Tuesday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களுக்கு ஏற்படும் எலும்பரிப்பு (osteoporosis) நோயும், தீர்வுகளும்

பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிற து. மாதவிலக்கு நின்ற பெண்க ளுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும் போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பரிப்பு நோய் எந்த அறிகுறி யையும் வெளிப் படுத்திக் கொண்டு வெளி யாவதில்லை. எலும்புகள் எலும்பரிப்பால் பலகீன மடைந்திரு க்கும் போது பலமாக இருமினால்கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால்கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண் களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதயநோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளை விட ‘எலும் பரிப்பு நோய்’ தான் அதிகள வில் ஏற்படு கிறது என்பது அதிர்ச்சிய ளிக்கும் ஒரு புள்ளி விவரம்.

இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறா ள். ஆண்களைவிட பெண் கள் இந் நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண் களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களைவிடக் குறைவு. மேலும் மாத விலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப் படைவதும், பலகீனம் அடை ந்திருப்ப தும் முக்கிய காரணம்.

35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சியும், மொத்த எடையும் பெண் களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன் பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சம நிலை அடைகிறது. அதுதான் எலும் பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ் வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண் களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரி க்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறை யும் அபாயத்தை எட்டு கிறாள். இந்நிலையில் எலும்பு முறிவு கள் வெகு சுலபமாக ஏற் படுகிறது.

எலும்புகள் கல் போன்று உறுதி கொண்டவை என நாம் நினைக்கி றோம். இது ஒரு தவறான கருத்து. பல் வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குத லுக்கு இணக்கமாகி சுண் ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுக் குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடு கிறது.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ அளவு குறைவது ம் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.

சுண்ணாம்புச் சத்து சமநிலையில் எலும் பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளை யும் தவிர்க்க இயலும். அதிலும் பெண் களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும்.

மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தை கட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.

நோயைத் தடுக்கும் முறைகள் :

நடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட் ரோஜன்’ அளவு குறை வதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.

சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லை களையும் தவிர்க்க இயலும்.

மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடு க்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசி யம் தேவை.

ஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத் த வேண்டும். உண வில் கால்சியம், வைட்டமின் D சரியான அளவில் இருக்க வேண்டும். போதிய உடற் பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாத விலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாத விலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரி செய்து கொள்ள வேண்டும். ஈஸ்ட் ரோஜன் குறையும் பண்களுக்கு எலும்பரிப்பு நோய் ஏற்படுவது போல Testosterone அளவு குறைந்தால் ஆண்க ளுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.

மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply