Saturday, July 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!

ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும் என்பது, விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.வருமான வரி கணக்கு தாக் கல் செய்ய, ஒவ்வொரு வருமான வரி சந்தாதாரருக்கும், நிரந்தர கணக்கு ஒதுக்கப்படு கிறது. இந்த எண் அடிப்படை யில், பான் கார்டு வினியோகிக் கப்படுகிறது.

குடும்ப அட்டை:பான் எண் மற் றும் கார்டு பெறுவதற்கு, அடை யாளம் மற்றும் முகவரியை உறுதி செய்ய, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத் தின் முதல் பக்கம், குடும்ப அட்டை ஆகியவை அடையாளத்திற்கும், முகவரிக்கு, சமையல் காஸ் சிலிண்டர் வினியோக ரசீது, தொலைபேசி ரசீது போ ன்றவை முக்கிய ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும்.

இவற்றை எல்லாம் தவிர்க்கும் வகையில், அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும் வகையில், நாடு முழுவதும் ஒருங்கிணை ந்த அடையாள அட்டை, “ஆதார்’ எண்ணை அறிமுகப்படுத்த, மத்திய அரசு முடிவு செய் தது. பயோ மெட்ரிக் முறையில், இந்திய குடி மகன் ஒவ்வொருவரின் அடையாள விவரங்களை உள்ளடக்கி, புகைப் படம், கைரேகை ஆகியவற்றை பதித்து, “ஆதார்’ எண் வழங்க, மத் திய அரசு முடிவு செய்தது. இதற் காக, தேசிய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் உருவாக்கப் பட்டது. ஒவ்வொரு மாநிலமாக, ஒவ்வொரு கட்டமாக, ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது.

முக்கிய ஆதாரம்: குடிமகன்கள் ஒவ்வொருவர் பற்றிய முழு விவர ங்களை மின்னணு முறையில் பதிந்து, ஆதார் எண் வழங்கும் பணி, விரைவுப் படுத்தப்பட்டு உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில், ஆதார் எண் வழங்கப்பட்டு வரு கிறது. இதன் காரணமாக, இனிமேல் பான் கார்டு பெற, ஆதார் எண் முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. பான் கார்டு பெறுவதற்கு, அடையாளம் மற்றும் முகவரிக்கு ஆதாரமாக, எந்தெ ந்த ஆவணங்களை ஆதாரமாக எடுத் துக் கொள்ளவேண்டும் என்ற பட்டிய லி ல், இனிமேல், ஆதார் எண்ணை சேர்க்க முடிவு செய்யப்பட் டுள்ளது.

இது குறித்து, நிதி அமைச்சகத்துக்கு, தேசிய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, விரைவில், இதற்கான அறிவிப்பை, மத்திய அரசு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வரி ஏய்ப்பு:ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை பெற்று, பலர் முறைகேடில் ஈடுபடுவதாக அடிக் கடி புகார்கள் எழுந்துள்ளன. இதை யடுத்து, ஆதார் எண் முறையாக கட்டாயமாக்கினால், பான் கார்டு எளிதாக பெற முடியாது என்ற நிலை ஏற்படும்.

பயோ மெட்ரிக் முறையில் பான் கார்டு கள் வழங்கும் முறையை, 2006ல் நிதி அமைச் சகம் அறிமுகப்படுத்தியது. இது வரை, 16.49 கோடி பான் கார்டுகள் வழங் கப்பட்டு ள்ளன. வருமான வரி ஏய்ப்பு செய்யவும், பினாமி பெயரில் சொத்துக்களை வாங்க வும், சிலர், பல பெயர்களில் பான் கார்டு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னை, ஆதார் எண் முழுமையாக வழங்கப்பட்ட பின், குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

– ஆகாய மனிதன்!

Leave a Reply