Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நில நடுக்கம் எப்ப‍டி ஏற்படுகிறது?

சில மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உங்களில் சிலர் அத னை உணர்ந் திருப்பீர்கள். அந்த நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். இலேசான அதிர்ச்சி முதல் கடும் நில நடுக்கம் வரை சுமார் 10 இலட்சம் நில நடுக்கங்கள் ஆண்டு தோறும் உலகில் ஏற்படுகின்றன.

பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெ ரிக்காவின் மேற்குக்கரைப் பகுதி, ஆசி யாவின் கிழக்குக் கரைப் பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின் றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும் பாலானவை மிக மிக இலேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை.
 
பசிபிக் கடலில் உள்ள பல தீவுகள், இந்தோனேஷியா, துருக்கி, கிரேக்கம், தென் அமெரிக்கச் சிலி ஆகியன நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளன. 1883ஆம் ஆண்டு ஆகச்டு மாதம் 26ஆம் நாள் இந் தோனேஷியா அருகே யுள்ள கிரக டோவாத் தீவில் கராங் எனும் எரிமலை பயங்கரமாகக் கக்கிய போது நிலநடுக்கம் ஏற்பட்டு அத் தீவின் சில பகுதிகள் கடலில் மூழ்கின.
 
பூமியின் மேலே தோடுபோல அமைந்துள்ள மேற்புறப் பகுதி பாறை களைக் கொண்டுள்ளது. இதனைப் புறணி என்பர்.
 
இப்புறணி எல்லா இடங்களிலும் நிலையாக அமைந்து இருக்கவி ல்லை. அவ்வாறு உறுதியாக அமைந் திராத இடங்களில் உட்புறப் பாறைகள் விரிசல் விட்டுச் சரிகையில், உட்புற த்தில் அமைந்த பெரும்பாறைகள் வேறு பெரும்பாறைகளுடன் மிகுந்த ஆற்றலு டன் உராய்கின்றன. அதனால் ஏற்படும் அதிர்வுகள் பூமியின் மேற் பரப்பை அடை வதால் பூமி அதிர்ச்சியான நிலநடுக்கம் ஏற்படு கிறது.
 
பூமிக்குள்ளே ஏற்படக்கூடிய இம்மாறுதல்கள் எல்லாமே வெளிப் பகுதியில் விளைவினை உண்டாக்குவதில்லை.
 
பூமியின் மேற்புறப் பாறை அடுக்குகள் காப்பு உறை போல அமை ந்துள்ளதால், சில இடங்களில் மட்டுமே பூமியின் உள்ளே ஏற்படும் மாறுதல்கள் வெளிப்பகுதி யில் விளைவை ஏற்படுத்து கின்றன. எனவேதான் பூமியில் சில இடங்களில் மட்டும் அடிக்கடி பூமி அதிர்வு ஏற்படுகிறது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

 

Leave a Reply