1983 ஆம் ஆண்டு, தமிழில் வெளியான மலையூர் மம்பட்டியான் திரைப் படம் ஆகும். இத்திரைப்படத்தை ராபர்ட் ராஜசேகர் இயக்கி யுள்ளார். இதில் மலை யூர் மம்பட்டியானாக தியாக ராஜனும், அவருக்கு ஜோடி யாக சரிதாவும் நடித்துள் ளனர். மேலும் செந்தா மரை, சங்கிலி முருகன், கவுண்டமணி, செந்தில், முத்து பாரதி, ஜெய மாலினி “சில்க்” ஸ்மிதா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளன ர். கங்கை அமரன் உட்பட வாலி, வைரமுத்து ஆகி யோரது பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டி யான் என்ற மனிதனின் உண்மைக்கதை ஆகும். ஆம்! சந்தன கடத்தல் மன்னன் வீரப்ப னைப்போல, சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங் கி, மக்களி டம் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தவன்தான் இந்த மம்பட்டியான். இவனது வாழ்க்கை யைத்தான் அற்புதமாக சித்தரித் துள்ளார். இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
யூ டியூபில் கண்டெடுத்த வீடியோ இது!
இப்படத்தில் மீண்டும் ரீமேக் ஆகி, மலையூர் மம்பட்டியானாக நடி த்த தியாகராஜனின் மகன் பிராசந்தும் மீரா ஜாஸ்மினும் ஜோடி யாக நடித்து சென்ற ஆண்டு வெளிவந்தது என்பது நினைவிருக் கலாம்.