Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்ணைக் கவரும் திருமண நகைகள்!

திருமணம் என்றாலே இந்தியக் குடும்பங்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். இதைவிடப் பெரிதாக ஒன்றும் இல்லை எனும் அளவுக்கு நகையும், உவகையும் பொங்கும் நிகழ் வாக திருமணங்கள் கருதப் படுகின்றன.   உலகத் தங்கக் கவுன்சில்

திருமணம் என்றாலே இந்தியக் குடும்பங்களுக் கு ஒரு கொண்டாட்டம் தான். இதைவிடப் பெரிதா க ஒன்றும் இல்லை எனும் அளவுக்கு நகையும், உவகையும் பொங்கும் நிகழ்வாக திருமணங்கள் கருதப்படுகின்றன.

உலகத் தங்கக் கவுன்சில் அளித்திருக்கும் திருமண நகைகளின் குறிப்புப் பட்டியல் இது:-

தலை மற்றும் நெற்றியில் அணியப் படும் நகைகள்

தென்னிந்தியாவில் பெயர் பெற்ற வை. நெற்றிச்சுட்டி, சந்திரப்பிறை, சூரியப் பிறை ஆகிய வற்றின் தொகுதியே தலை அணியாகும். தலையின் வகுடு தொடங்கும் இடத்தில் நெற்றியின் மேல்பகுதியில் நெற்றிச் சுட்டி அணியப் படுகிறது. அதற்கு இருபுறத்திலும் இடம் பெறுவன சந்திரப் பிறையும், சூரியப்பிறையும் ஆகும்.

ஜடையின் மீது பொருத்தப்படும் நகை

அழகாகப் பின்னப்பட்ட ஜடையின் மீது பொருத்தப்படும் நகை தென்னிந்திய நாட்டியக் கலைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. திருமணப் பெண்களுக்கும் பிடித்த மான நகையாக இது விளங்குகிறது. இந்த நகை பல்வேறு வடிவத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஜடை நாகம் எனப்படும் பாம்பு வடிவத்திலுள்ள ஜடை மற்றும் சூரியன், சந்திரன், பூக்கள் ஆகிய உருவங்கள் பதி த்த ஜடையுடன் குஞ்சலமும் இணைந்து கொஞ்சும் அழகை கொட்டிக் குவிக்கிறது.

தோடுகள் எனப்படும் காதணி

தோடுகள் எனப்படும் காதணிகளைப் போன்று எண்ணற்ற வகைகளில் வேறு எந்த இந்திய நகையையும் பார்க்க முடியாது.

அடுத்த முக்கிய இடத்தைப் பெறுவது ஜிமிக்கியும், மாட்டலும். பெண்களின் நடை அசைவுக்கேற்ப ஆடும் ஜிமிக்கிகளின் அழகு, காண் போர் மனதில் பரவசத்தை ஏற்படுத்த வல்லது. மணி போன்ற உருவத்தில் உள்ள ஜிமிக்களில் தங்கத்தில் பதிக் கப்பட்ட முத்து மணிகள், காதுகளில் தொங்கும் தொங்கட்டான்களாக முகத்திற்கு அழகு சேர்ப்பவை.

மூக்குத்தி

இந்தியப் பெண்களின் அடிப்படை அணிகலனாகத் திகழ்வது மூக்குத்தி. மற்ற எந்த நகை இல்லை என்றாலும் காதிலும் மூக்கி லும்கூட நகை இல்லாத ஏழ்மையை மக்களால் தாங்க முடியாத தாக இருக்கும். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெரும் பாலும் திருமணமான பெண்கள் கட்டாயமாக அணியும் நகையாக மூக் குத்தி நம் மரபில் காலூன்றிவிட்டது.

தங்க மாலைகள் அல்லது சங்கிலிகள்

காதணிகளுக்கு இணையான போட்டியா கக் கருதப்படும் அளவுக்கு நம் நாட்டில் தங்க மாலைகள் அல்லது சங்கிலிகள் பெண்களால் பெரிதும் அணியப்படுகின் றன.

திருமாங்கல்யம் (தாலி)

திருமணமான பெண் என்பதற்கு அடையாளமாக தாலி நம் நாட்டில் அணியப்படுகிறது. எந்த வகைத்திருமாங்கல்யம் என்பது பகுதிக்குப் பகுதி, சாதிக்குச் சாதி வேறு படுகிறது. சங்கு வடிவத்திலும், சக்கரங்கள், கல்பக விருட்சம் போன்ற வற்றையும் சேர்த்து தாலியுடன் நம் நாட்டுப் பெண்கள் அணிவது வழக்கம். கழுத்து அணியான தங்கச் சங்கிலிகள் பல்வேறு விலைகளில் விற்கப்படுகி ன்றன.

வங்கி

முழங்கைக்கு மேலே பெண்கள் அணியும் தங்க ஆபரணமாக வங்கி விளங்குகிறது. திருமணத்தின் போது அணியப்படும் இந்த முப்பரிமாண தங்கநகை இந்தியாவில் பெயர் பெற்றது.

வளையல்கள்

காது, மூக்கு, கழுத்து இவற்றோடு மட்டும் பெண்களுக்கான நகை கள் முடிந்து விடுவதில்லை. மணப்பெண்களின் கைகளில் அணி யும் வளையல்கள் முக்கியமான அணி கலனாக இருக்கிறது. தங்கத்தில் இல் லையென்றாலும் கண்ணாடியிலோ, ப்ளாஸ்டிக்கிலோ ஒரு வளையலை அணிந்து கொள்வர். மெலிதாகவும், தடி மனாகவும், உள்குடைவு உள்ளதாகவும், வளைவு நெளிவுகள் கொண்ட தாகவும் உள்ள பலவகை வளையல்கள் ஒட்டு மொத்தமாக திரு மண மகிழ்ச்சியை அதிகரிக்கக் கூடிய தன்மை வாய்ந்தவை. வளையல்கள் என்பவை சூரிய சக்தியின் அடையா ளமாக நம்பப் படுகிறது. பூமிக்குச் சக்தியளிக்கும் சூரியனைப் போன்று, புகுந்த இடத்திற்கு வளமான வாழ்வை வளையலணிந்த புதுமணப் பெண் கொண்டு வரு வதாக மக்கள் நம்புகிறார்கள்.

ஒட்டியாணம்

புதுமணப் பெண்கள் இடுப்பைச் சுற்றி அணியும் பொன்னாலான வார் ஒட்டியாணம் எனப்படுகி றது. பெண்களின் உடலழகைச் சிக்கென எடுத்துக் காட்டுவத ற்கு ஒட்டியாணம் உதவுகி றது. தங்கப் பட்டைகளில் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டு, முத்து வரிசைகளுடன் கூடிய இந்த ஒட்டியாண த்தை அணியும் புதுமணப் பெண் அழகரசியாகத் திகழ்கிறா ள்.

கொலுசும், மெட்டியும்

நிறைவாக காலில் அணியும் கொலுசும், கால்விரல்களில் அணி யும் மெட்டியும் பெண்கள் அணியும் முக்கிய நகை களாகும். கணுக் கால்களில் அணியப்படும் காற் சிலம்புகள் (கொலுசு) எண்ணற்ற நவ நாகரிக பாணிகளில் விற்ப னைக்கு உள்ளன. செல்லமான சிலம் பொலி கிளுகிளுப்பூட்டும் தன்மை வாய்ந்தது.

தாலியைப் போன்று கால் விரல் களில் அணியப் படும் மெட்டியும் திருமணமான பெண்களை அடையாளம் காட்டும் நகையா கும்.

திருமணம் என்பது வாழ்வு முழுதும் இணைந்திருக்கும் ஒரு பந்தம் என்பதைக் காட்டும் வகையில் ஆணையும், பெண்ணையும் பிணைக்கும் நாண்களாக பொன் நகைகள் போற்றப்படுகின்றன.

thanks to  Dinamani

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: