Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒட்டியாணம்…!!!

ஒட்டியாணம் என்பது பெண்கள் இடையில் / இடுப்பில் அணியும் ஒரு ஆபரணம். பொதுவாக, திருமணம் போன்ற விழாக்களின் போது அணியப்படுகிறது. அத்துடன், பரத நாட்டியம் முதலான மரபுவழி நடனங்களுக்கான உடைய லங்காரத்திலும் ஒட்டியாணம் இடம்பெறுவதோடு, வரலாற்று நாடகங்கள், திரைப்படங்கள் போன்ற வற்றில் முற் காலக் கதை மாந்தர்களின் அணி வகைகளிலும் ஒட்டியாணம் இடம் பெறுவதைக் காண முடியும்.

இந்த அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி

ஒட்டியாணம் பெரும்பாலும் தங்கத்தில் செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசிய ஒட்டியாண ங்கள் விலைக்கும், வாடகைக்கு ம் கிடைக்கின்றன. சில ஒட்டியாண ங்கள் எளிமையானங்கள் வடிவ மைப்புக் கொண் டவையாக இருக்கும் அதே வேளை, நுணுக்க மான வேலைப்பாடுகளைக் கொண்ட ஒட்டி யாணங்களும் உள்ளன. வேலைப்பாடுகளை ப் பொறுத்து ஒட்டியாணங்களின் மதிப்பும் வேறு படும். தனி உலோகங்களால் மட்டு மன்றி கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டியாணங் களும் செய்யப்படுகின்றன.

ஒட்டியாணம் பொதுவாக உடைக்கு வெளியிலேயே அணியப்படு கின்றது. எனினும் பண்டைத் தமிழர்கள் இடை யணிகளை உடைக்கு ள்ளும் அணிந்ததாகத் தெரிகிறது. இத்த கைய இடையணிகள் நுண்ணிய உடையி னூடாகத் தெரிவது பற்றியும் இலக்கியங்கள் கூறுகின்றன. இடையணிகளை ஆடைக ளின் மேல் அணிந்து கொள்வது பற்றிய தகவல்களையும் இலக்கி யங்கள் தருகின்றன.

– பரதநாட்டியம் Bharatanatyam on facebook

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: