Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காக்கைகளுடன் ஒரு நாள் . . .

காக்கைகள் பற்றிய ஏராள ரிலிஜியஸ் நம்பிக்கைகள் இந்தியா வில் உண்டு.சனிபகவானின் வாகனமாகத் துதிக்கப்படும் இப் பறவைக்குத்தான் பித்ருக்களுகான பிண்டம் வைக்கிறார்கள். எனவே இந்துக்கள் எவரும் இப்பறவையைக் கொல்வதில்லை. பயமும் கூட எங்கே சனி பகவான் சப்போர்ட்டுக்கு வந்து விடு வாரோ என்று! ஆனால் அமெரிக்காவிலும், கனடாவிலும் ‘ க்ரோ ஹன்டிங்’ என்பது ஒரு பாப்பு லர் ஸ்போர்ட். காக்கை களுக்குக் பிடிக்காத டம்மி ஆந்தையை செட் பண்ணி, அவைகள் ஈர்த்து ஜாலியாக சுட்டுத் தள்ளுகிறார் கள்.
கோர்விடே என்னும் குடும்பத்தைச் சார்ந்த காக்கைகளில், மூன்று இந்திய இனங்கள் இங்கு பிரபலம்! அதில் முழுக் கருப்பில் இருக்கும் பெருங்காக்கை, மலைப் பிரதேசங்களோடு சரி. இவைகளுக் கு ஆயுசு கெட்டி 70 வருட ரெக்கார்டு கூட இருக்கிறது. அண்டங் காக்கை கள் கிராமபுறத்திலும் அதை ஒட்டிய வனப்பிரதேசங் களிலும் பிரசித்தம்! இங்கு பிற விலங்குகளால் கொல்லப் பட்டு கிடக்கும் பிரேதத்தின் இருப்பிடத்தை இலை பறக்கும் திசையை வைத்துக் கண்டறிகிறார்கள்! நாம் எங்கும் எப்போதும் பார்க்கும் வீட்டுக் காக்கைகளுக்கு கழுத்து மட்டும் கிரே நிறம்!
மேலை நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காக்கை இனங்கள் இருக்கின்றன். வடமெரிக்க வகை, மீன் காக்கை, புளோரிடா வகை, இங்கிலீஷ் பிளாக் என்று பற்பல வெரைட்டிகள்! இதில் ஹூடட் காக்கை, சத்தியமாக வெள்ளை நிறத்தில் தான் இருக்கிறது!
ஈகோ இல்லாமல் ஒற்றுமையாய் வாழ்வதில் இரையைப் பகிர் ந்து உண்பதிலும் காக்கைகளுக்கு நற்பெயருண்டு. எங்கேனும் சிதறிக் கிடக்கும் இரையைப் பார்த்துவிட்டால், தன் சகாக்களை அழைத்த பிறகே உட்கொள்ளும். இவை பெரும்பாலும் மனிதர்களை, எவ்வளவு ஆசையாக சனி கிழமை யில் உணவு வைத்தாலும் நம்புவ தில்லை. மனிதன் தாக்கி விடுவா னோ என்று, அவ நம்பிக்கையோடு கள்ளப்பார்வை பார்த்தபடியே இரை பொறுக் கும்.
காக்கைகளின் டைனிங் ஐயிட்டங்கள் இன்னதென்றில்லை. எச்சி ல் சாதத்திலிருந்து மனிதன் கழித்தொதுக்கும் அனைத்து கிச்சன் வேஸ்டேஜ் வரை எதையும் உட்கொள்ளும். தவிர எலி, பல்லி, ஒணான், தவளை, வெட்டுக்கிளி போன்ற சிறுபிராணிகள் எல்லா வற்றையும் நாள் கிழமை பார்க்காமல் வெளுத்துக்கட்டும். பிற இனத்து முட்டைகளை திருடி சாப்பி டுவதில் கில்லாடிகள்! இறந்து கிடக்கும் பிணங்களைக் கூட இவை விட்டு வைப் பதில்லை. ஸ்கேவெஞ்ஜர்!
ஏதேனுமொரு மின் கம்பத்திலோ அல்ல து முற்றத்திலோ காக்கைகள் ‘ லாலி பாப்புடன்’ சினேகமாய் அமர்ந்திருக்கும் போது கூட, இவைகளின் கண்கள் மட்டும் கீழே உற்று நோக்கிக் கொண்டி ருக்கும். பார்வை படா ஷார்ப். சன்னஞ்சிறு ஜீவன்களின் இயக்கத் தைக்கூட எளிதில் உணர்ந்து டூமில் கேட்ச் பிடித்து விடும்!
இவை தம் இருப்பிடத்திலிருந்து அதிகாலையில் திரவியப் பய ணம் மேற்கொள்ளும்போது, கோடு போட்டாற்போல நேர்கோட்டி ல்தான் பயணிக்கும்! மாலையில் ரிட்டர்ன் ஜர்னியும் இப்படியே. இடையில் இட வலம் திரும்புதல் கிடையாது. இதனால் தான் ஆகாய தூரத்தை அளப்பதற்கு அளவு கோலாக ‘ க்ரோஃபிளை ஸை’ வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக காக்கைகள், பகற் பொழு தில் இரைதேடும் யாத்திரையை, தம் இணையுடனோ அல்லது மற்றும் சில உறவுக்காக்கைகளுடனோ ஒரு பிக்னிக் மாதிரி கழிக்கின்றன. இப்படி இவை எத்தனை தூரம் வந்துவிட்டாலும், இரவுப் பொழுதைக் கழிக்க தம் இருப்பிடத்திற் கே மீண்டு விடுகின்றன. இந்த இருப்பிடம் என்பது பெரும்பாலும் ஒரு மரங்கள் அடர்ந்த பகுதியா கவே இருக்கும். இங்கேவந்து சேர்ந்தவுடன் பெரும் ஆரவாரத் துடன் ஒன்றுக் கொன்று தம்மை அறிவித்துக் கொண்டு ஓய்வெடு க்கத் துவங்கும்.
காக்கைகளின் காதல்களில் நிறைய சுவாராஸ்யங்கள் உண்டு! டீன் ஏஜ் காக்கைகள், கல்லூரி திறக்கும் ஜூன்,ஜூலை மாதங்க ளில் தான் ஜோடி சேர்கின்றன. கொட்டை போட்ட பழஞ்ஜோடிக ளும், தம் காதலை இப்பருவத்தி ல்தான் புதுப்பித்துக் கொள்கின்ற ன. இப்படி இவை ஒரு முறை ஜோடி சேர்ந்துவிட்டால், ஆயுளு க்கு அதே ஜோடிதான்!
காதல் சீசனில் ஆண் காக்கை தன் பழைய மனைவியிடம் புதிய காதலைத் துவங்கும். இத்தருணத்தில் ஆண் காக்கை கிடைக்கி ன்ற சுவையான இரையை விழுங் காமல் கொண்டுவந்து, மனை விக்கு முத்தமிட்டவாறே ஊட்டி விடும். சட்சட்டென்று சிறகு கோதலும், சிறு துழாவலுமாய்  மனைவியைச் சிலிர் ப்பூட்டும். கணவன் காதலை புரிந்து கொண்ட மனைவி, தன் முரட்டுக் குர லை வெவ்வேறு பிட்சிலும், வெவ் வேறு ரிதத்திலும் கரைந்து காட்ட கணவன் காக்கை புளகாங் கித் துப் போகும்.
அபரிமித சந்தோசத்தில் காக்கை அலை அலையாய் ரெக்கை வீசி சட்டெ ன்று மேலே பறக்கும். திடீர் திசை மாற்றி அம்பு போல் கீழே பாயும். பின் ஸ்லோமோஷ னில் மனைவி அமர்ந்திருக்கும் கிளை யை அடையும்.
இந்த ஏரோபாட் வித்தைகள்க் கண்ணு ற்று திகைத்துப் போயிருக்கும் மனைவி யை, இரவுப் போர்வைக்குள், இறகின் நிறமும், கத கதப்பும் காட்டிக்கொடுக்காமல் ஒத்துழைக்க ஆண் காக்கை யாருக்கும் தெரியாமல் அந்தரங்க இல்லற வாழ்வில் ஈடுபடும்.
 
அடுத்து நிலமட்டத்திலிருந்து 20-30 அடி உயரத்தில் டிரைபாட் ஸ்டாண்ட் மாதிரி இருக்கும் கிளைப் பிரிவுகளில் சிறு சிறு குச்சி, நார்,பஞ்சு போன்றவற்றைக் கொ ண்டு ஒரு அவசரக்கூட்டை அமைக்கும். இக் கூட்டின் குழிவில் 3-6 முட்டைக ளையிட்டு பெட்டை அடைகாக்க, ஆண் இரை கொணர்ந்து உதவும்!  முட்டைகள், நீல அல்லது பச்சைப் பின்னணியில் மண்ணிறப் புள்ளிகளைக் கொண்டவைகள்!  முட் டையிலிருந்து வெளிவந்து ஆறு வார காலத்துள், குஞ்சுகள் சிறகு முளைத்துப் பறக்கத் தயாராகி விடு கின்றன.
 
இந்த இன்டெலிஜண்ட் காக்கை களை பெட்பேர்டாக, பல மே லை நாட்டினர் வளர்க்கிறார்க ள். இக்காக்கைகள் தம் முரட்டு க் குரலை மறந்து விட்டு, மனி தர்களைப் போல மென்மையாக மிமிக்ரி கூட செய்கிறதாம்!
– டாக்டர். ஆர். கோவிந்தராஜ், கால்நடை மருத்துவர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: