Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தவன் ஒரு தமிழன்!

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்…..

த்தனையோ வரலாற்று உண்மை கள் உலகில் மறைக்கப் பட்டிருப் பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட் பார் அற்றதால் விழுங்கிக் கொண்டி ருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதி காரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச் செய்தவன் அடி பணிய வைத்த வன் ஒரு வன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ?

அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர் களே! அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பக ராமனை எத்தனை பேர் அறிவீர்கள்?

ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங் கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவி யது.

இந்தியக்குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரி த்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திர போஸ் என்று தான் பலர் கருதுகின்ற னர்.

அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவ த்தை உருவாக்கிய பெருமை செண்பக ராமன் என்ற ஒரு தமிழனுக் குத்தான் உரிய தென்றால், ஆச்சரியமாக இருக்கி றதல்லவா? யார் அந்த செண்பக ராமன் என்று பார்ப்போம்.

பாரத மாதாவின் அடிமை விளங்குக ளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோ ஷத்தால் குமுறிக் கொந்தளி த்துக் கொண் டிருந்த காலம் அது. பால் மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர்.

பாரதத்தைக் காக்கப்புறப்பட்ட பல்லாயிரக்கணக்கான பள்ளி மாண வர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பக ராமன். இவனது திறமை களையும் ஆற்றலையும் கண்டு வெள்ளைய ர்கள் வியந்து போனார்கள்.

சிறிது காலம் தலைமறைவாக வாழ வேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனி க்கு பயண மானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந் த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந் தார்கள்.

ஜேர்மனியிலே உயர் கல்விகளை யெல் லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக் கொண் டார். அறிவிலே சிறந்து மிளிரத் தொடங்கினார். ஜெர்மனியச் சக்கர வர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்ப னாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விள க்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பக ராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவ மோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையா தென்ற நிலைமை உருவாகியது.

தாயகத்தை விட்டு வெளியேறிய தன் நோக்கமே, இனிமேற்தானே நிறை வேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற் பொழிவுகளைத் தொட ர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வ தேசக் கமிட்டி” ஒன்று நிறுவப் பட்டது.

டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவை ப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்க ளைத் தவிடு பொடியாக்கிய செண்பக ராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன் படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடு களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவ தற்காக டாக்டர் செண்பக ராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா வை நிர்மாணிக் கப் போகும் புரட்சிக் குரலாகியது.

ஹிட்லர் மன்னிப்பு கோரல்

ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆண வத் தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்க ளையும் பற்றி இழிவாகப் பேசினார்.

‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றா ராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன்.

இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர் களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக் கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையை யும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார்.

வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தர வேண்டும் என்று வாதாடினார் பிடிவாத க்காரரான டாக்டர் செண்பகராமன். அதன் படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரி னார்.

முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தி யர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார்.

போரில் தனக்குச் சாதகமாக இந்தியர் களைப் பயன்படுத்த ஜெர் மனி முயற்சி த்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத் தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடு தலை க்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர்.

ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்க மல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளி வாக எடுத்து விளக்கி இருந்தார்.

இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர் படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப் பட்டது.

ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனி க்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப் படை ஒப்புக் கொண்டது. செண்பக ராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதி நுட்பத்தைப் பாராட்டி
,
“சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பக ராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்ப லின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கி னர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னை யிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டை யைத் தாக்கி,

பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கி றீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறி யியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பக ராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட் டிஷார் நடுங்கியதற்கும் காரண பூதர் !

ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற் றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போ தும், சென்னையிலுள்ள இதே கோட் டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்!

இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றா ர். தன் இறுதி லட்சிய த்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பக ராமன்.

இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத் தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில் கரைத்து விடு,

மறுபகுதியை நாஞ்சில் நாட்டின் வளமிக்க வயல்களில் தூவி விடு. அதோடு என் உயிர் பிரிந்த பின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற்கண்ட வேண் டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.

நன்றி : தமிழ் கருத்துக்களம்

6 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: