Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அச்சம் எப்போது ஏற்படுகிறது? அந்த அச்சத்தின் பொருள் என்ன? – லேனா தமிழ்வாணன்

சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அச்சமும் துணிவும் ஒன்றுக் கொன்று மாறுபட்ட மனநிலைகள் என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. பல சமயங்களில் உண்மையான துணிவுக்கு அச்சமே செவிலித் தாயாக அமைகிறது.!

அச்சம் எப்போது ஏற்படுகிறது? ஒரு மனித னை ஆபத்துகள் சூழும் போதுதான் அச்சம் தோன்று கிறது. அந்த அச்சத்தின் பொருள் என்ன? அதனால் விளையக்கூடிய பயன் என்ன? நாம் காட்டு வழியே தனிமையில் நடந்து செல்லுகி றோம். அப்போது திடீரென் று ஒரு புலி எதிர்ப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனே நம் உள்ளத்திலும் உடலிலும் எத்த கைய மாறுதல்கள் ஏற்படும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்.

புலி நம்மீது பாயப்போகிறது. அதனிடமிருந்து நாம் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற தீவிர உணர்ச்சிதான் அச்சம். அந்த அச்சம் வந்தவுடன் தம் உடம்பிலும் உள்ளத்திலும் உள்ள சகல சக்திகளும் நொடிப் பொழு துக்குள் எழுச்சி பெற்று விடுகின்றன. நம்முடைய சிந்தனையும் செயல்களும் புலியிடமிருந்து எப்படித் தப்புவது என்ற ஒரே ஒரு குறிக்கோளை நோக்கியே ஒருமுனைப்படுகின்றன.

இந்நேரத்தில் நம் உடம்பிலுள்ள சில சுரப்பிகள் அபரிதமான அளவில் சுரக் கின்றன. உடனே நம்மில் இயல்பாகவே குடிகொண்டுள்ள சோம் பேறித்தனமும் அலட்சிய மனப்பான்மையும் பளிச்சென்று மறைந்து ஒரு புதுமையான விறுவிறுப்பும் ஆற்றலும் நம் நாடி நரம்புகளை அசைக்கின்றன. ஆட்டுகின்றன.

நாம் ஒரு நோயாளியாக இருந் தால்கூட அந்நேரத்தில் அந் நோய் பறந்துவிடுகிறது. ஒரு வன் முட்டாளாய் இருந்தால்கூட அந்த நேரத்தில் அவனுடைய முட்டாள் தனம் ஒழிந்து போய், புத்திசாலித் தனம் பளிச்சிடு கிறது. அந்தப் புலியிடமிரு ந்து தப்புவதற்கான ஏதாவது ஒரு யுக்தி நம் உள்ளத்திலே மின்னல் வேகத்தில் தோன்றுகிறது. அப்படித் தோன்றுகிற அந்தக் கணத்திலே யே நாம் அதைச் செயல் படுத்தத் தொடங்கி விடுகிறோம். அச்சத்தைத் துணிவுடைமை ஆக்கும் வழி என்னவென்று புரிகிறதல்லவா?

Leave a Reply