இந்த இடுகையில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள புகைப் படத்தை பார்த்தபின், கட்டுரையை முழுமையாக படிக்கவும்.
ஒரு கைக்குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை ஒரு பெண் ஜன்னல் வழியே பிடித்துக்கொண்டிருக்கிறார். ஏன் ? வீட்டினுள் ஒரே புகை மண்டலமாக இருக்கிறதே. என்ன ஆயிற்று ?
# 2010 பிப்ரவரி மாதம். நியூ யார்க் கில் உள்ள Bronx apartment என்னும் அடுக்கு மாடி குடியிருப் பின் 5வது மாடியில் ஒரு வீட்டில் திடீரென தீ பிடித்துவிட்டு. அதில் வசித்த 8 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். ஒரே புகை மண்டலம். எல்லோருக்கும் மூச்சுத்திணறல். இன்னொரு பகுதியில் தீ பரவத்தொடங்கியது. மனித மூளை மழுங்கும் சமய ம் இது. இந்நேரத்தில் நாம் என்ன செய்திருப்போம் ? என்ன செய்வ தென்று தெரியாமல் கூச்சல் போடுவோம்.
ஆனால் படத்தில் இருக்கும் 18 வயது பெண் Vanessa Scott என்ன செய்தார் தெரியுமா? வீட்டில் இருந்த Zaniwah Alexandra என் னும் 7மாத சொந்தக்கார பெண் குழந்தையை ஜன்னல் இடுக்கின் வழியே வெளியே அந்தரத்தில் தொங்கவிட்டு கையால் பிடித்துக் கொண்டிருந்தார். ஏன் ?
“உள்ளே மூச்சுவிட முடிய வில்லை. தீ பரவத் தொட ங்கியது. புகையால் கண் ணுக்கு எதுவும் தெரிய வில்லை. குழந் தையாவது மூச்சு விடட்டும், பிழை த்துக் கொள்ளட்டும் என ஜன்னல் வழி யே குழந்தையை காற்றில் தொங்க விட்டு பிடித்துக் கொண்டிருந்தேன்” என அவர் கூறுகிறார். தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் அனைவரையும் பத்திர மாக மீட்டனர்.
– Karthick Balajee L via Hemalatha Mps on facebook
kanneer malkum katchi thai pasaththukku oru alave illaiya o my god ninakkave alukai varukinrathu
தங்கள் அருமையான பதிவு