Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அபிநயம் – ஒரு பார்வை – வீடியோ

அபிநயம் :

நம் பாரம்பரியமான நடன கலையான பரதநாட்டியத்தில் அபிநயம் என்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும், அதை பற்றி இன்று அறிவோம்.

அபிநயம் என்பது கதாபாத்திரத்திற் கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சி களையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையி லோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த் தையினது கருத் தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களி னாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும். அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று உலக வழக்கு. இது லோக தர்மி எனப்படும். மற்றொ ன்று நாடகவழக்கு. இது உலக வழக்கிற்கு சற்று அப்பாற்பட்டு கலை வடிவத்திற்கு முத லிடம் அளிக்கும். இது நாடக தர்மி எனப்படும். உலக வழக்கிற்கு எடுத்துக்காட்டு உண்மை யான கண்ணீர். கண்ணீர் சிந்துவது போல் நடி ப்பது நாடக வழக்காகும். அபிநயத்தில் நடிப்பு, பாவம் பல்வேறு அங்க நிலைகள் போன்றவை ஆடுபவரின் மன எழுச்சிகளை உணர்த்தப் பயன் படுகி ன்றன.

பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் அபிநயிக்கப்படு கின்றன. அவையாவன:

1. ஆகார்ய அபிநயம்
2. வாசிக அபிநயம்
3. ஆங்கிக அபிநயம்
4. சாத்விக அபிநயம்

ஆகார்ய அபிநயம்:

அலங்காரம் மூலம் அபிநயித்தல் ஆகார்ய அபிநயம் எனப்படும். முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறுகி ன்றன. சிவனாக ஒருவர் ஆட வேண் டுமென்றால் அவர், சடாமுடி, பிறைச் சந்திரன், பாம்பு, புலித்தோல், நெற்றி யில் திருநீறு முதலான ஒப்பனைக ளைச் செய்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பனைகள் அவரைச் சிவனாக உணர்த்தும். இவ்வாறு அபி நயம் செய்வது ஆகார்ய அபிநயம் எனப்ப டும்.

வாசிக அபிநயம்:

பாடலுக்கேற்ப அபிநயிப்பது வாசிக அபிநயம் எனப்படும். இந்த அபிநயத்தி ற்குப் பாடல் முக்கியம். பாடற் பொரு ள் அபிநயிக்கப்படும். ஆடுபவரே பாட லைப் பாடி அபிநயிப்பார். தற்காலத் தில் வேறொருவர் பக்க இசை பாட ஆடுபவர் அதற்கேற்ப அபிநயம் செய்து ஆடும் பழக்கமும் நடை முறைக்கு வந்துள்ளது.

ஆங்கிக அபிநயம்:

உடல் உறுப்புகளால் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவது ஆங்கிக அபிநயம் எனப்படும். உடல் உறுப்புக ளுக்குத் தனித்தனிச் செய்கைக ள் உண்டு. இவற்றில் கைமுத்திரைகள் முதன்மையானவைகளா கவும், சிறப்பானவைகளாகவும் கொள்ளப் படுகி ன்றன. கைமுத்திரை என்பது விரல்க ளின் செய்கைகளாகும். பரத நாட்டியத் தில் ஒற்றைக் கை முத்திரைகளும், இரட்டைக் கை முத்திரைகளும் உள்ள ன. ஒற்றைக்கை முத்திரை தமிழில் பிண்டி எனவும், சமஸ் கிருதத்தில் அசம்யுதஹஸ்தம் எனவும் குறிப் பிடப் படுகிறது. இரட்டைக்கை முத்திரை தமிழில் பிணையல் எனவும், சமஸ்கிருதத் தில் சம்யுதஹ ஸ்தம் எனவும் குறிப்பிடப் படுகிறது. பாடலின் பொருளைக் கைமுத் திரை கள் காட்டுகின்றன. கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ள த்தின் உணர்வு செல்லும்.

சாத்விக அபிநயம்:

நவரசம் எனப்படும் ஒன்பது சுவைகளாகி ய பயம், வீரம், இழிப் பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய உணர் வுகளை கை முத்திரைகள், முக பாவம் போன்ற உடல் மெய்பாடு களால் அபிநயித்தல் சாத்விக அபிநயம் எனப்படும்.

அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவையாவன:

* வெட்கம் (ஸ்ருங்காரம் )
* வீரம்
* கருணை
* அற்புதம்
* சிரிப்பு (ஹாஸ்யம்)
* பயம் (பயானகம்)
* அருவருப்பு (பீபல்சம்)
* கோபம் (ரெளத்ரம்)
* அமைதி (சாந்தம்)

– பெண்கள் (Women) on facebook page

நாட்டியப்பேரொளி பத்மினி அவர்கள் தில்லானா மோகனாம்பாள் என்கிற திரைக்காவியத்தில் மறைந்திரு ந்து பார்க்கும் மர்மம் என்ன‍? என்று தொடங்கும் பாடலில் மிக அற்புதமாக பரதநாட்டியம் ஆடியிருப்பார். இதில் அற்புதமான பல‌ அபிநயங்களையும், நவ ரசங்களையும் அற்புதமான தனது முக பாவனைகளில் காட்டியிருப்பார்கள். இந்த பாடலை  இங்கு பகிர்வது பொருத்த‍ மாக இருக்கும் என்பதால், விதை2விருட்சம் இணையம் இங்கு பகிர்கிறது. பார்த்து உணருங்கள்.

Leave a Reply