Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோக்கியா மொபைல்களுக்கு இன்ஷூரன்ஸ்

திருடப்படுதல், பறிக்கப்படுதல், உடைத்தல், கலவரம் மற்றும் கெட்டுப்போதல் ஆகியவற்றால் மொபைல் போன் இழப்பு நேரிட் டால், அதற்கான இழப்பீட்டைத் தரும் வகையிலான திட்டம் ஒன்றை நோக்கியா நிறுவனம் தன் மொபைல் போன்களுக்கு வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தத்தினை, நியூ இந்தியா அஷ்யூ ரன்ஸ் நிறுவனத் துடன் மேற்கொண்டுள்ளது. இதற்கான குறை ந்த பட்ச பிரிமியத் தொகை ரூ.50.

இன்ஷூரன்ஸ் திட்டப்படி, மொபைல் போனின் விலையில் 1.25 சதவீதம் பிரிமியமாகச் செலுத்த வேண்டும். வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் போல, நோக்கியா மொபைல் போன்களை வாங்கும் போதே, இந்த திட்டத்திற்கான சான்றி தழும் வழங்கப்படுகிறது. மேலே தரப் பட்ட காரணங்களுடன், மொபைல் போனில் திரவம் ஏதேனும் உள் நுழைந்து பாதிப்பு ஏற்பட்டாலும், இழப் பீடு தரப்படு ம். தொடக்கத்தில் இந்த திட்டம் டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, புனே, ஆமதாபாத், ஜெய்பூர் மற்றும் கொல் கத்தா ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது.

மொபைல் போன் திருடப்பட்டால், உடனடியாக, அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து, அதற்கான முதல் தகவல் அறிக்கையின் நகலைப்பெற்று, இழப்பீட்டி ற்கு மனுசெய்திட வேண்டும். வேறு வழி யில், செயல் இழந்து போனால், நோக்கியா வாடிக்கையாளர் மையத்தில், மொபைல் போனைக் கொடுக்க வேண்டும். மொபைல் போன் சரி செய்யப்பட்டு வாடிக்கையாளரு க்கு, அவரின் முகவரியில் வழங்கப்படும். இடைப்பட்ட காலத்தில் பயன்படுத்த, தற்காலிக மொபைல் வழங்கப்படும். மார்ச் 14 முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இனி விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply