Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்ணகிக்கும் சகுந்தலைக்கும் உள்ள‍ வித்தியாசம் என்ன‍?

*பொதுவாகவே பெண்கள்தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேசிக் கொண்டே இருப்பார்கள் என்ற பொது வான குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. ஆனால், பண்டைய இலக்கிய ங்களில் வரும் பெண்கள் ரத்தினச் சுருக்கமாகப் பேசவும் தெரியும், நீட்டி முழக்கி, சுற்றி வளைத்துப் பேசவும் தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். உதாரணத்து க்கு: கண்ணகி தன் கணவன் கொலை செய்யப்பட்டான் என்ற செய்தி கேட்டுக் கொதித்தெழு ந்து, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்கச் செல்கிறாள்.

*பாண்டியன், “”நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்… யார் நீ?” என்று ஒரு கேள்விதான் கேட்டான் . அதற்குக் கண்ணகி.

“தேரா மன்னா” என்று ஆரம்பித்து, தன் குலம், கோத்திரம் தொடங்கி, ஊழ்வினை யை இழுத்து, “உன்னால் கொலை செய்யப் பட்டவன் மனைவி” என்று ஆதியோடந்த மாய் ஒரு கேள்விக்கு ஒன்பது பதில்கள் சொல்லி பாண்டியனைத் திணறடித்தாள்!

*இதற்கு நேர் எதிராக, காட்டில் கந்தர்வ மணம் புரிந்து மனைவி யையும், மகனையும் மறந்து நாட்டை ஆளுகின்றான் துஷ்யந்தன். மனைவி சகுந்தலை தன் மகனுடன் அரசன் துஷ்யந்தன் சபைக்குச் செல்கி றாள். அப்போது துஷ்யந்தன், “பெண்ணே நீ யார்? எதற்காக வந்தாய்? இந்தக் குழந்தை யார்? இதற்கும் உனக்கும் என்னத் தொடர்பு? எனப்பல கேள்விகள் கேட்கிறான். இவ்வளவு கேள்விகளுக் கும் சகுந்தலை சொன்ன ஒரே பதில்,

“மகனே! உன் தந்தைக்கு வணக்கம் சொல்’!

 *துஷ்யந்தன் கேட்ட‍ பல கேள்விக்கு ஒரே பதிலைச்சொல்லி,  துஷ்யந்தனை திணறடித்தாள்  என்னவொ ரு நெத்தியடியான பதில் !

பாண்டிய மன்ன‍ன் கேட்ட ஒரு கேள்விக்கு பல பதில்களை சொல்லி,  நேரத்தை வீணடித்த‍ கண்ணகிக்கும், பல கேள்விக ளுக்கு ஒரே பதிலைச்சொல்லி கேள்வி கேட்ட‍வரையே திணற டித்த‍ சகுந்தலைக்கும் உள்ள‍ வித்தியாசம் இதுதானுங்கோ!

– பேகம் பானு, தமிழ் கருத்துக்களம்

Leave a Reply