தண்ணீருக்குள் இருக்கும் பிராணவாயுவான ஆக்ஸீஜனை தனது செதில்களால் சுவாசிப்பதன் மூலம் தண்ணீரில் மீன்கள் உயிர் வாழ் கின்றன• அப்படி தண்ணீ ரிலேயே வாழும் மீன்களை பிடித்து தரை யில் போட்டுவிட்டால், அதன் உயிர் சில விநாடிகளிலேயே பிரிந்து, சில மசாலாவுடன் கொதிக் கும் எண்ணெயில் பொறிந்து அசைவப் பிரியர்களுக்கு உணவாக மாறி விடும். ஆனால், கீழுள்ள வீடியோவில் உள்ள மீன்களோ தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து, தரையில் போட்டாலும், இவற்றின் உயிர் பிரியாமல், தண்ணீரில் சுவாசிப்பது போல தரையிலும் சுவாசித்து உயிர்வாழும் அதிசயத்தை பாருங்கள்.