Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பள்ளி மாணவர்களுக்கு கடிவாளம் இல்லையா: அதிவேக பைக்கில் பஞ்சாய் பறக்கும் பிஞ்சுகள்

பெற்றோர் கொடுக்கும் ஊக்குவிப்பு காரணமாக, பள்ளி மாணவர் கள் பலர் பைக்கில் பறக்கின்றனர்; மற்ற மாணவர்களையும் பைக் கில் அழைத்துக்கொண்டு, ஒரே வாகனத்தில் செல்கின்றனர். விதி முறை மீறி வாகனங்களை இயக்கும் போது, விபத்து ஏற்பட்டு உயிரிழப்புக ளும் நேரிடுகின்றன.

குறைந்தபட்சம் 50 சி.சி., திறன் கொ ண்ட மோட்டார் வாகனங்களை இயக் க வேண்டுமென்றால், 18 வயது நிறைவடைய வேண்டும். அதற்கு முன்பே, வாகனத்தை ஓட்ட வேண்டுமென்றால், மோட்டார் வாகன லைசென்ஸ் பெற்ற பெற்றோரின் மேற்பார்வையில், அவர் களது பெய ரிலுள்ள 50 சி.சி., திறன் கொண்ட மோட்டார் வாகன த்தை மட்டுமே, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஓட்டலாம். அதற்கு 16 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

அதற்கு வயது சான்றை சமர்பித்து, கல்லூரியில் ஒப்பந்தச்சான்று பெற்று, பெற்றோரின் லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம், இன்சூரன்ஸ் சம ர்பித்து, அதற்கென்று மோட்டார் வாகன லைசென்ஸ் பெற வேண்டு ம். இதற்கு தனி நடைமுறை உள்ளது. இதை பெரும்பாலானவர்கள் பின்பற்றுவதில்லை. 18 வயது நிறைவடைந்தவர்கள் மட்டுமே, வயது, முகவரி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை சமர்பித்து மோட்டார் வாகன லைசென்ஸ் பெறுகின்றனர்.

ஆனால், பள்ளியில் படிக்கும் காலத்தில், 13 வயது நிறைவடைந்த மாணவர்கள் தற்போது பைக்கை சர்வ சாதாரணமாக ஓட்டுகின்ற னர். நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், கண்மூடித்தனமாக பைக்குகளை ஓட்டும்போது, எதிரே வேகமாக வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களில் மோதி விபத்து ஏற்படு கிறது. இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணமாகி விடுகின்றனர். பொள்ளாச்சி நகரில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், சர்வ சாதாரணமாக 100 சி.சி., பைக்குகளில் பறக்கின்றனர். இவர் களை பார்க்கும்போது, பொள்ளாச்சியில் போலீசாரோ, மோட்டார் வாகன ஆய்வாளர்களோ இருக்கின்றனரா என்ற சந்தேகம் ஏற்படுகி றது.

உயிரை மாய்க்கும் சாகசம்:

பைக்குகளில் 200 சி.சி.,க்கும் அதிகமானவை, 80 கி.மீ., முதல் 150 கி.மீ., வேகத்தில் சர்வசாதாரணமாக பறக்கும். இந்த பைக்குகளில் செல்லும் மாணவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை. சரிவர கையாள தெரியாததால், விபத்து ஏற்படுவதோடு, உயிரிழப்பும் ஏற் படுகிறது. இவற்றை அதிக விலை கொடுத்து, தங்கள் குழந்தைக ளுக்கு பெற்றோர் வாங்கிக்கொடுக்கின்றனர்.தனது மகனின் ஆயு ளைப்பற்றி கவலைப்படாத பெற்றோர், ஆசையை நிறைவேற்ற எதை க் கேட்டாலும் வாங்கிக்கொடுத்து, பெருமைப்படுகின்றனர்.

– in dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: