Saturday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இஸ்லாமியத் திருமணத்தில் அமைய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்!

இஸ்லாமியத் திருமணத்தில் அமைய வேண்டியதும் தவிர்ந்து கொள்ள வேண்டியதும், எமது இக் கால முஸ்லிம் சமூகத்தில் நடை பெறுகின்ற திருமணங்களில் நபி (ஸல்) அவர்களால் வழி காட்டப் பட்ட பல விடயங்கள் விடப்பட்டுள் ளன, அவற்றை செயற்படுத்த வேண்டும். மேலும் அந்நிய சமூகத் தின் கலாச் சாரங்களினால் பல விடயங்கள் நுழைந்துள்ளன. அவற்றை தவிர்ந்து கொள்ள வேண் டும்.
 .
தவிர்ந்து கொள்ள வேண்டிய விடயங்கள்
.
A. திருமணப் பேச்சுவார்த்தையின் போது
.
1. பெண்தரப்பினரிடம் பேசப்படும், கேட்கப்படும், சீதனம், திரு மணச் செலவுகள்.
 .
சீதனத்தில் அமையப் பெறுவது :
.
அ.  வீடு, வளவு   
ஆ. காணி, கடை, நிரந்தரச் சொத்துகள்
இ.  பணம்
ஈ. வாகனம்
உ. பெட்டிக்காசு
 .
திருமணச் செலவுகள்:
.
அ.காவின் செலவு (தீன் பண்டங்கள், கதிரை மற்றும்)
.
ஆ.பெண்வீட்டிற்கு ஆண் தரப்பினருக்கு வாகனம் ஏற்பாடு செய் தல்.
 .
02.திருமணத்திற்கு நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல்.
.
03.திருமண நாளை தீர்மானிக்கும் வேளையில் பிரார்த்தனைக் காக மௌலவிமாரை அழைப்பதும், மரைக் காயர்மாரை அவசிய மெனக் கருதி அழைப்பதும் .
.
04.பெண்தரப்பினரை ஆண்தரப்பினரைவிட தாழ்வாகக் கருது தல்.
.
05.திருமணத்தின் முன்னும் பின்னும் வலிமா விருந்தைத் தவிர ஆண் தரப்பையோ பெண்தரப்பையோ வேறு எப்பெயரிலாவது விருந்தளிக்க வேண்டுதல்.
 .
B.பேச்சுவார்த்தையின் பின் தவிர்ந்து கொள்ள வேண்டியவை
.
01.பெண்ணுக்கு அடையாளம் போடுதலும் மாப்பிள்ளை வீட்டாரு க்கு காசு கொடுத்தலும்
.
02.பெண்தரப்பிடமிருந்து திருமணத்திற்கு முன் செப்பு என்ற பெயரில் தீன்பண்டங்களை பெற்றுக் கொள்ளல்.
 .
03.திருமண வேளையில் தவிர்ந்து கொள்ள வேண்டியவை
.
) திருமண நிகழ்சியை அனாச்சாரமான முறையில் திருமண மண்டபங்களில் நடத்துதல்.
.
) இதற்கென பெரும் செலவினங்களை ஏற்படுத்துதல்
.
) இம்மண்டபங்களுக்கு ஆண், பெண் இருதரப்பினர்களையும் அழைத்தல்.
.
)மணமகளை மேடை மீது அமர்த்தி காடசிப் பொருளைப் போன்று அலங்கரித்து
.
)றரை இரசிக்கச் செய்தல்
.
) திருமணத் தம்பதிகள் பூமாலைகளை தங்களுக்குள் பரிமாறி, கீழ்தரமான முறையில் சபையோர் பார்த்திருக்க ருவருக்கொ ருவர் உணவுப் பண்டங்களை ஊட்டுதல்.
.
) திருமணத்திற்கு மௌலவி மார்க்க ரீதியாக அவசியமெனக் கருதுதல்.
.
) மௌலவி மாப்பிள்ளை, வொலிகாறரின் கைகளைப்பிடித்து திருமணத்தை அறபிப்பாசையில் கூறி நடத்தி வைத்தல்
.
) திருமணப்பதிவுக்கென ஒரு பெரும் எண்ணிக்கையானோரை திருமண அழைப்புப்பத்திரங்கள் மூலமோ அல்லது வாய் மூல மோ அழைத்தல்.
.
) பள்ளிவாயல்களுக்கு ஆண், பெண் தரப்பு திருமணத்திற்கென பணம் கொடுத்தல்.
.
) பெண்தரப்பினர் காவின் நிகழ்சிக்கு வட்டா கொண்டுவரல்.
.
) மௌலவி நபிகளாரால் கற்றுக் கொடுக்கப்படாத ஒரு கூட்டு துஆவை அவ்விடத்தில் ஓதுதல்.
.
) திருமணப்பதிவாளருக்கு பணம் கொடுத்தலும், உரிமையில் லாமல் அவற்றை அவர் பெறுவதும். (இது இலஞ்சமாகும்)
.
அஅ) மஹர்த் தொகையில் 501, 1001 ரூபாயென ஒற்றையெண் கூறி குறிப்பிடுதல்.
.
அஆ) மாப்பிள்ளை திருமணப்பதிவின் வேளையில் கோட், சூட், டைபோன்வற்றை அணிந்து அன்னிய கலாச்சாரத்தை கடைப் பிடித்தல்.
.
அஇ) மாமனாரோ அல்லது வேறு எவரும் மாப்பிள்ளைக்கு மோதிரம் அணிவித்தல்.
.
அஈ) பெண் வீட்டில் கல்யாணச் சாப்பாடு போடுதல்
.
அஉ) திருமணத்திற்கென பெண்வீட்டை அழகுபடுத்தி பெண் தரப்பிற்கு அனியாயமான செலவுகளை ஏற்படுத்துதல்.
 .
04.மணமகன் மணமகளைப் பொறுப்பெடுத்தலில் தவிர்ந்து கொள்ள வேண்டியவை
.
அ. மணமகனை பெண் வீட்டிற்கு கலிமா சொல்லியோ , சொல்லாமலோ அழைத்துச் செல்லல்.
.
ஆ. பெண்வீட்டில் ஒரு செலவினத்தை ஏற்படுத்தி இந்நிகழ்ச் சியை நடாத்துதல்.
.
இ.மணமகளை அலங்கார மேடையில் ஆண்களும் பார்க்க க்கூடிய விதத்தில் இருப்பாட்டுதல்.
.
ஈ.மாப்பிள்ளை அல்லது அவரின் குடும்பப் பெண்கள் தாலியின் பெயரால் கழுத்தில் சவடி செய்து போடுதல்.
.
உ.மாப்பிள்ளையை அவருடைய மைத்துனர் கைபிடித்து , வாசம் தெளித்து வீட்டிற்குள் வரவேற்றல்.
.
ஊ.மைத்துனருக்கு மாப்பிள்ளை இதற்காக அன்பளிப்பு வழங்கல்.
.
எ.மௌலவியோ அல்லது மாமனாரோ மாப்பிளைக்கு மகளின் முடியைப்பிடித்துக் கொடுத்தல்.
.
ஏ.அவ்வேளையில் மௌலவி பாதிஹா ஓதி பிரார்த்தித்தல்.
.
ஐ.மாப்பிள்ளைக்கு அனுமதியில்லாத பெண்கள் அவ்விடத்தில் அவருக்கு பானம் வழங்குதல், மருதோண்டி போடுதல்.
.
ஒ.பெண்ணையும் ஆணையும் பிறர்பார்க்கக்கூடாத ஆடைக ளோடு போட்டோ , வீடியோ எடுத்து அல்பம் அமைத்தல்.
.
ஓ.பிற கலாச்சார வழக்கத்தின் அடிப்படையில் அவ்விடத்தில் பெண் மாப்பளையின் மீது பூச் சொரிதல்,பகல்வத்தி கொழுத்தல், மெழுகுதிரி அணைத்தல்.
.
ஃ..இவ்வைபவங்களின் போது இடையிடையே வெடில் சுடுதல்.
 .
05.திருமணத்தின் பின் தவிர்ந்து கொள்ள வேண்டியவை
.
அ.மாப்பிள்ளைக்கு 06 மாதச் சாப்பாடு கொடுத்தல்.
.
ஆ.பெண்வீட்டில் தஞ்சமடைதல்
.
இ.பெண்ணை அழைத்துச் செல்ல மாப்பிள்ளையின் குடும்பப் பெண்கள் மறுநாள் பெண் வீட்டிற்கு வருதல்.
.
ஈ.பெண்தரப்பினர் அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை பார்ப்பதற்காக சந்தனக் கிண்ணி , மற்றும் பொருட்களுடன் மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்லல்.
.
உ.மாப்பிள்ளை குடும்பத்தினர் பெண், மாப்பிள்ளைக்கு சாப்பாடு கொடுத்து ஆபரணம் அணிவித்து பணம்; காணிக்கைகள் செலு த்தி சங்கைப்படுத்தல்.
.
ஊ.இச்சடங்குகளின் போது ஆராத்தி , மருதோண்டி என்ற பெயரில் பெண்கள் கூத்துக் கும்மாளம் போடுதல்.
.
எ.பெண்தரப்பின் செலவையும் சேர்த்து பெண்வீட்டில் வலிமா போடுதல்.
.
C. நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள்
.
>> திருமணப் பேச்சில்
.
01.மணமகன், மணமகள் ஐவேளைத் தொழுகையை கடைபிடிப்பவராக இருத்தல்
.
02.பெண்தரப்பை தாழ்வாகக் கருதாமல் தம்மைப் போன்ற அந்தஸ்தில் கருதுதல்
.
03.திருமணத்தின் போதும் , பின்னரும் ஏற்படக்கூடிய அனைத்துச் செலவினங்களையும் மணமகன் பொறுப்பெடுத்து பெண்தரப்பி ற்கு எவ்விதச் செலவையும் ஏற்படுத்தாதிருத்தல்.
.
04.பெண்ணோடு வாழ்வதற்கான வீட்டு வசதியை மணமகன் செய்தெடுத்தல்.
.
05.மஹர் , பெண்ணின் உடை, திருமணத்தின் பின்னுள்ள வலிமா செலவுகள் அனைத்தையும் மணமகன் தன் செலவில் பொறுப் பெடுத்தல்.
.
06.எல்லா நாட்களையும் நன்னாளாக கருதி பொருத்தமான நாளை முடிவெடுத்தல்.
.
07.மஹர்த்தொகையை பெண்தரப்பினர் கேட்கும் உரிமையை அவர்களுக்கு வழங்கி அவர்களை கேட்க வைத்தல்.
.
D. திருமண வேளையில் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங் கள்
.
01.பெண்ணின் தகப்பன் தனக்குத் தெரிந்த பாசையில் தன்மகளை திருமணம் செய்து தருவதாக இருசாட்சியங்கள் முன் தெரியப்படு த்தல்.
.
02.மாப்பிள்ளை மஹர்த்தொகையைக் குறிப்பிடுவதோடு திருமண த்தை ஏற்றுக் கொண்டதாக தெரியப்படுத்தல்.
.
03.இந்நிகழ்வை பெரிய நிகழ்சியாக ஆக்காமல், இதற்கு திருமண த்துடன் சம்மந்தப்பட்டோரை மட்டும் அல்லது ஒரு சிறு தொகை யினரை மட்டும் அழைத்தல்.
.
04.“பாறகல்லாஹ{லக வபாறக அலைக வஜமஅ பைனகுமா பீ ஹைர்” என்ற நபிகளார் கற்றுத் தந்த துஆவை ஓதுவதன் மூலம் திருமணத் தம்பதிகளை வாழ்த்துதல்.
.
05.தாலியின் இடத்தில் அமையக்கூடியதாக எந்த நகையையும் மணமகளின் கழுத்தில் மாப்பிள்ளை தரப்பினூடாக அணிவிக்கா மல் வேறு எதையும் மஹராகக் கொடுக்கலாம்.
 .
E. திருமணத்தின்பின் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள்
.
01.மணமகளை அலங்கரித்து மணமகன் அல்லது மணமகளிpன் மஹ்ரமிகள் மட்டும் பார்க்கக்கூடியவிதத்தில் வைத்தல்
.
02.மணமகனே, மணமகளை தன்னிடத்திற்கு அழைத்தெடுத்தல்.
.
03.இந்நிகழ்வை பெண்தரப்பிற்கு எவ்வித செலவையும் ஏற்படுத்தாத விதத்தில் சிறியதாக நடாத்தி முடித்தல்
.
04.மணமகன் மணமகளைச் சந்திக்கும் ஆரம்ப வேளையில் அவளின் நெற்றி முடியைப் பிடித்து பின்வரும் துஆவை ஓதிக் கொள்ளல்.
.
அல்லாஹ{ம்ம இன்னி அஸ்அலுக மின் ஹைரிஹா வஹைரிமா ஜபல்த அலைஹா வஆதுபிக மின்ஷர்ரிஹா வஷர்ரிமா ஜபல்த அலைஹா (யாஅல்லாஹ் இப்பெண்ணின் நலவையும் இவளில் படைக்கப்பட்டுள்ள நலவையும் உன்னிடம் வேண்டுகிறேன். இவ ளின் தீங்கிலிருந்தும் இவளில் படைக்கப்பட்டுள்ள தீங்கிலிருந் தும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன்.)
.
05. மனைவியோடு சந்தோசமாக இருந்ததன் பின்னர் திருமணச் சாப்பாடான வலிமாவை தன் சக்திற்கு ஏற்ப சிறிதாகவோ பெரி தாகவோ செய்வதன் மூலம் இத்திருமணத்தை பகிரங்கப்படுத்தி சந்தோசத்தை வெளிப்படுத்துதல்.
.
இத்தகவலை உங்களுக்கு வழங்கியோர்-
.
இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையம்
பிரதான வீதி அக்கரைப்பற்று 01
தொலைபேசி 067-2278909

Leave a Reply