Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை அஞ்சலி, சென்னையில் பதுங்கியுள்ளாரா? அல்ல‍து பதுக்க‍ப்பட்டுள்ளாரா? போலீஸ் தீவிர விசாரணை

ஐதராபாத்தில் மாதாபூர் பகுதியில் உள்ள தஸ் பல்லா ஓட்டலில் இருந்து வெளியேறிய பின்னர் நடிகை அஞ்சலி 18 பேருடன் செல் போனில் பேசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. காலை 9. 15 மணிக்கு ஓட்டலை விட்ட வெளியேறியது முதல் 10.22 மணிக்குள் சாம்ஷாபாத் விமான நிலையத்தை அஞ்சலி சென்றடைந்தது வரை பற்றிய தகவல்களை ஆந்திர போலீசார் விலாவாரியாக திரட்டி வைத்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

அஞ்சலியின் அண்ணன் ரவிசங்கர் கொடுத்த கடத்தல் புகாரை தொடர்ந்து அவர் மாயமான விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதைத் தொடர்ந்து அஞ்சலியுடன் ஓட்டலில் தங்கியிருந்த அவ ரது சித்தப்பா சூரிபாபுவிடம் போலீசார் முதலில் விசாரணை நடத் தினார்கள். அப்போது அவர், காலையில் எழுந்து அஞ்சலியை எழுப்பிவிட்ட நான் குளிக்கச்செல்லுமாறு கூறினேன். அதற்கு அவர் நீங்கள் முதலில் குளித்துவிட்டு வாருங்கள் என்று சொன் னாள். இதன்படி குளிக்கச்சென்ற நான் திரும்பிவந்து பார்த்தபோது அவளை காணவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து ஓட்டலில் பொறுத்தப்பட்டிருந்த கேமராவை போலீ சார் போட்டுப்பார்த்தனர். அதில் முந்தைய நாள் இரவில் அஞ்சலி, சித்தப்பா சூரிபாபுவுடன் ஓட்டலுக்குள் செல்லும் காட்சிகளும் மறு நாள் காலையில் நீலக்கலர் டி.சர்ட் மற்றும் ஜீன்ஸ், பேண்ட் அணி ந்தபடி அஞ்சலி ஓட்டலை விட்டு வெளியேறும் காட்சியும் பதிவா கி இருந்தது.

இதைப்பார்த்த பின்னர் தான் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட் டனர். அவசரம் அவசரமாக அஞ்சலி வெளியில் செல்லு ம் காட்சி கேமராவில் பதிவாகி இருந்த தை பார்த்த பிறகு அவர் யாராலும் கடத் தப்படவில்லை என்பது மட்டும் உறுதி யாகி இருப்பதாக அம் மாநில போலீஸ் அதிகாரி சுதிர்பாபு தெரிவித்துள்ளார். இதன் பிறகு அஞ்சலியின் செல்போன் நம்பரை வைத்து அவர் எங்கு சென்றார் என்பது பற்றி துப்பு துலக்கப்பட்டது.

ஓட்டலில் இருந்து வெளியேறிய பின் னர் காலை 10.30 மணி வர தனது செல்போனில் இருந்து 18 பேரிடம் அஞ்சலி பேசியுள்ளார். சென்னை யை ச் சேர்ந்த சுமின் சாலமன் என்ற டாக்டரிடம் அடிக்கடி அஞ்சலி பேசியு ள்ளார். அண்ணா நகரில் வசித்து வரும் அவர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள். இதுதொடர்பாக சென் னையில் இருக்கும் அஞ்சலியின் சித்தி பாரதி தேவியிடமும் ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். டாக்டரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதே போல தனது சினிமா நண்பர்கள் பலரி டமும் அஞ்சலி பேசியு ள்ளார். இவர்கள் அனைவரிடமும் போலீசார் விசாரித்து வரு கிறார்கள். விமான நிலையத்துக்கு அஞ்சலி சென்ற நேரத்தில் அங்கி ருந்து பெங்களூர், சென்னைக்கு மட்டுமே விமானங்கள் சென்றுள் ளன. எனவே அஞ்சலி எங்கு சென் றிருப்பார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இதன் முடிவில் அவர் ஆந்தி ராவில் இல்லை என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்த னர்.

எனவே அஞ்சலி சென்னையில்தான் பதுங்கி இருக்க வேண்டும் என்றும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் போலீ ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அஞ்சலி மாயமான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையி ல், அவர் எங்கு சென்றார்? யாருடைய பிடியில் இருக்கிறார்? இதன் பின்னணியில் இருப்பவர் கள் யார்? என்பது போன்ற கேள்வி கள் அடுக்கடுக்காக எழுகின் றன. அஞ்சலி வெளியில் வந்தால் மட்டுமே இக்கேள்விகளுக்கு விடை கிடைக்கும். (மாலை மலரில் வெளிவந்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: