Saturday, February 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மருத்துவத்தில் எண்டோஸ்கோப்பியின் சிறப்பான பங்களிப்பு – வீடியோ

மருத்துவத் துறையில் எண்டோஸ்கோப்பியின் வரவு பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஜீரண நலத் துறையில் அதன் பங்கு அளவிட முடியாதது.  கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை எல்லாம் இன்று நிஜமாக்கி வருகிறது எண் டோஸ்கோப்பி, உடலுக்குள்ளே உள்ள ரகசியங்களை எல்லாம்  வெளிப் படுத்தி, மனித இனத்துக்குப் பெரும் உதவி செய்து வருகிறது.

தொடர் வயிற்றுவலி என்றால்கூட அறுவை சிகிச்சை செய்தே அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் நிலை 20 ஆண்டுகளு க்கு முன்பு வரை இருந்தது. ஆனால் இன்று, எள் அளவு பிரச்னை யைக் கூட எண்டோஸ்கோப்பி காட்டிக் கொடுத்து விடுகிறது.

முன்பு, குடல்புண் போன்ற சாதா ரண நோய்களுக்கு அரை அடி நீளத்துக்கு வயிற்றைக் கிழித்து, அறுவைச் சிகிச்சை செய்ய வேண் டியிருந்தது. இதனால் பெரிய காயம்  ஆற அதிக நாள்கள் ஆனது. பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டிய ஆபத்து இருந்தது. நீண்ட நாள்களுக்குக் கட்டாய ஓய்வு , காயத்தில் இருந்து, சீழ் வடிதல், குடலிறக்கம் ஆகிய துன்பங் களை நோயா ளிகள் சந்தித் தனர். இவையனைத்தும் தற்போது பழங்கதைகள் ஆகிவிட்டன.

ஜீரண மண்டல நோய்கள் பலவற்று க்குத் தீர்வு காண உதவும் எண்டோஸ் கோப்பி கருவியின் பயன்பாடு குறித்து விரிவான அலசல் :

எண்டோஸ்கோப்பி என்றால் என்ன?

எண்டோ என்றால் உள்ளே, ஸ்கோப் பி என்றால் நோக்குதல். எனவே இது இரைப்பை குடல் உள்நோக்கி என்று தமிழில் அழைக்கப்படுகிற து. ஒரு மீட்டர் நீளத்தில் குடலின் நெளிவுகளுக்கு ஏற்ப வளைந்து, நெளிந்து குறுகிச்சென்று குடலின் பாகங்களைப் பன்மடங்கு மிகைப்படுத்திக் காண்பிக்கும் ஒரு நூதனக் கருவி. இக் கருவியி ன் நுனியில் ஒளி வருவதற் கான ஏற்பாடும், சுருங்கி இருக்கும் குடலை விரிவடையச் செய்ய காற்றுச் செலுத்தும் ஏற்பாடும் செய்ய ப்பட்டுள்ளன. குடல் பகுதி யில் புற்றுநோய்  எனச் சந்தேகப் படும் இடங்களில் சதைப் பரிசோதனை செய்வதற்கான அமைப் பும் உள்ள நுண்ணிய கருவி இது. இக்கருவியை வாய் மூலமாக வும், ஆசனவாய் மூலமாகவும் செலுத்தி உள் பாகங்க ளைக் கண்டறிய முடியும்.

பயன்படுத்தும் உறுப்புகளைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களில் எண்டோஸ்கோப்பி அழைக்கப்படுகிறது. பெருங்குடலைப் பரி சோதிக்கும் கருவியை, கொலோனோஸ்கோப்பி  (Colonoscopy) என்கிறோம். சிறுகுடலைப் பரிசோதிக்கும் கருவியை எண்ட்ரோ ஸ்கோப்பி (Endoscopy) என்றும் உணவுக்குழாய் இரைப்பையை ப்  பரிசோதிக்கும் கருவியை எசோ பாகோ கேஸ்ட்ரோ டியோ டெனோ ஸ்கோப்பி (Esophago Gastro Duodenoscopy) என்றும் அழைக்க ப்படுகிறது.  எண்டோஸ் கோப்பி கருவி மூலம் இரைப்பை யின் உள்பகுதியை 5 நிமிடங்களி ல் அலசி ஆராய்ந்து விட முடியும்.

எண்டோஸ்கோப்பி மூலம் என்னென்ன நோய்களைக் கண்டு பிடி க்க முடியும்?

உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், உள் சவ்வு (Mucosa) ஆகியவற்றில் ஏற்படும் அனைத்து நோய்களையும் கண்டுபிடிக்க முடியும்.

குறிப்பாக, உணவுக் குழாய் புற்றுநோய், உணவுக் குழாய் அமில அரிப்பு, இரைப்பை மேலேற்றம், இரைப்பைப் புண், இரைப்பைப்புற்றுநோய் ,  குடல் புண், ரத்த வாந்திக்கா ன  காரணம், குடல் தசை வளர்ச்சி, பெருங் குடல் அழற் சி, மூல நோய், பெருங்குடல் புற்று நோய் போன்ற நோய்களைக் கண்டு பிடித்து, சிகிச்சை அளிக்க முடியும்.

எண்டோஸ்கோப்பி பரிசோதனை யாருக்குத் தேவை?

தீராத வயிற்று வலி, உணவு விழுங்குவதில் கஷ்டம், நெஞ்சு எரி ச்சல், புளிச்ச ஏப்பம், பசியின்மை, தீராத வாந்தி, தீராத வயிற்றுப்போ க்கு, எடை குறைதல், இதுதவிர  பாரம் பரியத்தில் யாருக்காவது வயி ற்றுப்புற்றுநோய் இருந்தால் அவர் களது வாரிசுகள், ரத்த வாந்தி, நீண்ட காலமாக மது, சிகரெட், புகையிலை பயன்படு த்துபவர்கள், மலச்சிக்கல்  உள்ளவர்கள், மலத்தில் ரத்தம் தென் படுபவர்கள் போன்றவர்களுக்கு எண் டோஸ்கோப்பி பரிசோத னை அவசியம்.

சிறுகுடலைப் பரிசோதிப்பதற்கான வீடியோ எண்ட்ரோஸ்கோப்பி (Video endoscopy) என்ற கருவி உள்ளது. இக்கருவி மூலம் சிறு குடலின் பாகங்களை  நேரடியாக ஆய்வு செய்து சிகிச்சை அளிக்க முடியும்.

எண்டோஸ்கோப்பி மூலம் செய்யும் சிகிச்சை முறைகள் யாவை?

கல்லீரல் சுருக்க வியாதி (Cirr hosis), குடல் புண் (Duodenal Ulcer) ஆகியவற்றால் ஏற்படும் ரத்த வாந்தி, ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த எண்டோஸ்கோப்பி உதவியுடன்  பேண்டிங், ஸ்கிலி ரோதெரபி, குளு (பசை) போன்ற சிகிச்சைக ளைச் செய்ய முடியும்.

உணவுக் குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எண் டோஸ்கோப்பி மூலம் செயற் கை உணவுக்குழாய் (Metallic Stent) பொருத்த முடியும்.

உணவுக்குழாயில் ஏற்பட்ட அடைப் பை, பலூன் மூலம் விரிவடை யச் செய்து (Balloon Dilatation) சிகிச்சை அளிக்க முடியும்.

பித்தக்குழாய் கல் (Bile Duct Stone) மற்றும் புற்றுநோயால் ஏற் படும் ‘அடைப்பு மஞ்சள் காமாலைக்கு ‘எண்டோஸ்கோப்பி அறு வை சிகிச்சை மூலம் தீர்வு  காண முடியும். அதாவது ணிஸிசிறி மூலம் பித்தக் குழாயில் கற்களை நீக்க முடியும். பித்தக்குழாய் புற்றுநோய் சுருக்கத்துக்கு, செயற்கை உலோகக் குழாய் பொருத் தலாம்.

தவறுதலாக, நாணயம், ஹேர் பின், குண்டூசி, மீன்முள், எலும்புத் துண்டு, கோலிக்குண்டு, கம்மல் போன்ற வற்றை விழுங்கி விடும் நிலை யில், அவற்றை அறுவை சிகிச்சை யின்றி எளிதாக எண் டோஸ்கோப்பி மூலம் எடுக்க முடியும்.

கணையக் கற்கள் அகற்றுதல், கணையத்தைச் சுற்றி நீர் கோர்த் திருந்தால் அதை வடிப்பது போன்றவற்றுக்கு எண்டோஸ்கோப்பி உதவும்.

எண்டோஸ்கோப்பி முறை சிகிச்சை பெறுவதற்கு செலவு அதிக மாகுமா?

பழைய முறையில் அறுவை சிகிச் சை செய்யும் நிலையில் மருத்துவ மனையில் 10, 15 நாட்கள் வரை தங்க வேண்டியிருக்கும். மருத்துவ மனைச் செலவு ஒரு பக்கம், அதிக  நாட்கள் மருத்துவ மனையில் தங்கு வதால் பொன்னான மனித நாட்கள் விரயமா வது மற்றொரு பக்கம், நோயாளியின் அன்றாடப் பணிகள் பாதிக் கப்படுவதோடு அவருக்கு  உதவிக்கு வரும் உறவினர் களின் வேலை களும் பாதிக்கப்படும். எண்டோஸ்கோப்பி அறு வை சிகிச்சைக்கு ஓரிரு நாட் கள் மட்டுமே தங்கினால் போது ம். இதனால் மொத்தச்  செலவு எனக் கணக்கிட்டால் எண்டோ ஸ் கோப்பி சிகிச்சைக்கு ஆகும் செலவு குறைவு தான்.

எண்டோஸ்கோப்பி மூலம் சிகிச் சை அளிப்பதற்கு உரிய பயிற்சி தேவை. உரிய பயிற்சி யும் நிபுண த்துவமும் இருந்தால்தான் எண் டோஸ்கோப்பி மூலம் சிறப்பாக சிகிச்சை  அளிக்க முடியும்.

எண்டோஸ்கோப்பி சிகிச்சையால் பலன் என்ன?

முன்பெல்லாம் அறுவைசிகிச்சை முறையில் வயிற்றைத் திறந்து பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. 7 முதல் 10 நாள்கள் வரை மருத்துவ மனையில் தங்க வேண்டி யிருந்தது. மயக்க மருந்து கொடுக் காமல் அறுவை சிகிச்சை செய்வது கடினம். நவீன சிகிச்சை முறையில் குறிப்பாக எண்டோஸ் கோப்பி முறையில் பல நன்மைகள் உள்ளன.  வயிற்றைக் கிழிக் காமல் வாய் வழியாக வோ ஆசன வாய் வழியாகவோ கருவிக ளைச் செலுத்தி சிகிச்சை அளிக்க லாம்.

தையல் இல்லை

ரத்த சேதம் மிகக்குறைவு

மயக்க மருந்து கொடுக்கத் தேவை யில்லை.

ஒன்று அல்லது இரண்டு நாள்கள் மட்டுமே மருத்துவமனையில் தங்கினால் போதும்.

எண்டோஸ்கோப்பி ஜீரண நலத்துறையின் புரட்சி என்பது வெறும் வார்த்தை அலங்காரத்துக்காகச் சொல்லப்பட்டது அல்ல. எண் டோஸ்கோப்பியின் வருகைக்குப் பின்  புற்றுநோய் ஆரம்ப நிலை யிலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட் டன. எனவே, எண்டோஸ்கோப்பி ஒரு நாட்டின் சமூக, சுகாதார மேம்பாட்டுக்கு  பெரிதும் உதவிகரமாக உள்ளது.

நன்றி – தமிழரின் சிந்தனைக்களம்

எண்டோஸ்கோபி பரிசோதனையின் போது குடலின் உள் பகுதி எப்படி இருக்கும் என்பதையும், குடலில் எந்தவிதமான நோய்க ளும் இல்லை என்பதையும் காட்டும் வீடியோ இதோ . . .

எண்டோஸ்கோபி பரிசோதனையில், குடலின் உள்ளே உள்ள புற்று நோய்க் கட்டி இருப்ப‍தை காட்டும் வீடியோ இதோ

One Comment

  • P Ramachandran

    vilakkangal miga nandraga irukkindrana. Maruthuvar mulam kidaikkatha thagavalgalai pagirnthalithamaiku mikka nandri

Leave a Reply

%d bloggers like this: