Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அணு விஞ்ஞானி “ஐன்ஸ்டீனே” வியந்து பாராட்டிய (ஹ்யூமன் கம்ப்யூட்டர்) சகுந்தலா தேவி!

சினிமா பிரபலங்களையும், கிரிக்கெட் பிளேயர்களையும் தாண்டி ‘ரோல் மாடல்’களை யோசிக்க முடியாத இந்திய சமூகத்தில், பள்ளி – கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஒரு ரோல் மாடல் கணித மேதை சகுந்தலா தேவி. ஆனால், அவர் இப்போது நம்மிடையே இல்லை!
 
‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ என்று கொண்டாடப்பட்ட சகுந்தலா தேவி யிடம், 13 இலக்க எண்ணை, இன்னொரு 13 இலக்க எண்ணால் பெருக்கச் சொன்னால், அதற்கான விடையைச் சொல்ல அவருக் கு ஒரு சில விநாடிகளைத் தவிர பென்சில், தாள், கால்குலேட்டர் என எதுவும் தேவைப்படாது.
 
சுமார் 33 வருடங்களுக்கு முன்பு… அதாவது கணினி என்பது பிரமா ண்ட அளவுகளில் ஆராய்ச்சி மற்றும் கல்விக் கூடங்களில் மட்டுமே இருந்த காலகட்டத்தில், சகுந்தலா தேவியை லண்டன் மாநகரின் இம்பீரியல் கல்லூரிக்கு அழைத்தார்கள் பேராசிரியர்கள். அவரிட ம் 201 இலக்கங்க ளைக் கொண்ட ஒரு எண்ணைக் கொடுத்து அதன் 23- வது வர்க்க எண்ணைக் கேட்டார்கள். 28 விநாடிகளில் சகுந்தலா பதில் சொல்ல, வாய டைத்துப் போனார்க ள் அந்தப் பேராசிரியர்கள்.
 
அந்தரத்தில் வித்தை காட்டும் ஒரு சர்க்கஸ் கலைஞனுக்குப் பெண்ணாகப் பிறந்த சகுந்தலா, சிறுமியாக இருக்கும்போது சீட்டு க்கட்டுகளில் இருக்கும் 52 அட்டைகளை வைத்துப் பல வித்தை களைக் காட்டினார். அந்த வித்தைகள் அனைத்துக்கும் கணிதம் தான் அடித்தளம் என்பதைத் தாண்டி சகுந்தலா  வின் தந்தையால் அவரது பெண் ணின் திறமைகளைப் புரிந்து கொள்ள முடிய வில்லை. சகுந்தலாவை நல்ல பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிப் படிக்க வைக்கக் கூட இயல வில்லை அவரால்.
 
ஏழ்மைக்கு இடையிலும் தன்னார்வத்தோடு தன் முயற்சிகளைப் பட்டை தீட்டியபடியே இருந்தார் சகுந்தலா. ஐன்ஸ்டீன் மூன்று மணிநேரம் செலவழி த்துக் கண்டுபிடித்த ஒரு கணக்குக்கான விடையை சகுந்தலா தேவி மிகச் சில நொடிகளி ல் ஐன்ஸ்டீன் முன்னிலையிலேயே தீர்த்தார். அசந்துபோன ஐன்ஸ்டீன், சகுந்த லாவின் திறமையைப் பாராட்டிச் சான்றிதழும் அளித் திருக்கிறார்.
 
ஆனால், காமதேனுவே கிடைத்தாலும் அதை காராம்பசுவாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் நம் நாடு, சகுந்தலா தேவியை ஒரு ஜோசியக்காரராக மட்டுமே பயன்படு த்திக்கொண்டது. மனக் கணக்காகவே எப்படி அவ்வளவு பிரமாண்டக் கணக்குகளை சகுந்தலா தீர்க்கி றார் என்பதை சகுந்தலாவிடமிருந்து கடைசி வரை தெரிந்து கொள்ளா மலேயே இருந்துவிட்டோம். கடந்த வாரம் பெங்களூரில் மரண மடைந்த சகுந்தலாவுடனேயே, அவரது மனக்கணக்கிடும் திறமை யும் மரித்துவிட்டது!

– விகடன்

One Comment

  • Anonymous

    Indian Politicians are very worst, they are interested only to earn money for themselves, Selfish fellows.

    One should have made arrangements like a special college for outstanding students in mathematics and made them study under Shakunthala Devi’s guidance and one should learn maximum from her. What is the use of talking now about this?

Leave a Reply