Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

+2 முடிச்சாச்சு, இப்ப‍ என்ன‍ படிக்க‍ப்போறீங்க?

பிளஸ் டூ வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தவிர, மருத்துவம் தொடர் பான பல்வேறு படிப்புகளைப் படிக்கலாம்.

பிளஸ் டூ வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடப்பி ரிவுகளை எடுத்துப் படித்த மாண வர்களின் கனவு, டாக்டராக வேண்டும் என்பதுதான். தமிழ் நாட்டில் மருத்துவக் கல்லூரி களில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களின் எண்ணிக்கை இரண்டா யிரத்திற்கும் குறைவு என்பதால் பிளஸ் டூ தேர்வில் மிக மிக அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்குத்தான் எம் பி பி எஸ் படிப்பில் இடம் கிடைக்கும் சாத்தியம் உள்ளது. உயிரியல் படிப்புகளை எடுத்துப்படித்த மாணவர்களுக்கு மருத்துவம் மற்று ம் துணை மருத்துவம் தொடர்பான பல்வேறு படிப்புகள் உள்ளன. அதுபற்றிய அறிமுகம் இதோ…

எம்.பி.பி.எஸ்.

டாக்டர் பணி என்பது நல்ல வருவாய் தரக்கூடிய, பொது மக்க ளின் மரியாதைக்குரிய முக்கியப் பணி. டாக்டராக வேண்டு மானால் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும். இது, ஐந்தரை ஆண்டு படிப்பு. தமிழ் நாட்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரி களில் எம் பி பி எஸ் படிப்பில் சேர நுழை வுத் தேர்வு இல்லை. தற்போது இந்த ஆண்டில் எம்பிபிஎஸ், பி டி எஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு (NEET) நடத்து வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளி யிடப்பட்டுள்ளது. இந்தப் பொது நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரி வித்துள்ள போதிலும்கூட, தற்போது நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக் கான மாணவர் சேர்க்கை நடத்தப் பட்டு வரும் தமிழகத்தில், அதே நிலை இந்த ஆண்டும் தொடருமா என்பதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை மாணவர் கள் எதிர் பார்த்து இருக்கிறார்கள். எனினும், ஆந்திரம், காஷ்மீர் நீங்கலாக மற்ற மாநிலங்களில் உள்ள அரசு மருத்து வக் கல்லூரி களில் உள்ள 15 சதவீத இடங்களில் சேர விரும்பும் தமிழக மாணவர்கள் இந்தப் பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இதேபோல புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர் களும் இந்தத் தேர்வை எழுத வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மாணவர்க ளைச் சேர்ப்பதற்கு தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. எம் பி பி எஸ் படித்து முடித்த மாணவர்கள், மருத் துவப் பயிற்சிக்குப் பிறகு இந்திய மருத் துவக் கவுன்சலில் தங்களை டாக்டர்க ளாகப் பதிவு செய்த பிறகே டாக்டராக பணி புரிய முடியும். எம்.பி.பி.எஸ் முடி த்துவிட்டு அரசு பணியில் சேர விரும்பு பவர்கள் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர் வாணையம் நடத்தும் தேர்வு எழுதி அந்த வாய்ப்பைப் பெறலாம். மத்திய அரசு பணிக்குச் செல்ல விரும்பினால், அதற்காக மத்திய அரசு தேர்வாணையம் சிறப்புத் தேர்வை நடத் துகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் பாதுகாப்பு, ரயில்வே துறைக ளில் டாக்டராக பணியாற்றமுடியும். மருத்துவக் காப்பீட்டு நிறுவ னங்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மெடிக்கல் டிரான்ஸ் க்ரிப்ஷன், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு உள்ளது. அரசு மருத்துவ மனைகளில் பணிபுரியும் டாக் டர்கள், முது நிலைப் பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன.

பி.டி.எஸ்.

பல் மருத்துவத்துக்கான இளநிலைப் பட்டப் படிப்பு இது. மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் படிக்க வேண்டும். பல் மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாது, முகச் சீரமைப்பு, பல் லை அழகுபடுத்துதல் போன் றவை முக்கியத்துவம் பெற்று வருவதால் பல் மருத்துவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரே ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டு மே உள்ளது. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் பல இருக்கின்றன. அரசு ஒதுக்கீட்டின்கீழ் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு ஒற்றைச்சாளர முறை யில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ் படிப்புக்கு அடுத்த படியாக பிடிஎஸ் படிப்யை மாணவர்கள் தேர்வு செய்கி றார்கள். பிடி எஸ் படித்து முடித்து பல் மருத்துவ கவுன்சலில் பல் மருத்து வராகப் பதிவு செய்த பிறகு பல் மருத்துவராகப் பணி புரியலாம். அனைத்து கார்ப்ப ரேட் மருத்துவ  மனைகளிலும் பல் சிகிச்சைக் கென்றே தனி யாக பிரத்யேகப் பிரிவு செயல்படுவ தால் அங்கேயும் வேலை வாய்ப்பு கிடைக்கும். பல் மருத்துவ சிகிச் சைக்கு தேவையான பொருட் களைத் தயாரிக்கும் நிறுவனங் கள், ஆராய்ச்சிக் கூடங்களில் வேலை வாய்ப்பு உள் ளது. பேரா டென்டல், டென்டல் மெட்டீரியல் அண்டு ஓரல் ஹைஜீ ன், டென் டல் டெக் னீஷியன் போன்ற டிப்ளமோ படிப்புகளில் பிளஸ் டூ படித்து முடி த்த மாணவர்கள் சேரலாம்.

பி.எஸ்சி. நர்சிங்

பொறுமை, அர்ப்பணிப்பு, ஈடுபாட்டுடன் கூடிய பணி இது. பிஎஸ்சி நர்சிங் படிப்பைக் கற்றுத் தர ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. இது நான்கு ஆண்டு கால பட்டப் படிப்பு. இந்தப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவிகள் சேர்க்கப்படுகின் றனர். நர்சிங் டிப்ளமோ படிப்பிலும் மாணவிகள் சேரலாம். டிப்ளமோ படித்த மாணவிகள், மருத்துவ மனைகளில் நர்சாக பணிபுரிந்து அனுபவம் பெற்ற பிறகு, பட்டப் படிப்பில் சேர்ந்து படிப்பத ற்கான வாய்ப்பும் இரு க்கிறது. படிப்பை முடித்து மாநிலத்தில் உள்ள நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்வதன் மூலம் அரசு மருத்துவ மனைகளில் வேலை வாய்ப்பைப் பெற முடியும்.

அரசு வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலேயே அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன் ற இடங்களில் நர்சு பணிக ளுக்குத் தகுதியுடையவர்கள் தேர்வு செய் யப் படுகிறார்கள். தனியார் மருத் துவமனைகளி லும் வேலை வாய்ப்பு கிடைக் கும். இந்தியா வில் மட்டுமல்லாது, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அரபு நாடு களில் இந்திய நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு பிரகாசமா க உள்ளது. நர்சிங்கில் முதுநிலைப் பட்டப் படிப்பும் படிக்கலாம்.

பார்மஸி

டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனில் எழுதியிருப்பதைப் பார்த்து மருந்து களைத் தருவதற்கான உரிமை உடையவர் கள் பார்மசிஸ்ட்டுகள் எனப்படும் மருந்தா ளுநர்கள் மட்டுமே. பார்மசிஸ்ட்டுகளாக டி. பார்ம், பி.பார்ம் படிப்புகளைப் படிக்கலாம். மதுரை, தஞ்சாவூர், கோவை மருத்துவக் கல்லூரிகளில் டி.பார்ம், படிப்பு உள்ளது. பி. பார்ம்., படிக்க தமிழகத்தில் பல பார்மஸி கல்லூரிகள் இருக்கின்றன. பி.பார்ம். படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க் கப்படுகிறார்கள். மருந்தின் தன்மையை தெரிந்து வைத்திருப்பது டன், மருத்துவர்கள் பரிந்துரை க்கும் மருந்துகளை நோயாளிக்கு வழங்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் பார்மஸி படித்தவர் கள், இந்திய மருந்து கவுன்சிலின் மாநில கவுன்சிலில் பதிவு செய் திருக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் தோராயமாக 50 ஆயிரம் மருந்துக் கடைகள் உள்ளன. சொந்தமாக மருந்துக் கடைகளை வைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்மஸி படித்திருக்க வே ண்டும். தமிழ்நாட்டில் ஏராளமான மருந்து தயாரிப்பு நிறுவனங்க ள் உள்ளன. அங்கும் பார்மஸி படித்த வர்களுக்கு வேலை கிடை க்கும்.

டிரக் இன்ஸ்பெக்டர் பணிக்கு பார் மஸி பட்டதாரிகள், தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படு கிறார்கள். பார்ம்.டி என்ற புதிய படிப்பு சில நிகர்நிலைப் பல் கலை க்கழகங்களில் அண்மைக் காலத்தில் தொடங்கப்பட்டு ள் ளன. இந்தப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம்.

பிசியோதெரபி (பி.பி.டி.)

மிக முக்கியமான துணை மருத்துவப் படிப்பு இது. நீண்ட நாட்க ளாக முறையாக செயல்படாமல் இரு க்கும் உடல் இயக்கத்தை சீர் செய்ய மருந்துகளோடு சேர்த்து முடநீக்கியல் சிகிச்சையும் அவசி யமான ஒன்றாகி உள்ளது. எலும்பு முறிவு, சதைப் பிடிப் பு, மூட்டு வலி போன்றவற்றுக்கு சிகி ச்சை அளித்து வலியைப் போக்குவ தில் பிசியோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய பணிக்கேற்ற வர்களைத் தயார் செய்வதற்காக உள்ள படிப்புதான் பிபிடி பட்டப் படிப்பு. இப்படிப்புக்காலம் நான் கரை ஆண்டுகள். வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவின் மூலம் அரசு மருத்துவ மனைகளுக்கு பிசியோதெரபிஸ்ட்டுகள் தேர்வு செய்யப்படுகி றார்கள். டாக்டர்களுக்கு எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் பிசியோதெரபிஸ்ட்டுகளுக்கும் வேலை வாய்ப்பு உள்ளது.

ஆக்குபேஷனல் தெரபி

மனநலம் மற்றும் மனநலம் சார்ந்த உடல் கோளாறுகளுக்கானது ஆக்குபேஷனல் தெரபி. இயல்பு நிலையிலிருந்து மாறுபட்ட  நடத்தைக்கான காரணங்களைக் கண்டறிந் து சிகிச்சை அளிப்பதுதான் இந்தப் படிப்பு. இந்தப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பாலி கிளினிக், மருத்துவமனைகள், மாற்று த் திறனாளிப் பள்ளிகள், மனநல சிகிச்சை மையங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் வேலை வாய்ப்பு உள்ளது.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவப் படிப் புகள்

நவீன மருத்துவத்திற்கு இணையாக சமீப காலங்களில் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் தேவை அதிகரித்து உள் ளது. சமீபத்திய உதாரணம் டெங்கு சிகிச்சை. கடந்த நவம்பர் மாதத்தில் டெங்கு காய்ச்சலால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்ட தைத் தொடர்ந்து பப்பாளி இலைச் சாறு, நில வேம்புக் கஷாயம் போன்ற பாரம் பரிய மருந்துகளைப் பயன்படுத்திய பிற கே நிலை மை கட்டுக்குள் வந்தது.

தமிழகத்தில் பாளையங்கோட்டை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை சித்த மருத்து வப் பட்டப் படிப்பு உள்ளது. பி.ஏ.எம்.எஸ். என்ற 5 ஆண்டு ஆயுர் வேத மருத்துவ படிப்பு சித்த மருத்து வக் கல்லூரியிலேயே உள்ளது. இது தவிர ஆயுர்வேத மருத்துவத்திற் கென்றே தனியார் ஆயுர் வேத பல் கலைக்கழகங்களும் உள்ளன. ஜெய் ப்பூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட் யூட் ஆஃப் ஆயுர்வேதா கல்வி நிலை யத்தில் டிப்ளமோ இன் ஆயுர்வேதிக் பார்மஸி என்ற 2 ஆண்டு படிப்பு, டிப்ளமோ இன் ஆயுர்வேதா நர் ஸிங் என்ற 18 மாதப் படிப்பும்  உள் ளன. ராஜஸ்தான் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ இன்ஹெர்பல் மெடிசின் என்ற ஓராண்டு டிப்ளமோ படிப்பு உள்ளது. நவீன மருத்துவத்திற்கு அடுத்து, பிரப லமாக இருப்பது ஹோமியோபதி. ஐந்தரை ஆண்டு படிப்பு இது. எளிய மருத்துவ சிகிச்சை என்பதால், இந்த மருத்துவ முறை தற்போது பிரபல மாகி வருகிறது. எனவே, இந்தப் படிப் பில் சேருவதிலும் மாணவர்கள் ஆர் வம் காட்டி வருகிறார்கள். மதுரை யை அடுத்த திருமங் கலத்தில் அரசு ஹோமியோபதி கல் லூரி உள்ளது. இதுதவிர, தனியார் ஹோமியோபதி கல்லூரிகளும் உள்ளன.

ஆடியாலஜி

பி.ஏ.எஸ்.எல்.பி. என்பது ஆடியாலஜி மற்றும் ஸ்பீச் அண்ட் லாங் க்வேஜ் பேத்தாலஜியில் 3 ஆண்டு கள் பட்டப் படிப்பு. பேச்சு மற்றும் செவித்திறன் கோளாறுகளைக் கண்டறிவது தொடர்பான மருத்து வப் படிப்பு. எஸ்.ஆர்.எம். பல் கலைக் கழகம், ஸ்ரீராமச்சந்திரா பல் கலைக் கழகம், விநாயகா மிஷன் பல்கலைக் கழகங்களில் இந்தப் படிப்பு உள்ளது. சண்டீகரில் உள்ள போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ் டிட்யூட் ஆஃப் மெடிக்கல் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் கல்வி நிலையத்தில் பிஎஸ்சி ஆடியாலஜி படிப்பு உள்ளது. காது கேட்கும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்தப் படிப்புகளைப் படித்தவர்க ளுக்கு வேலை கிடைக்கும்.

ஆப்ட்டோமெட்ரி

கண்களின் அமைப்பு, செயல்பாடுகளைப் பற்றிய படிப்பு இது. கண் மருத்துவமனைகளில் கண் டாக்டர் களுக்கு உதவியாளர்களாக இவர்க ளால் செயல்பட முடியும். ரிப்ராக்டி வ் எரர் என்று சொல்லப் படும் கிட்டப் பார்வை, தூரப் பார்வை உடையவர் கள் என்ன மாதி ரியான கண்ணாடி களை அணிய வேண்டும் என்பது உட்பட கண் தொடர்பான கோளாறுகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதற்கு முன் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து ரிசல்ட் தருப வர்கள் இவர்கள். அரசு கண் மருத்துவமனைகள் தவிர, அகர் வால் கண் மருத்துவமனையில் பி. எஸ்சி. 4 ஆண்டு படிப்பும் டிப்ள மோ 2 ஆண்டு படிப்பும் உள்ளன. தலா 40 இடங்கள் உள்ள இந்தப் படிப்பில் சேர பிளஸ் டூ தேர்வில் 60 சதவீத  மதிப் பெண் கள்  பெற்றிருக்க வேண்டும். அறிவியலை சிறப்புப் பாடமாக எடுத் துப் படித்திருக்க வேண்டும். சங்கர நேத்ராலயா மருத்துவமனை யில் ஆபரேஷன் தியேட்டர் அனஸ்தீசியா டெக்னாலஜி, ரிப்ராக்ஷ ன், ஆப்தால்மிக் நர்சிங் அசிஸ்டெண்ட்  ஆகியவற்றில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்புகளும் மெடிக்கல் லேப் டெக்னாலஜி என்ற 3 ஆண்டு இள நிலை பட்டப் படிப்பும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சான் றிதழ்க ளை வழங்கும்.

ரேடியோகிராபி

மருத்துவத்தின் உட்பிரிவான இந்தப் படிப்பு படித்தவர்களை ரேடியாலஜிஸ்ட் என்று கூறு வார்கள். எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம். ஆர்.ஐ. போன்ற பரி சோதனை கள் செய்வது இவ ர்கள் தான். உடல் உள் உறுப்பு கள் எப்படி உள்ளன, என்ன மாதிரியான கோளாறுகள் உள்ளன, அதன் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பது போன் றவற்றை துல்லியமாக அறிந்து, ரிப்போர்ட் செய்வது தொடர்பான படிப்பு இது. அதனால், டாக்டர்கள் படிக்கும் உடற்கூறியல் பாடம் போல இவர்களுக்கும் உடல் உறுப் புகள் குறித்து முழுவதும் கற்றுத் தரப்படுகிறன.  நவீன மருத்துவத் தின் தலைநகரமாக இந்தியா இரு ப்பதால், சர்வதேசத் தரம் வாய்ந்த பரிசோதனைக் கூடங்கள் இங்கும் வந்துவிட்டன. எனவே, இந்தப் படிப் புகளைப் படித்தவர்க ளுக்கு நல்ல வேலை வாய்ப்பு உள்ளது.

ஸ்பீச் தெரபி

பேசுவதில் ஏற்படும் பிரச்சி னைகளை சரி செய்வது குறி த்து இந் தப் படிப்பில் கற்றுத் தரப்படுகிறது. புதுதில்லி யில் உள்ள எய்ம்ஸ் உட்பட பல தன்னாட்சி பெற்ற மருத்துவமனைகளில் ஸ்பீச் தெரபி பாடத்தில் இளநிலைப் பட்டப் படிப்பு உள்ளது. தவிர, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பி.ஏ.எஸ்.எல்.பி. என்ற நான்காண்டுகள் பட்டப் படிப்பு புதிதாகத் தொடங்கப்பட்டு ள்ளது.

டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள்

மருத்துவக் கல்வி இயக்ககத்தின்கீழ் கிண்டியில் செயல்பட்டு வரும் கிங் இன்ஸ்டிட்யூட்டில் 23 படிப்புகள் உள்ளன.

அதன் விவரம்: 

1.    கார்டியோ சோதனோகிராபி தொழில்நுட்பம்     1 ஆண்டு   

2.    ஈ.சி.ஜி. டிரட்மில் தொழில்நுட்பம்     1 ஆண்டு   

3.    பம்ப் தொழில்நுட்பம்    1 ஆண்டு   

4.    கார்டியோ கேத் தொழில்நுட்பம்    1 ஆண்டு

5.    அவசரகாலத் தொழில்நுட்பம்    1 ஆண்டு

6.    சுவாசத் தொழில்நுட்பம்    1 ஆண்டு

7.    டயாலிசஸ் தொழில்நுட்பம்    1 ஆண்டு

8.    மயக்க மருந்தியல் தொழில்நுட்பம்    1 ஆண்டு

9.    தியேட்டர் தொழில்நுட்பம்    1 ஆண்டு

10.   ஆர்த்தோபிடிக் தொழில்நட்பம்         1 வருடம்     

11.   கதிரியக்க உதவியாளர்     1 ஆண்டு 

12.   ஆடியோமெட்ரி    1 ஆண்டு   

13.   செவித்திறன் மற்றும் பேச்சு தெரபி    1 ஆண்டு   

14.   உணவு மேலாண்மை     1 ஆண்டு   

15.    ஈ.ஈ.ஜி., ஈ.எம்.ஜி.     1 ஆண்டு   

16.    செவிலியர் உதவியாளர் –     1 ஆண்டு

17.    டென்டல் மெக்கானிக்     2 ஆண்டுகள்   

18.    பல் சுகாதாரம்     2 ஆண்டுகள்   

19.    மெடிக்கல் ரெக்கார்டு    6 மாதங்கள்   

20.    மெடிக்கல் லேபாரட்டரி     2 ஆண்டுகள்   

21.    கதிரியக்க தொழில்நுட்பம்    2 ஆண்டுகள்   

22.    மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ்     -1 ஆண்டு   

23.    ஆப்டோமெட்ரி    6 மாதங்கள்

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: