Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களுக்கேற்ற உள்ளாடை (பிரா) வகைகள்

திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயி டம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலை தான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகி விட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடு கிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிரா வை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப் பாக வாங்கி அணி ந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்க ளது எண்ணம்தான் இதற்கு காரணம். இப்படி, தப்பு தப்பாக பிரா வை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள்.

அதனால், என்னென்ன பிராக்கள் இன்றைய மார்க்கெட்டில் உள்ள ன? எப்படி சரியான பிராவை தேர்வு செய்து அணிவ து? சரியான அளவு தெரியாமல் அணிவது என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

முதலில் என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்…

டி-சர்ட் பிரா

இன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்து கொள் ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணி யும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக்கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கி றோம், முதல் கொக்கி யில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல் லது இரண்டாவது கொக்கியிலா? – இது போன்ற புள்ளிவிவரங்கள் பார்ப்பவர் கண் களுக்கு தெரிந்துவிடும். இந்த பிரச்சினை யை போக்க வந்ததுதான் டி&சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்துகொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.

டீன்-ஏஜ் பிரா

டீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில்தான் மார்பகங் களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்த நேரத்தில், சரியான பிராவை தேர்வு செய்து அணியவேண்டும். அந்த சரியான பிராதான் இது. எந்தவொரு பிட்டிங்கும், கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை டீன்-ஏஜ் வயது பெண்கள் அணி ந்து வந்தால் மார்பகங்களை இறுக்கா மல் இருக்கும். பிரா அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.

புல் போர்ட் பிரா

ழக்கமாக எல்லாப் பெண்களும் அணியும் பிரா இதுதான். இந்த வகை பிரா வாங்கும் போது, பிரா வின் கப் சைசானது மார்பகத் தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.

நாவல்டி பிரா

திருமணத்தன்று பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று பலவித மெட்டீரியல்க ளில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.

ஸ்போர்ட்ஸ் பிரா

விளையாடும் போது அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான பிராக்களில் தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்த லான உணர்வும் ஏற்படாது.

மெட்டர்னிட்டி பிரா

கருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக்காலத்தில் ஒரு பெண்ணின் மார்பகளவு அதிகரி த்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக் கும்.

நர்சிங் பிரா

கைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடு த்து விடலாம்.

கன்வர்டபுள் பிரா

பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது இது. தோள்களை மறைக்காத மேற் கத்திய நவீன ரக ஆடைகளை அணிந்து கொள்ளும் போது இதை அணிந்து கொள் ளலாம்.

இப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு.

அடுத்ததாக, சிறிய மார்பகத்தை பெரிதாக்க, பெரி ய மார்பகத்தை சிறிய மார்பகமாகக் காட்ட, தளர் ந்த மார்பகத்தை நார்மலாக்க உதவும் பிராக்கள்…

மினி மைஸர்

இவ்ளோ பெரியதாக இருக்கே… என்று தங்களது மார்பகத்தைப் பார்த்து வருந்தும் பெண்களுக்கு உதவும் பிரா இது. இது, மார்பகத் தை சற்று அழுத்தி அளவை சிறியது போன்று காட்டும். அவ்வளவு தான்.

பேடட் பிரா

அடுத்த பெண்களின் பெரிய மார்பகத்தைப் பார்த்து ஏங்கும் சின்ன மார்பகப் பெண்களின் ஏக்கத்தை தணிக்க உதவும் பிரா இது. சிறிய மார்பகத்தால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளான ஒல்லி பெண்கள் இந்த பிரா வை அணிந்து கொண்டால், தராளமாக நிமிர் ந்து நடக்கலாம். எங்களுக்கும் பெருசுதான்… என்று சொல்லாமல் சொல்லி வாலிபர்களை கிரங்க வைக்கலாம். உங்கள து பிரா சைஸ் 30 என்றால், 32 சைஸ் பேடட் பிரா வாங்கி அணிய வேண்டும்.

புஷ் அப் பிரா

சில பெண்கள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று இருப்பார்கள். இவர்களது மார்பகமும் பெரியதாகவே இருக்கும். இப்படிப்பட்ட மார் பகம் கொண்டவர்களுக்கு சீக்கிரமே மார்ப கம் தளர்ந்து போய்விடும். அவ்வாறு தளர்ந் து போன மார்பகத்தை நார்மலாக்க உதவுவது இந்த பிரா. இந்த பிராவின் அடிப் பாகத்தில் உள்ள ஜெல் நிரப்பப்பட்ட பேக், தளர்ந்த மார்பகங்களை சற்று நிமிர்த்த உதவுகிறது.

அண்டர் ஒயர் பிரா

இதுவும், புஷ்அப் பிராவைப் போன்று, தளர்ந்த மார்பகங்களுக்கு உதவுவதுதான். ஆனால், இதில் ஜெல் பேக் கிடையாது. இந்த வகை பிராவின் அடிப் பகுதியில் இருக்கும் ஒயர், தளர்ந்து போன மார்பகத்திற்கு கூடுதல் சப் போர்ட் கொடுக்கும். அவ்வளவே.

கியூட் வெட்டிங் பிரா

மேல்நாட்டு கிறிஸ்தவ திருமணங்களில் மணப்பெண், மார்பகத் திற்கு மேலே தோள் பகுதி முழுவதும் தெரியு மாறு விசேஷ ஆடை அணிந்திருப்பாள். அவ் வாறு ஆடை அணியும்போது இந்த வகை பிரா அணிவதுதான் பாது காப்பானது. இந்த பிரா பெரிய ஸ்ட்ராப்க ளுடன் இடுப்பு வரை நீண்டும் ஸ்லிப் போல இருக்கும். இந்தப் பிராவை அணிந்துகொண்டு க்ளோஸ் நெக் சுடிதாரோ, சல்வாரோ அணிந்து கொண்டா ல், அவ்வளவு அழகாக இருக்கும். தோற்றமு ம் கவர்ச்சியாகத் தெரியும்.

மெசக்டமி பிரா

கேன்சர் காணமாக மார்பகங்களை பறிகொடு த்த பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. இதில், கப்களுக்குள் சிலிகான் ஜெல்பேக்கு கள் இருக்கும். இதை அணிந்துகொண்டால், மார்பகம் இல் லை என்ற உணர்வே தெரியாது. அசல் மார்பகம் போன்ற தோற்றத்தையும், உணர்வையும் தரக்கூடியது இந்த பிராவின் தனிச் சிறப்பு. இந்த வகை பிராக்களை, ஆர்டர் செய்தால் மாத்திரமே வாங்க முடியும். விலை அதிகமாகவே இருக்கும்.

– thanks to aanthaireporter

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: