Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூமி போன்று வாழ தகுதியுள்ள 2 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற் கொள்ள கெப்லர் 62 விண்கல த்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண் வெளியை துள்ளியமாக போட் டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகி றது.

இந்த நிலையில் சமீபத்தில் அனுப்பி வைத்துள்ள போட்டோ வில் பூமியை போன்று 2 கிரகங்கள் உள்ளன. அவற்றில் பாறைக ள், வானம், கடல்கள் மற்றும் ஈரத்தன்மையுள்ள காற்று போன்ற வை உள்ளன. எனவே, இவை மனிதர்கள் வாழ முற்றிலும் தகுதி யானவை என தெரிய வந்துள்ளது. அது பூமியில் இருந்து 1200 ஒளி வருட தூரத்தில் உள்ளன.

அதே நேரத்தில் புதன் கிரகத்தில் இருந்து 3 கோடியே 70 லட்சம் கி.மீட்டர் தூரத்திலும், வியாழன் கிரகத்தில் இருந்து 6 கோடியே 50 லட்சம் கி.மீட்டர் தூரத்திலும் உள்ளது. மேலும், அங்கு உயிரின ங்கள் வாழ தகுதியுடைய தட்ப வெப்ப நிலை நிலவுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. சூரியனை விட சிறியதாகவும், மங்கலாகவும் அவை காணப் படுகின்றன.

இந்த 2 புதிய கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டது குறித்து கெப்லர் விண்கல ஆய்வு திட்ட தலைவர் வில்லியம் போருக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கெப்லர் டெலஸ் கோப் கண்டு பிடித்துள்ள பல கிரகங்களில் இது மிகவும் பயனுள்ளது என்றார். இப்புதிய கிரகங் கள் கண்டு பிடிக்கப்பட்டதை பிட்சா மற்றும் பீர் விருந்துடன் விஞ் ஞானிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

>>> நன்றி – மாலைமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: