Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாய்களின் உடல்மொழி தெரிந்துகொள்ளுங்கள்

வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி என்றால் முதலில் நமக்கு நினைவில் வருவது நாய் தான். பல பேர் வீட்டில் நாயும் ஒரு உறுப்பினராகவே வாழ்கிறது. அந்தள வில் நாயின் மீது அன்பும், அதன் பரா மரிப்பும் இருக்கும். நாய் கள் பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும், அதுவும் மனித மொழி யில். அப்படி பேசாததால் அவற்றிற்கு மொழி இல்லை யென்றில்லை. அது தங்கள் சத்தத்தையும், உடல் மொழியை யும் (Body Language) வைத்து தகவலைத் தெரிவிக்கிறது. இதை வைத்து அவற்றிற்கு பிடித்த உணவு, பிடித்த நபர் அல்லது விரட்டிச் செல்ல பிடித்த பூனை போன்ற வற்றை எளிதில் கூறலாம். இதன் செய்கையால் அதன் தன் முனைப்பு நடத்தையை அறிந்து அதை கட்டுப் படுத்த முடியும். நாய் எப்போது பய முறுத்தப்பட்டு பாய்வத ற்கு முற்படு கிறது என்பதை அதன் உடல் மொ ழியை வைத்தே அறிந்து, நம்மையு ம், நாயையும் பாதுகாத்துக் கொள் ளலாம். நாயின் உடல் மொழி யை படிக்கும்போது, அதன் ஒட்டு மொத் த உடல்மொழியையும் எடுத்து, தனி தனி வகைகளாக பிரித்து பார்த்தால். அதன் உடல்மொழியை வேகமாக கற்கலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த மிருக வதை சங்கம் கூறுகிறது.
.

குரல்

.
நாயின் குரலை கூர்ந்து கவனிக்க வேண்டும். நாய் பலத்தரப்பட்ட சப்தங்களில் குரைக்கவும், பலமின்றிச் சிணுங்கவும் செய்யும். நாய் சிணுங்கி னால், அது பயந்தோ அல்லது உடம்பு சரி யில்லா மலோ அல்லது மிகுந்த ஆவ லோடு உள்ளதாக அர்த்தமாகும். சில நாய்கள் அதிக சந்தோஷத்தில் இருக்கும் போது சிணுங்கும். அதே போல் தன் குரலை உயர்த்தியோ அல்லது அதிகமா க குரைத்தோ தன் உணர்ச்சியை வெளி ப்படுத்தும். ஒரு நாய் தன் கோபத்தை வெளிப்படுத்தவே குரைக் கும் என்றில்லை. தன் குதூ கலத்தை, சந்தோஷத்தை, சலிப்புத் தனத்தை, வெறுப்பை காட்டு வதற்கும் அது குரைக்கும். ஒரு உறு மும் நாய் தன் கோபத்தை காட்டவே அப்படிச் செய்யும். ஆனால் ஒரு குட்டி நாயின் உறுமல் இதில் அடங்காது, அது விளையாட் டுத்தனமான உறுமலாகும்.
.

வாய்

.
நாயின் வாயை கவனிக்கவும். ஒரு நாய் தன்மேல் உதட்டை மடித் து தன் பயமுறுத்தும் பற்களை காட்டலா னால், அது மிகுந்த கோப த்தில் கடிப் பதற்கு தயாராக இருக்கிறது என்று அர்த்தம். வெற்று பற்களுடன் ஒரு சின்ன சிணுங்கலும் சேர்ந்து இருக்கும். சந்தோ ஷமாக இருக்கும் நாய் அமைதியாகவும் வாயை மூடியும் அல்லது சிறிது திறந்தும் இருக்கும். அந்த நேரம் சிறிது மூச்சிரை க்கவும் செய்யும். மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் நாயும் மூச்சிரைக்கும். சில நாய்கள் பணிவாக போகின்ற நேரத்தில் பற்களை காட்டிச்சிரிக்கவும் செய்யும் என்று சொல்கிறார் நாய் நடத்தையின் வல்லுநர் டேவிட் டெய் லர்.

.

கண்

.
நாயின் கண்களை பார்க்க வேண்டும். சந்தோஷமாக இருக்கும் நாய்களின் கண்கள் இயல்பான நிலையில் பளிச்சென்று இருக் கும். குழம்பிய நிலையில் இருக் கும் நாய்கள், கண் இமைகளை உயர்த்தி தலையை சாய்த்து தன் உணர்வை காட்டும். பயத்துடன் இருக்கும் நாய், மூர்க்கத்தனமான கண்களுடன், தோள் கள் பின்னடைந்து, வெண் ணிற கண்கள் கலங்கியும் இருக்கும். மூர்க்கத் தனமான கோபத்துடன் இருக்கும் நாய்கள், எதிராளியான மனிதனி டமோ அல்லது மிருகமி டமோ துணிச்சலுடன் கண்ணை நோக்கி பார்க்கும். நாயின் கண் கள் இயல்பு நிலையை விட சின்னதாக இருந்தால், அது பயந்தோ அல்லது உடல் நிலை சரியில்லாம லோ இருக்கும் என்று ASPCA சொல்கிறது.
.

வால்

.
நாயினுடைய வாலின் நிலையை பார்க்கவும். சந்தோஷமான தருணத்தில் அது தன் வாலை ஆட்டிக் கொண்டிருக்கும். ஆனால் அதற்காக வாலை ஆட்டினால் அது எப்போதும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது என்று சொல்லமுடியாது. அது கோபத் தின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். அதனால் வாலை ஆட்டும் போது, அதன் உடல் மொழி யுடன் சேர்த்து முடிவு செய்ய வேண் டும். நாயின் வால் அதன் கால்க ளுக்கு நடுவில் இருந்தால் அது பயந்தோ அல்லது பணிந்தோ உள்ளது என்று அர்த்தம். பயத்துடன் இருக்கும் நாயின் வால் தரையை நோக்கி இறுகி போய் இருக்கும். அதுவே அது மிகுந்த கோபத்துடன் இருந்தால் அதன் வால் வானத்தை நோக்கி இறுகி போய் இருக்கும். இப்படி வால் இருக்கும் நேரம் , இறுகிய உடம்புடன், கூர்மையாக்கிய காதுக ளுடன், பற்கள் தெரிய அது இருந் தால், அது யாரையாவது தாக்கப் போகிறது என்று நமக்கு தரும் எச்சரிக்கை.

.

காது

.
நாயின் காதுகளை கவனிக்க வேண்டும். சுகமாக இருக்கும் நாய் களின் காதுகள் இயல்பாக இருக்கும். நாய் எதையாவது கவனிக் கும் போது அல்லது விழிப்பாக இருக்கும் போது காதுகள் தலையின் மேல் கூர்மை யாக இருக்கும். அதுவே சற்று பின் னோக்கி இரு ந்தால், அது நட்புடைய உணர்வோடு இருக்கிறது என்று அர்த்தம். பணிந்து அல்லது பயந்து போன நாய்களின் காதுகள் தலை யோடு தட்டையாக அல்லது ஓரமாக இருக்கும்.
ஒட்டுமொத்த உடல்
.
நாயின் ஒட்டுமொத்த உடல் தோர ணையை கவனிக்கவும். அது விளையாட வேண்டுமானால், கீழே குனிந்து, முன்னங்காலை கூனிக் குறுகும். சந்தோஷமாக இருக்கும் நேரம், அதன் தசைகள் லேசாகி ஓய் வெடுக்கும். இதுவே பயந்த நிலையி ல் இருந்தால், தன் உடலை பின்னோ க்கிச் சென்று தன்னை சிறியதாக காட்டச்செய்யும். மேலும் தரை யை நோக்கி பதுங்கும். ஆளுமை அல்லது விழிப்புடன் இருக்கும் நேரத்தில், அது தன் தசைகளை இறுக்க மாக்கி, நிமிர்ந்து நிக்கும். பணிந்து போகும் நாய்கள் பின்னங்கா லை தூக்கி, பின்பக்கமாக சுற்றிக் கொள்ளும்.
நன்றி – போல்டுஸ்கை

Leave a Reply