Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பழைய திருமண முறையின் அடிப்படை என்ன? – தந்தை பெரியார்

தாய்மார்களே! பெரியோர்களே! முதலாவது உங்களுக்குச் சொல் கிறேன். மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் எல்லாம் செய்தாலும்கூட இந்த வாழ்த் துக் கூறுதல் என்ற மூட நம்பிக்கையைப் போக்க முடியவில்லை. மற்ற சடங்குக ளை எல்லாம் நிறுத்தி விட்டேன். இதை நிறுத்த முடியவில்லை. கொஞ்சம் நாளா கும். மக்களுக்கெல்லாம் நல்ல அறிவு வரவேண்டும். அப்போது இதுவும்தானாக மாறிவிடும். என்னைப் பொறுத்த வரையில் இந்த வாழ்த்துக்கூறுவது என்பதில் எனக்குக் கொஞ்சமும் நம்பி க்கை இல்லை. வாழ்த்துக் கூறுவதை நம்பினால் வசையையும் நம்ப த்தானே வேண்டும். அதற்கு என்ன பலனோ, அதே பலன் தானே இதற்கும் உண்டு!

சாதாரணமாக நடைபெறுவது போலல்லாமல் இது கொஞ்சம் மாறு தலாக நடைபெறுகிறது. நல்ல அறிஞர்கள், பெரியவர்கள் எல்லாம் இம்முறையைக் கையாண்டு வருகிறார்கள். 40 ஆண்டு காலமாகப் பொது மக்களிடையேயும் இந் நிகழ்ச்சி பரவலாக நடைபெற்று வருகிறது. இதுதான் -_- இந்த முறைதான் தொடர்ந்து நடைபெற வேண்டு மென்பதில்லை. இந்த முறையை 1967-ஆம் வருட மாடல் என்றுதான் சொல்லுவேன். இந்த முறை நமது இயக்கத்திற்கோ, கொள்கைக்கோ முடிவான முறையுமல்ல. தேவைக்கும், அவசியத்திற்கும் ஏற்ப மாற்றிக் கொண்டு செல்ல வேண்டியது தான்.

நான் நினைக்கிறபடி நடக்க வேண்டுமானால் திருமணம் என்பதே சட்ட விரோதமான செய்கையாகும். இந்த மாற்றத்திற்குக் காரண மெல்லாம் பழமையை மாற்ற வேண்டுமென்பதோ நமக்கென்று ஒரு முறை வேண்டுமென்பதாலோ அல்ல! இதுவரை பெரும்பா லான மக்களால் நடத்தப்பட்டு வரும் முறையைப் பற்றிய விளக் கம் கிடையாது. சரித்திரம் கிடையாது. நடைபெறும் நிகழ்ச்சிக்குத் தமிழில் ஒரு சொல்லே கிடையாது. முதலில் நடைபெற்ற இந்திப் போராட்ட த்திற்குப் பின்தான் திருமணம் என்ற சொல்லே வந்தது.

அதற்கு முன் கல்யாணம், – விவாகம், – தாரா முகூர்த்தம் -_ கன்னிகா தானம் என்கின்ற வடமொழிச் சொற்கள்தான் வழங்கி வந்தன. தமிழர்களுக்குக் கல்யாணமே கிடையாதா? அவர்கள் குடும்பமாக வாழவில்லையா? என்று கேட்கலாம். இம்முறை எதற்காகப் பயன் படுகிறது என்று பார்ப்போமானால் சட்டப்படி _- மதப்படி _- சாஸ்திரப் படி _- சம்பிரதாயப்படி _- ஆஸ்திகர்கள் கருத்துப் படி தனது வாழ்க் கைக்கு ஓர் ஆண், ஒரு  பெண்ணை அடிமை கொள்கிற நாள்தான் திருமணம் என்பதோடு,  பகுத்தறிவு உள்ள மனிதனின் அறிவை நாச மாக்கி மூட நம்பிக்கையை, முட்டாள் தனத்தை அவன் இரத்தத்தில் புகுத்தி, அவனை மடைய னாக்கவும், மூன்றாவதாக ஜாதியைக் காப்பாற்றவுமேயாகும்.

அதாவது, பார்ப்பான் பார்ப்பானாகவே சமுதாயத்தில் எந்தவித உழைப்பும் இன்றி வாழவும், பறையன் பறையனாக, சக்கிலி சக்கிலியாக இப்படி அவனவனும் தங்கள் ஜாதிப்படி இருக்க வேண்டும், ஒன்று சேரக்கூடாது என்கின்ற தன்மையில் ஜாதி காப்பாற்றப்படுகிறது. முன்னெல்லாம் சொல்வார்கள், குலத்தி லே குரங்கைக்கொள் என்று . குரங்கு போல இருந்தாலும் பரவா யில்லை. அது ஜாதியிலிரு ந்தால் கட்டிக் கொள்ளலாம் என்று சொல்வார் கள். அவ்வளவு ஜாதி வெறி இருந்தது.

இவற்றைப் பார்க்கும்போது மூன்று காரியங்களை அடிப்படை யாகக் கொண்டு தான் பழைய முறை அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒன்று, பெண்ணை அடிமையாக்குவது, இரண்டு, மக்களைப் பகுத் தறிவற்ற முட்டாள்களாக்குவது, மூன்றாவதாக, மனிதனை ஒன்று சேர விடாமல் ஜாதி காரணமாகப் பிரித்து நிற்கச்செய்வது ஆகிய வைகளேயாகும்.

மணமக்களுக்கு வேண்டியதெல்லாம் குழந்தைகளைக் குறைவா கப் பெற்றுக் கொள்ள வேண்டும். பதினாறும் பெற்று என்று சொல் வது குழந்தைகளைப் பெறுவதற்காகச் சொல்வதல்ல. 16 பேறு களைப் பெற்று என்று சொல்வதற்காகச் சொல்வதாகும். ஆடம்பர மில்லா மல் மற்றவர்கள் நம்மைப் பார்த்து பொறாமைப் படாத வகையில் வாழ வேண்டும். கூடுமானவரை ஆடம்பரத்தைக் குறைத்துக் கொ ண்டு, எளிய வாழ்வு வாழ வேண்டும். அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதால் எப்படி ஒழுக்கம் குறைகி றதோ, அதுபோலத் தான் வரும்படிக்கு  மேல் செலவி ட்டாலும் ஒழுக்கம் குறையும். பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள் வதையும், சிங்காரித்துக் கொள்வதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். எல்லா மக்களும் பெண்களை நல்ல வண்ணம் படிக்க வைக்க வேண்டும். பெண்கள் படிக்க ஆரம்பித்தால், அவர்களே தங்களின் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள் வார்கள்.

பெண்கள் தாங்களாகவே தங்கள் வாழ்க்கைக்குத் துணைவர்க ளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதாகி விட்டதே – கஞ்சி யார் ஊற்றுவார்கள் என்று கவலைப் பட வேண்டாம் என்று வயதானவர்களுக்கு மாதம் இவ்வளவு என்று அரசாங்கம் பென்ஷன் கொடுக்கிறது. அதுபோல வகை யில்லாமல் விதவையாகி விட்டால் விதவை பென்ஷன் கொடுக் க வேண்டும். இதையெல்லாம் இந்தச் சர்க்கார் பார்க்கவில்லை என்றால் வேறு சர்க்காரைக் கூப்பிடுகிறோம். மக்களுக்காகத் தான் சர்க்காரே ஒழி ய, சர்க்காருக்காக மக்கள் அல்லவே! இதை இந்தச் சர்க்கார் செய்யா விட்டால் வேறு எந்தச் சர்க்கார் செய்கி றதோ, அதைக் கூப்பிட்டு நடத்தச் சொல்கிறோம். அது பாகிஸ்தா னாக இருந்தாலென்ன? ரஷ் யாவாக இருந்தால் நமக்கென்ன? யார் செய்கிறார்களோ, அவர்கள் வந்து ஆளட்டும். நமக்கு வேண் டியதெல்லாம் மக்கள் வளர்ச்சிய டைய வேண்டும். மற்ற மேல் நாட்டு மக்களைப் போல் வாழ வேண் டுமென்பதுதான்.

(26.8.1967 அன்று சென்னையில் நடிகவேள் எம். ஆர்.ராதா அவர் களின் இல்லத் திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரையிலிருந்து…)

– விடுதலை 27.8.1967.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: