Thursday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பயத்தை வெல்வது எப்படி?

பயம் மனித உணர்ச்சிகளில் மிக இயல்பானது. அது தேவையான தும்கூட. பல சந்தர்ப்பங்களில் அது நம் பாதுகாப்பிற்கு உதவுகிற து. முட்டாள் தனமாகவும், கண் மூடித் தனமாகவும் நாம் நடந்து கொள்ளாமல் இருக்க உதவுகிறது. ஆபத்தான சூழ் நிலைகளில் அஜாக்கிரதையாய் இருந்து விடாமல் நம்மைத் தடுக்கிறது. எனவே தான் “அஞ்சுவது அஞ்சாமை பேதை மை” என்றார் திருவள்ளுவர்.

பலரும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க முக்கியக் காரணம் தண்ட னைக்குப் பயந்து தான். அந்தப் பயம் இல்லா விட்டால் சமூகத்தில் சீரழிவே ஏற்படும். எனவே பயப்பட வேண்டிய தற்கு பயப்பட்டுத்தான் ஆக வேண்டும். தவறுகள் செய்ய அஞ்சவே வேண்டும்.

விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் ஆபத்தான செயல்களில் ஈடுபட பயப்படுவதே புத்திசாலித்தனம். குற்றங்களில் ஈடுபட அஞ்சவே வேண்டும். இதில் எல்லாம் பயம் ஏற்படுவது இயற்கை நமக்கு அளித்திருக்கும் பாது காப்பு அரணே. தோன்றியபடி யெல்லாம் நடந்து கொள்ளாமல் தடுத்து நம்மை சிந்திக்க வைப்பதால், நம் வேகத்தைப் பல சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத் துவதால் பயம் நமக்கு நன்மையை செய் கிறது என்பதில் சந்தேகமேயில் லை.

ஆனால் பயம் ஒரு எல்லையை மீறும் போது, அறிவு சாராமல் இருக்கும் போது அது நமக்கு நன்மையை விட அதிக தீமையையே செய்வதாகிறது. அந்த சமயங்களில் அது பாதுகாப்பு அரணாக இருப்பதற்குப் பதிலாக அடிமை ச்சங்கிலியாக மாறி நம்மை செய லிழக்க வைத்து விடுகிறது.

நம்மை செயலிழக்க வைக்கும் பயத்திற்கு மிக முக்கிய கார ணம் விளைவுகளைக் குறித்து நமக்கு ஏற்படும் விபரீதக் கற் பனைகளே. என்ன எல்லாம் நேரக்கூடும் என்று ஒருவன் கற்பனைக் குதிரையைத் தட்டி விடும் போது அவன் மனம் வரக் கூடிய பயங்கர விளைவு களை எல்லா ம் பட்டியல் இட ஆரம்பித்து விடுகிறது. இப்படி எல்லாம் ஆனால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பிக்கும் போது பயம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விடுகிறது. சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் அவன் ஸ்தம்பித்துப் போகி றான்.

அதே போல் புதியதாக ஒன்றைத் தொடங் கும் முன் மற்றவர்கள் என்ன நினைப்பார் களோ என்கிற பயம், குறைத்து மதிப்பிட் டு விடுவார்களோ என்கிற பயம், தோற்று விட்டால் என்ன செய்வது என்கிற பயம் ஏற்பட்டு அந்த செயலை ஆரம்பிக்கவே விடாமலும் செய்து விடுகின்றது. வெற்றிக் காகவே முயல்கிறோம் என்றாலும் தோல்வி வெட்கப்படவேண்டிய ஒன்றல்ல.

உலகில் மிக உயர்ந்த வெற்றிகளைக் குவித்த வெற்றியாளர்க ளை ஆராய்ந்தவர்கள் அவர்கள் கூட 60 சதவீத முயற்சிகளில் தான் வெற்றி அடைந்து இருக்கி றார்கள் என்று தெரிவிக்கி றார்கள்.

அதாவது நாம் போற்றும் பெரிய வெற்றியாளர்களே பத்து முயற்சிகளில் நான்கு முயற்சி களில் தோற்றுப் போ கிறார்கள் என்றால் தோல்வி சாதாரண மான ஒன்று தானே. அதில் வெட்கித் தலை குனிய என்ன இருக் கிறது?

இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் அமெரிக்கா பொருளாதா ர நிலையில் மிகவும் சீரழிவை சந்திக்க வேண்டி வந்தது. வேலை யில்லா திண்டாட்டம், வங்கிக ளில் பணமில்லாமை எல்லாம் மக்கள் மனதில் தங்கள் எதிர் காலத்தைப் பற்றி பெரியதொரு பயத்தை ஏற்படுத்தியது. அப்போ தைய ஜனா திபதி பொருளாதார த்தில் பட்டம் பெற்றவர். ”இப்படிப் பட்டவராலே யே நம் நாட்டின் இன்றை ய நிலை யைத் தவிர்க்க முடியவில்லையே, இனி நம் எதிர்காலம் என்ன?” என்ற பயம் மக்களிடம் பரவி இருந்தது.

அந்த சமயத்தில்தான் ஃப்ராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். அவர் தன் நாட்டு மக்களு க்கு ஆற்றிய முதல் உரையில் சொன்ன செய்தி வரலாற்று சிறப்பு மிக்கது. “நாம் பயப்பட வேண்டிய ஒரே விஷயம் பயமே. ஏனெ னில் அந்த இனம் புரியாத, ஆதாரமற்ற, உண்மை யைச் சார்ந்தி ராத பயம் நம் பின்னடைவை மீறி முன்னேற விடாமல் நம்மை செயலிழக்க வைப்பதில் வல்லதாக இருக்கிறது”

அவர் அதிபராக இருந்தகாலத்தில் இரண்டாம் உலகப்போரையும் மீறி அமெரிக்கா பொருளாதாரத்தில் முன்னேறியதோடு வல்லர சு நாடாகவும் உருமாறியது. அதற்கு மிக முக்கிய காரணம் பயத் தை நிராகரித்து தைரியத்தைத் துணை கொண்டு செயல்படும் ஒரு தலைமை அந்நாட்டிற்கு இருந்தது தான் என்பதில் சந்தேகம் இல்லை.

அதெல்லாம் சரி, பயம் இயல் பாகவே வந்து விடுகிறதே, அதை விலக்கி வெற்றி பெறுவது எப்படி என்று கேட்போருக்கு சில ஆலோச னைகள்-

முதலில் பயத்திற்கான காரணங்கள் கற்பனையா இல்லை உண் மை தானா என்று அலசுங்கள். அந்த காரணங்கள் உண்மைக்குப் புறம்பான அனுமானத்தின் அடிப்படையில் ஏற் பட்டவையாக இருந்தால் உறுதியான மனத்தோடு புறக்கணி யுங்கள். அந்த கற்பனை காரணங்களிலும், அனுமான ங்களிலும் அதிக நேரம் எண்ணங்க ளைத் தங்க விடாதீர்கள். ஏனென்றால் அதிக காலம் அந்த எண்ணங்களிலே யே இருந்தால் அதையே உண்மை என மனம் நம்ப ஆரம்பித்து விடும். பின் பயம் நம்மை ஆட்கொள்ளவும் ஆரம் பித்து விடும்.

ஒருவேளை அந்தக் காரணங்கள் கற்பனை அல்ல, உண்மையின் அடிப்படையில் தான் எழுந்தவை என்றானால் அந்தக் காரணங்க ளை அங்கீகரியுங்கள். உண்மையை புறக்கணிப்பது எக்காலத்தி லும் நல்லதல்ல. ஆனால் பயத்தி னால் செயலிழப்பதும் புத்திசாலித் தனமல்ல என்பதை மறந்து விடாதீர் கள். பயப்படும் படியான விளைவு களையும், சூழலையும் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவு பூர்வமாக சிந்தியு ங்கள்.

மனம் உடனடியாக அந்த செயலை செய்யாமல் இருப்பதே சிறந்த து என்று உடனடியாகச் சொல்லும். அந்த செயல் தேவையற்றதா கவும், எவ்விதத்திலும் நம் முன்னேற்றத்திற்கு உதவாததாகவும் இருந்தால் இரண்டாவது சிந்தனை யே தேவையில்லை. அச்செய லைத் தவிர்ப் பது புத்திசாலித்தனம். ஆனால் அந்த செயல் நம்மை நல்ல சூழலுக்கு மாற்ற உதவுவதாகவும், உண்மை யான முன்னேற்றத்திற்கு உதவக் கூடிய தாகவும் இருந்தால் செயல் படாமல் இருப்பது ஒரு புத்திசாலித் தனமான தீர்மானம் அல்ல என்பதை உணருங்கள்.

அதிகம் பாதிக்கப்படாமல் செயலைச் செய்து முடிக்கும் வழிகளை சிந்தியுங்கள். இந்த சூழ்நிலைகளை சமாளித்து வென்றவர்கள் என்ன செய்தார்கள், எப்படி சமாளித் தார்கள் என்றும் கவனியுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள் ளுங்கள்.

தோல்வியைப் பற்றிய பயம் என் றால் ஒரு உண்மையைத் திரும் பத் திரும்ப மனதில் பதியுங்கள். ”இந்த உலகில் எதிலுமே தோல்வி அடையாதவன் இது வரை தோன்றவில்லை. இனி தோன்றப் போவதுமில்லை”. நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணரு ங்கள். முன்பு கூறியது போல மாபெரும் வெற்றியாளர் கூட பத்து முயற்சிகளில் சராசரியாக நான்கு முயற்சிகளில் தோல்வி அடை கிறார்கள் என்றால் தோற்பதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?

மரியோ புஸோ எழுதிய “காட் ஃபாதர்” நாவலில் முக்கிய கதா பாத்திரமான காட் ஃபாதர் பயத் தையே அறியாதவனாக படைக் கப் பட்டது. அதற்கு முக்கியமான காரணம் அவன் ”ஒரு மனிதனுக் கு ஒரு விதி தான் இருக்க முடியும்” என்று விஷயத்தை உறுதியா க நம்பியது தான். என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்றால் பின் பயந்து நடுங்க என்ன இருக்கிறது?இது கூட ஒரு வகையில் பயத்தைப் போக்கும் சித்தாந்த மல்லவா?

நீங்கள் இறை நம்பிக்கை உடைய வராக இருந்தால் உங்களுக்கு கடவுளின் துணை என்றும் இருப்பதாக நம்புங்கள். கடவுள் துணையாக இருக்கையில் எது தவறாகப் போக முடியும்? தன்ன ம்பிக்கையைக் குறைக்க முடிந்த பயம் கடவுள் நம்பிக்கை முன் சக்தியற்றுப் போவது நிச்சயம்.

அப்படியும் பயம் போகவில்லை என்றாலும் பயந்து கொண்டே ஆனாலும் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பியுங்கள். செயல் புரிய ஆரம்பித்த வுடனேயே பெரும்பாலான பயங்கள் நம்மை விட்டு தானாக அகல ஆரம்பிக்கின் றன. சூரியனைக் கண்ட பனித் துளி போல அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகின் றன.

மொத்தத்தில் எப்படியாவது பயம் உங்க ளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவ தற்கு முன் பயத்தை உங்கள் கட்டுப்பாட்டு க்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங் கள் கண்டிப்பாக உணர்வீர்கள்.

 => நன்றி என்.கணேசன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: