கு, அளித்த பேட்டியில், தனது உயிருக்கு பெரும் அச்சுறுத்த‍ல் ஏற்ப் பட்டுள்ள‍தாகவும், தனது சித்தி, இயக்குநர் களஞ்சியத்துடன் சேர் ந்து, என்னை மிகுந்த கொடுமை படுத்தி வருவதாகவும், அத னால், தான் அந்த வீட்டை விட்டே வெளியேறுவதாகவும், தெரிவித் திருந்தார்.

இதனை கடுமையாக மறுத்த இய க்குநர் களஞ்சியம், இன்று அஞ்சலி மீது பதிலுக்கு புதிய புகாரை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அதில், “நான் தமிழர் நலம் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறேன். ‘பூமணி’, ‘பூந் தோட் டம்’, ‘கிழக்கும் மேற் கும்’, ‘நிலவே முகம் காட்டு’, ‘கருங்காலி’ போன்ற படங்களை இயக்கியுள்ளேன். தமிழர் நலம் அமைப்பு மூலம் தமிழக மக்களுக்கும், உலக தமிழர் களுக்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். சமுதாயத்தில் எனக்கு நல்ல மதிப்பு உள்ளது. நடிகை அஞ்சலியை ‘சத்தமில்லாமல் முத்தமிடு’ என்ற படத்தில் நான் தான் அறி முகப்படுத்தினேன். பொருளா தார நெருக்கடியால் அப்படம் வெளி வரவில்லை. முதல் படத்தின் இயக்குனர் என்ற முறையில் அஞ்சலி குடும்பத்தினர் மீது எனக்கு பழக்கம் இருந்தது. குடும்ப நண்பராக சில ஆலோ சனைகள் வழங்கியு ள்ளேன். அஞ்சலியின் குடும்ப விவ காரங்க ளிலும் சொந்த பிரச்சினையிலும் நான் தலையிட் டது இல்லை. அஞ்சலி நேற்று அளித்த பேட்டி எனக்கு அதிர்ச்சி யாக இருந்தது. அவர் சம்பாதித்த பணத்தை நான் கையாடல் செய்து விட்டதாகவும் என்னால் அஞ்சலி உயிருக்கு ஆபத்து என் றும் பொய்யான குற்றச் சாட்டு களை கூறி உள்ளார். என்னை ஒரு அடியாள் போலவும் சித்தரித்து உள்ளார். இதனால் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மன உளைச்சலுக்கு ம் ஆளாகியுள்ளேன். அஞ்சலி குற்றச்சாட்டு கள் தவறானவை. எனவே அஞ்சலி மீதும் அவரை பின்னால் இருந்து தூண்டுபவர்கள் மீதும் நடவடி க்கை எடுக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply