Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அண்ணா சாலையில் உள்ள‍ ஸ்பென்சர் கட்டிடத்தில் தீ விபத்து!

சென்னைக்கு பழசு, புதுசு என நிறைய அடையாளங்கள் உண்டு. அப்படி புதிய தலைமுறையின் அடையாளமாக காணப்படும் ஒரு கட்டடம், உண்மையில் பழமையின் பிரதிநிதி என்றால் நம்ப முடிகிறதா. அது தான் சென்னையின் நவீன அடை யாளச் சின்னங்களில் ஒன் றாகத் திகழும் ஸ்பென்சர் பிளாசா.

1981-ம் ஆண்டில், ஸ்பென்ச ர் கட்டிடம் தீயில் எரிந்தது. சென்னை அண்ணா சாலை யில் அமைந்த இந்த ஸ்பென்சர் கட்டிடம் 1855-ம் ஆண்டு ஆங்கி லேயர்களால் கட்டப்பட்ட அழகிய கட்டிடமாகும். இங்கு மிக ப்பெரிய அளவில் கடைகள் (ஷோரூம்) இருந்தன. விலை உயர்ந்த பொருட்கள், துணிமணிகள்,மருந்துகள், மது மற் றும் பலவித பொருட்கள் விற்கும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன.

13-2-1981 அன்று இரவு 7-30 மணி சுமாருக்கு இந்த `ஸ்பென்சர்’ கட்டிடத்தில் சரக்கு குடோனில் தீப்பிடித்தது. அது ஒரு மணி நேரத்துக்குள்ளாக எல்லா கடை களுக்கும் பரவியது. கடைகளில் இருந்த பொருட்கள் வெடித்துச் சிதறின. சென்னை நகரில் இருந்த அனைத்து தீயணைப்பு வண்டி களிலும் விரைந்து வந்த வீரர்கள் உயிரை பணயம் வைத்து போராடினார்கள்.

அவர்களுக்கு உதவியாக தனியார் லாரிகள்மூலம் தண்ணீர் கொ ண்டு வந்து சேர்த்தார்கள். இந்த கட்டிடத்தின் கூரை பர்மா தேக்கு சட்டத்தினால் அமைக்கப்பட்டு அதன் மீது கண்ணாடி போடப்பட் டி ருந்தது. தேக்கு மரங்கள் தீப் பிடித்து எரிந்தபோது கண்ணாடி கள் படார்… படார் என்று வெடித்து சிதறின. தீப் பிழம்புகள் வானத்தை தொடுவது போல எரிந்தன.

5 மைல் தூரத்துக்கு தீ ஜுவாலை தெரிந்தது. சுமார் 4 மணி நேர போராட்டத்துக்குப்பிறகு நள்ளிரவு 12-15 மணி அளவில் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் ரூ.3 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டதாக மதிப் பிடப்பட்டது. நடிகை கே. ஆர். விஜயாவின் கணவர் வேலா யுதத்துக்கு சொந்த மான கடை ஒன்றும் எரிந் து சாம்ப லானது.

இந்த தீ விபத்தில் வியா பாரி ஒருவர் உயிர் இழந்தா ர். பலர் காயம் அடைந்தார்கள். இப்போது, ஸ்பென்சர் பிளாசா என்ற பெயரில் புதிய கட்டிடம் நவீன வடிவமைப்பில் கட்டப்பட்டு, கம்பீரமாகக் காட்சி தருகிறது.

நன்றி மாலை மலர்  & தினத்தந்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: