தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுக ளை நடத்தி, தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிரு க்கிறார்கள்.
நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப் பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர் ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.
நமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிலரோ, நரம்புக் கூட்டுப் பகுதிகளில் எதிர்ப்பு ஏற்பட்டு, செய்திகள் விரைவா கச் செல்வதற் குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர்.
இன்னும் சில விஞ்ஞானிகளோ, நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்களா கிய லேக்டிக் அமிலம் போன்ற உணர் ச்சிïட்டும் பொருட்கள் வெளியேற்றப் படு வதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம்தான் தூக்கமாகும் என்கின்றனர். இதையே நாம், களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோ ம்.
நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இணை ப்புகள் தடைப்படுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞா னிகள் கூறுகின்றனர்.
மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியே தூக்கத்தைக் கட்டுப்படு த்துகிறது. எனவே இது தூக்கத்தை உண்டாக்கும் ஓர் எந்திர மாகும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.
தூக்கம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசியமானது என்பதை நிரூபிக்க விஸ்கான்சின் மருத்துவப் பல்கலைக்கழகம் முதலில் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. அச்சோதனை யில் தெரியவந்த உண்மை, தொடர்ந்து தூக்கம் இல்லையென்றா ல் விலங்குகள் இறந்துவிடும். விலங்குகளால் தூக்கமில் லாமல் அதிகபட்சம் 7 முதல் 30 நாட்கள் வரைதான் உயிர்வாழ முடியும்.
மனிதர்களுக்கும் தூக்கம் மிக வும் அவசியம். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதன் அன்றாடம் 8 மணி நேரமாவது நன்றாகத் தூங்க வேண்டும் என்று கண்டுபிடித்துக் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் புதுப்பிக்கப்படுவதற் கும் அதிக நேரம் தூங்க வேண்டும். மூளைக்கு வேலை கொடுப்பவர் கள், உடலுக்கு வேலை கொடுப் பவர்களைவிட சற்றுக் குறைவாக த் தூங்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் தினசரி நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் தூங்குவார்.
நல்ல தூக்கத்துக்கு…
‘அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கி ரொம்ப நாளாச்சு’ என்பது பலரின் புலம்பல். ஆனால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கமின்மைக்கு நாம் தான் காரணம். நல்ல தூக்கத் துக்கு நிபுணர்கள் வலியுறுத்தும் விஷயங்கள்…
தினமும் இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்தை உறங்கச் செல்லும் நேர மாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
எளிதில் ஜீரணமாகும் மிதமான உணவே இரவில் நல்லது. மாறாக, வயிறு முட்ட அடைத்தா லோ, ஒவ்வாத உணவைச் சாப் பிட்டாலோ, வயிறு ‘கடமுடா’ பண்ணும். தூக்கம் தொலையும்.
டி.வி. கணினி, மடிக்கணினி, செல்போன் என்று மின்னணுத் திரைகளின் முன் அதிக நேரத்தைக் கழிக்கக் கூடாது. அவை தூக்கத்தைப் பாதிக்கும். தூங்க ப் போகும் சில மணி நேரத்துக்கு முன்பே இவற்றுக்கு விடை கொடுத்துவிட வேண்டும்.
படுக்கையறை, படுக்கைச் சுத்தம் முக்கியம். அமைதியும் அவசிய ம். மின்விசிறி கூட சற்று அதிகம் சத்தம் போட்டால் தூக்கம் கெடும்.
எல்லாவற்றிலும் முக்கியம், ‘நாளைய கவலைகளை நாளை பார்த்துக் கொள் வோம்’ என்ற எண்ணம். தேவையற்ற குழப்பமான எண்ணங்கள், தூக்கத்தைத் துரத்தும்.
(இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!