Wednesday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், செய்ய‍ப்பட்டுள்ள‍ மாற்றங்கள்!

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், புகைப்படம் ஒட்டுவதிலும், முகவரி இருக்கும் இடத்திலும் மாற்றங்கள் செய்யப் பட உள்ளன. மாற்றம் செய்யப்பட்ட பாஸ் போர்ட்டுகள், கடந்த 9ஆம் தேதி முதல் அம லுக்கு வந்துள்ள‍தாக  சென்னை மண்டல பாஸ் போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக, பாஸ் போர்ட்டின் இடது பக்க உள் அட்டையில், பாஸ்போர்ட் வைத்திருப்ப வரின் பெயர், அவருடைய தேசிய இனம், பிற ந்த தேதி ஆகிய குறிப்புகளும், அவருடைய புகைப்படமும் அமைந்திருக்கும். அதே போல் , வலது பக்க உள் அட்டையில், பாஸ் போர்ட் வைத்திருப்பவரின் முகவரி போன்ற குறிப்பு களும் அடங்கி இருக்கும். ஆனால், தற்போதைய புதிய நடை முறைப்படி, இடது உள்பக்கத் தில் இருக்கும் அனைத்து குறிப்புகளும், புகைப் படமும், 2வது தாளில், “லேமி னேட்’ செய்யப்படும். அதேபோல், வலது பக்க உள் அட்டையில், காணப்படும் அனை த்து குறிப்புகளும், 35வது பக்கத்தில், லேமி னேட் செய்யப்படும்.

இது குறித்து, மண்டல பாஸ்போர்ட் அலு வலர், செந்தில் பாண்டியன் கூறியதாவது: பழைய முறையில், பாஸ்போர்ட்டை அடிக் கடி பயன்படுத்துவதால், அதன், இடது உள் பக்கத்தில் உள்ள புகைப்படம் அழுக் காகிறது. மேலும், பாஸ் போர்ட் வைத்திருப்பவர் பற்றிய குறிப்புகள், தெளிவாக தெரியாத சூழ்நிலை ஏற்படுகிறது. பாஸ்போர்ட்டின் உள் அட்டையை பிரித்து, புதிய புகைப் படத்தை ஒட்டும் அபாயமும் உள் ளது. எனவே, பாதுகாப்பு நடவடி க்கைகளுக்காக, புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. இவ் வா று அவர் கூறினார். இம்மாற்றங் கள், நாளை முதல், அமலுக்கு வருவதால், புதிய மாற்றங்கள் அடங்கிய, 50 ஆயிரம் பாஸ்போர்ட் கள், நாசிக்கிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்க ப்பட்டுள்ளன.

– நமது தினமலர் நிருபர்

Leave a Reply