Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிசேரியன் மூலம் குழந்தை பெறும் தாய்க்கு ஏற்படும் பக்க‍ விளைவுகள்

தற்போது சுகப்பிரசவம் என்பது குறைந்துவிட்டது. பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் பிரசவம் தான் நடைபெறுகிறது. பொது வாக இந்த மாதிரியான பிரசவம், குழந்தை பிறக்கும் போது சிக்கல் ஏற்பட்டால், தான் நடைபெறும். மேலும் சில அனுபவமுள்ள பெண் களும் சிசேரியன் பிரசவத் தையே சிறந்ததாக சொல்கின் றனர். ஏனெனில் சுகப்பிரசவத்தி ன் போது ற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலேயே தான்.
.
ஆனால் உண்மையில் சிசேரியன் பிரசவத்தின் போது அவ்வள வாக வலி தெரியாவிட்டாலும், அந்த மாதிரியான பிரசவத்திற்கு ப்பின் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பக்கவிளைவு களைப் பற்றி யாரும் யோசிக்கவில்லை. ஆம், சிசேரியன் பிரசவத்தை தேர்ந் தெடுத்தால், அதற்கு பின் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரி டும். அந்த பிரச்சனைகள் என்ன வென்று தெரிந்து கொள்ள, கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
.

* முதலில் சிசேரியன் பிரசவம் என்றா லேயே வயிற்றை கிழித்து, ஆப்ரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுப்பது தான். அவ்வாறு ஆப்ரேஷன் செய்வதா ல், வயிற் றில் தழும்பானது வாழ்நாள் முழு வதும் அப்படியே இருக்கும். பின் என்னதான் செய்தாலும் போகா து. அதுமட்டுமின்றி அவ்வாறு அடிவயிற்றில் ஆப்ரேஷன் செய்யும் போது, பிற்காலத்தில் வேறு ஏதாவது ஆப்ரேஷன் வயிற்றில் செய்ய வேண்டிய நிலை ஏற் பட்டால், அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
.
*சுகப்பிரவத்தை விட சிசேரியன் செய்து குழந்தை பெற்றவர்க ளுக்கு குறைந்தது 3 மாத ஓய்வா னது அவசியம். வேலை செல்லும் பெண் களுக்கு இது மிகவும் பிரச் சனை யாகி விடும்.  ஏனெனில் அலுவலகத்தில் மகப்பேறு விடுப்பு மூன்று மாதம் என்பதால், அதற்கு மேல் விடுப்பு எடுத்தால், சம்ப ளத்தில் பிடித் துக் கொள்வார்கள் என்பதை விட, குழந்தையுடன் அதிகமான நேர த்தை செலவழிக்க முடியாது.
.
* பொதுவாகவே தசையில் ஏதேனும் கடுமையான வெட்டுக்கள் ஏற்பட்டா ல், அந்த இடத்தில் குடலிறக்கம் என் னும் ஒருவித புடைப்பானது உண்டா கும். குறிப்பாக சிசேரியன் பிரசவத் திற்கு பின் இந்த மாதிரியான குடலிறக்கம் ஏற்படும். அதிலும் சிசேரியன் பிர சவத்திற்கு பின் சரியான ஓய்வு எடுக்கா விட்டால், இறுதியில் குடலிறக்கத்திற்கு உள்ளாகக் கூடும்.
.
* ஒரு முறை சிசேரியன் பிரசவம் மேற்கொண்டால், அடுத்த முறை சுகப்பிரசவம் ஏற்படாது என்பதில் லை. ஆனால் பெரும்பாலானோரு க்கு முதல் முறை சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் இருந்ததில் லை. மேலும் மருத்துவர்கள் இரண் டாம் முறையும் சிசேரியன் என்றா ல், இதற்கு மேல் குழந்தை வேண்டாம் என்று சொல்லிவிடு வார்கள். ஏனெனில் ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் சிசேரியன் செய்தால், பின் அதிகப் படியான பிதற்றல் ஏற் படும்.
.
*சிசேரியன் செய்தபின்னர் அடிக்கடி கடுமையான முதுகு வலியானது ஏற்படும். அதிலும் சிசேரியன் போது தையல்கள் போட்டிருப்பதால், ஒவ் வொரு முறை சிரிக்கும் போதும், இருமலின் போதும், தையல் போட்ட இடத்தில் ஒருவித அழுத்தம் மற்றும் வலியை உணர நேரிடும். இதனாலும் முதுகு வலி ஏற்படும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply