Tuesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விரைவில் அறிமுகமாகும் “டட்சன் குறைந்த விலை கார்கள்”

நிசான் நிறுவனம் 32 ஆண்டுகளுக்கு பின் டட்சன் பிராண்டில் மீண்டும் குறைந்த விலை கார்களை விற்பனைக்கு கொண்டு வர வுள்ளது. குறைந்த விலை காராக டட்சன் கார்கள் இருந்தாலும் மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் தரம்முடன் விளங்கும்.

சர்வதேச அளவில் டட்சன் கார்கள் வருகிற ஜூலை 15ம் தேதி தில்லி யில் நடைபெற உள்ள விழாவில் அறிமுகப் படுத்த உள்ளனர். முதற் கட்டமாக 2014 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும். அதனை தொடர்ந் து இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் தென்ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வரும்.

டட்சன் பட்ஜெட் கார்கள் ரூ 3.5 முதல் 4 லட்சத்திற்க்குள் இருக் கும். டட்சன் கார்கள் 5 கதவு களை கொண்ட ஹேட்ச் பேக் காராக இருக்கும்.  ரெனோ- நிசான் நிறுவனத்தின் சிஇஒ  கார்லோஸ் கோஸ் டட்சன் பிராண்ட் காரினை அறிமுகம் செய்யலாம் என எதிர் பார்க்கப் படுகின்றது.

இந்தியாவில் ஆண்டிற்க்கு 1.5 லட்சம் கார்களை விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படு கின்றது. 2016 ஆம் ஆண்டிற்க்குள் 10 டட்சன் மாடல் கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டு ள்ளனர்.

-thanks to automobiletamilian

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: