Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் மரணம்

தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் சென்னை மருத்துவ மனையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 76. சிவந்தி ஆதித்தனுக்கு ஒரு மாதத்துக்கு முன் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச் சை பெற்று வந்தார். உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து நேற்று இரவு 9.55 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் இளைய மகன் சிவந்தி ஆதித்தன். ஆதித்தனாரின் மறைவுக்குப் பிறகு தினத்தந்தியின் அதிப ராக பொறுப்பேற்று, நிர்வாகத்தை நடத்தி வந்தார். கடந்த 2008 ம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. இந்திய ஒலிம் பிக் சங்கத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியவர். மனைவி மாலதி. சிவந்தியின் ஒரே மகன் பாலசுப்பிரமணிய ஆதித் தன். 2 மகள்கள். மூத்த மகள் மாலா ஜெயராமையா, சில ஆண்டுக ளுக்கு முன் ரஷ்யாவில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மரண மடைந்தார். இளைய மகள் அனிதா குமரன்.

சிவந்தி ஆதித்தன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், இரங்கல் தெரிவித்துள்ளன. சிவந்தி ஆதித்தனின் உடல், நேற்று இரவு போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. இன்று பிற்பகல் 3 மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள மின்மயா னத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது.

செய்தி – தினகரன்

Leave a Reply