Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தையல்காரக் குருவி பற்றிய சில சுராரஸ்யத் தகவல்கள்:-

இதை ‘Tailor bird’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தையல் காரக் குருவி, குடும்பம் பெருக்கும் காலத்தில் ஆண் தையல் காரக் குருவியின் வால் இறகுகளில் நடு இரண்டு இறகுகள் நீண்டு வளரும், கிட்டத் தட்ட இரு மடங்காக.

இந்தக் குருவி தன் கூட்டினை எப்படி அமைக்கும் தெரியுமா?

சற்றே அகலமான இலயினைத் தேர்ந் தெடுத்து அதனை பறந்து கொண்டிரு க்கும் போதே வளைத்துப் பிடித்துக் கொண்டு சிலந்தி வலையினைக் கொண்டு சுற்றி ஒட்டும். பின் அவ்வாறு தயார் செய்த ஃபனல் போன்ற குழாய் உள்ளே பஞ்சினை க் கொண்டு வந்து வைக்கும். தனது கூறிய அலகினைக் கொண்டு இலயின் விளிபில் சிறு துவாரங் கள் செய்து அத்துவாரங்களின் வழியே பஞ்சினை வெளியே இழுத்து அதை பின் தட்டையாக் கு ம். இவ்வாறு செய்வதால் ‘ரிவெட்’ அடித்தாற் போல கூடு தயார் ஆகி விடும். ஃபனலின் அடிப் பாகத்தில் பஞ்சினாலும், காய்ந்த மெல்லிய வேர்கள் நுனிப்புல் இவற்றாலும் குழிவாக மெத்தை தயார் செய்யும்.

இவ்வாறு தயார் செய்த மெத்தையில் 2 முதல் 6 வரை வெளிர் நீலக்கலரிலான முட்டைகளை இடும். தாய் தந்தை இரண்டுமே மாறி மாறி அடை காப்பதிலும் பின்னர் குஞ்சுகள் வெளிவந்தவுட ன் அவற்றுக்கு உணவு அளிப்பதிலும் ஈடு படும்.

தையல்காரக் குருவிகள் பறக்கு ம் போது வலுவு அற்றவை ஆகக் காணப்படும். ஆனால் குரல் எழுப்பும்போதோ வலுவு எங்கிரு ந்து வருமோ, அதனைப்படைத்த ஆண்டவனுக்குத்தான் தெரியும் அந்த ரகசியம்.

தையல்காரக்குருவிகள் தூங்கும்போது பார்பதற்கு வெகு அழகா க இருக்கும். இரு பறவைகளும் அருகருகே ஒரு கிளையில் உட்கார்ந்து கொண்டு உடலில் உள்ள அத்தனை இறகுகளையும் வெளித் தள்ளிக் கொண்டு (puffing up the feathers) ஒரு பூப்பந்து போல செய்துகொண்டு தூங்கும். இது எதற்காக என்று தெரியுமா? குளிரின் தாக்கத்திலிருந்து தப்பிக்கத் தான்.

– Karthikeyan Mathan on facebook

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: