Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லஷ்மணனை சந்தேகித்த‍ சீதாதேவி

இதே சீதாதேவி, உத்தமமான லக்ஷ்மணரை எப்படியெல்லாம் தனது சொல் அம்புகளால் குத்திக்கிழித்தாள் என்பதை கீழே உள்ள‍ பத்திகளை, நீங்கள் படித்து தெரிந்து கொள்ள விதை2 விருட்சம் இங்கே பகிர்கிறது.

பாணத்தால் தன்னை மாய்த்த ராமரைப் பழிவாங்கும் நோக்கத் தோடு, மாயாவி மாரீசன் “சீதா!” “லக்ஷ்மணா”! என்று ஸ்ரீ ராமரைப் போலவே அபயக்குரல் எழுப்பி இறந்து போனான். இந்த அவலக் குரலைக் கேட்டு, தனது கணவனான ராம பிரானுக்கு என்ன‍ நேர்ந்த்தோ தெரிய வில்லையே என்று பயந்துபோன சீதா தேவி, லஷ்மணரிடம் ராமரைக் காப்பாற்றி, அவரை அழைத்து வரும் படி கட்ட‍ளையிட்டார்.

ஆனால், லஷ்மணனோ தனது தாயார் ஸ்தானத்தில் இருக்கும் தனது அண்ணியை தனியாக கானகத்தில் விட்டு செல்ல‍ மனமி ல்லாததாலும், தனது அண்ண‍ன் ஸ்ரீ ராம்பிரானின் வீரத்தின் மீதிருந்த அதீத நம்பிக்கையாலும், சீதா தேவியின் கட்ட‍ளைக்கு கீழ் படிய மறுத்து,

சீதாதேவயிடம் ஸ்ரீராமரை வெல்ல மூவுலகத்திலும் யாராலும் முடியா து, இந்த அபயக் குரல் மாயமானது, கலங்க வேண்டாம்! என்று எவ்வள வோ எடுத்துக் கூறினான். இவனது சமாதானத்தை விரும்பாத  சீதாதேவி, லக்ஷ்மணனின் விசுவாசத்தையே சந்தேகித்து அவரை , “நல் நடத்தையற்றவனே, குலத்துரோகியே, நீசனே என்னை அடைய வேண்டும் என்ற கெட்ட நோக் கத்தோடு ராமரைப் பின் பற்றி வரும் உனது எண்ணமோ, பரதனின் சூழ்ச்சி யோ ஈடேறப் போவதில்லை. ராமரை யன்றி நான் வேறு யாரையும் காலால் கூடத் தீண்ட மாட்டேன்” என்று பழித்துப் பேசி நோகடிக் கிறாள்.

நெஞ்சைப் பிளக்கும் இப்படிப்பட்ட வார் த்தைகளை சசிக்க முடியாத லக்ஷ்மண ன், ஒருகட்ட‍த்தில் பொறு மையிழந்து, மிகுந்த கோப த்தோடு, தான் தாயாக எண்ணிய தனது அண்ணி சீதா தேவி யிடம், “பழுக்கக் காய்ச்சிய ஈயத்தைக் காதுகளிலே ஊற்றுவதைப் போன்ற தங்கள் வசைமாரியை இனியும் பொறுக்க மாட்டேன்; என்னை இப்படிச் சந்தேகப்படும் தங்களைப் பொசுக் கத்தான் வேண்டும்” என்று மனம் வெதும்பியவராகக் கூறினான்,

என்ன‍தான் தனது அண்ணி யார் தன்னை இழிவாக பேசினாலும், தான் தாயாக எண்ணிய தனது அண்ணி யின் பாதுகாப்பிற்காக தனது அம்புகளில் ஒன்றை எடுத்து, மந்திரத்தை உச்ச‍ரி த்து, சீதா தேவி தங்கியி ருக்கும் குடிலுக்கு எதிரே ஒரு நீண்ட கோட்டினை கிழித்து, தனது அண்ணி யின் பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு ஸ்ரீராமனை தேடி  கானகத்திற்குள் ஓடினான்.

இதற்கு பின்புதான்,

லஷ்மணன் சென்றபின்தான் இராவணன், முனிவர்வேடம் தரித்து, சீதா தேவியை கவர்ந்து சென்றான், தனது சதி சீதாவை மீட்க ஸ்ரீ ராமர் போர்க்கோலம் பூண்டு, வாலியை கொன்று, சுக்கிரவனின் படைபலத்தோடும், ஸ்ரீஅனுமனின் உதவியோடும் மீட்ட‍தாக மீதி இராமாயணம் சொல்கிறது.  

பெண்கள், தங்களுக்கு ஏற்பட்டிருக் கும் ஒரு இக்கட்டான நிலையில்கூட , சற்று பொறுமையாக இருந்து, வார்த்தைகளை அளந்து, பிறர்மனம் நோகாதவாறு பார்த்து பேசி, வந்த பிரச்ச‍ னைக்கு ஒருதீர்வு காணவேண்டுமே! தவிர, சீதாதேவியை போன் று அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டி, பதற்ற‍த்தில் தான் என்ன‍ செய்கிறோம் ஏது பேசுகிறோம் என்ப தை துளியும் நினையாமல், தன்னை தாயாக நினைத்த‍ லஷ்மண னின் மனதை நோகடித் த‍ மாதிரி எந்த பெண்ணும் எந்த ஆணின் மனதையும் நோக அடிக் க‍க்கூடாது.

 (ஆரண்ய காண்டத்தில். . .)

– விதை2விருட்சம்

Leave a Reply