Sunday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரம்மனுக்கு அருளிய நாதர்!

முக்தி தரும் தலங்களில் முக்கியமானது காஞ்சி மாநகர். இங்கி ருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காவேரிப்பாக்க த்திலிருந்து சோளிங்கர் செல்லு ம் சாலையில் உள்ளது தியாமுக ச்சேரி. தற்போது மருவி சேரிஐய் யம்பேட்டை என்று அழைக்கப் படும் இக்கிராமத்தில் உள்ளது பழைமையான கோதண்டராம ஸ்வாமி திருக்கோயில். பிரம்ம தேவனுக்கு திருமால் பரமபத நாதனாக காட்சியளித்த தலம் இது.

இத்திருக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீகணகவல்லி சமேத ஸ்ரீ பரமபதநாதஸ்வாமியும், ஸ்ரீ சீதா லட்சுமண ஹனுமத் சமேத ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமியும் அருள் பாலிக்கிறார்கள். ஆலயத்திற்கு வெளியே சிறிய திருவடிக்கு தனி சந்நிதி உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த மகாசம்ப்ரோக்ஷணத் திற்கு பிறகு ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. திருக் கோவலூரின் அபி மானத் தலமாக விளங்குகிறது. பரமபதநாதர் அழகிய கோலத்தில் அருள்கிறார். பிரதான தெய்வமாக பரமபதநாதர் இங்கு சந்நிதி கொண்டிருந்தா லும் அரசாங்க பதிவேடுகளில் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

தினமணி நாளிதழில். . .

Leave a Reply