Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எம்.எஸ். வேர்ட்: விரல் நுனியில் உள்ள சூட்சுமம்

வேர்ட் செல் டெக்ஸ்ட் மாற்றம்

வேர்ட் டேபிள் ஒன்றில், அதன் செல் கட்டங்களில் உள்ள டெக்ஸ் ட்டை எந்த வகையில் வேண்டுமானாலும் தோன்றும்படி மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, படுக்கை வசத்தில் இருப்பத னை, நெட்டுவாக்கில் அமைக்கலாம். இதற்குக் கீழ்க் காணும் வழி களில் செயல்பட வேண்டும்.
1. எந்த செல்லில் உள்ள டெக் ஸ்ட்டை மாற்ற வேண்டுமோ, அந்த செல்லுக்குக் கர்சரைக் கொ ண்டு சென்று, ரைட் கிளிக் செய்திட வும். அப்போது Context menu ஒன்று கிடைக்கும்.
2. இந்த மெனுவில் Text Direction என்பதனைத் தேர்வு செய்தி டவும். டெக்ஸ்ட் டைரக்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.  இத னைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட் எந்த வகையில் மாற்றப்பட வேண் டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங் கள் எண்ணியபடி அமைத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளி யேறவும்.
இந்த செயல்பாட்டினை, வேர்ட் தரும் ரிப்பனில் உள்ள லே அவுட் டேப்பி னைப்பயன்படுத்தியும் மேற்கொள் ளலாம். இதற்கும் மேலே கூறியபடி, கர்சரை செல்லில் வைத் திடவும். அடுத்து, ரிப்பனில், லே அவுட் டேப்பினைத் திறக்கவும். இதில் கிடைக்கும் Alignment groupல், Text Direction என்ற டூலினைத் திறக்கவும். நீங்கள் விரும்பும் வகையில், டெக்ஸ்ட் அமையும் வரை, இதில் கிளிக் செய்து கொண்டே இருக்கவும். டெக்ஸ்ட் குறிப்பிட்ட கோணத்தில் வந்தவுடன், வெளியேறி ஓகே கிளிக் செய்திடவும்.

பாராவினை நகர்த்த:

சில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு காப்பி அல்லது கட் மற்றும் பேஸ்ட் கட்டளை எல்லாம் வேண் டாம். எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள் ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக் கவும். பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத் தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தி னால் பாரா மேலே கீழே முழுதாகச் செல்லும்.

புல்லட் பாய்ண்ட்ஸ்:

வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப்படுத்திக் காட்டவும் புல்லட் பாய்ண்ட்ஸ் பயன் படுத்துகிறோம். இதற்கு வழக் கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந்தெடு க்கிறோம். அல்லது டெக்ஸ் ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல் லட் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டில் கர்சரை வைத்து பின் கண்ட்ரோல்+ஷிப்ட்+எல் அழு த்தினால் போதும். தானாக புல்லட் அமைந்துவிடும். கண்ட்ரோல் + ஷிப்ட் + என் அழுத்தினால் இந்த புல்லட் பாய்ண்ட்கள் நீங்கி விடும்.

டாகுமெண்ட் தொடக்கமும் முடிவும்:

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக் கத்திற்குக் கொண்டுசெல்ல எண்ணு கிறீர்கள். அதாவது திரையில் தெரி யும் டெக்ஸ்ட்ஸ்கிரீன் நகரக்கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டு ம். என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத் திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதேபோல் திரையில் தெரியும் பக்க த்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழு த்த வும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொ ண்டீர்களா!

Leave a Reply