Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மார்பக புற்றுநோய் – அறுவை சிகிச்சை காட்சி – வீடியோ

இந்த மார்பக புற்றுநோய் பெரும்பாலும், குழந்தையில்லாதவர்கள் அல்லது 30 வயதுக்கு மேலே குழந்தை பெற்றுக் கொள்பவர்கள். குறிப்பாக 12 வயதிற்கு முன்பே பருவம் அடையும் பெண்கள், அல்லது 55 வயதிற்கு மேலாகியும் மாத விடாய் நிற்காத பெண்கள். ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அடங்கி யுள்ள மாத்திரைகள் மற்றும் கர்ப்பத் தடை மாத்திரைகளை தொடர்ந்து எட்டு வருடங் களுக்கும் மேலாக உபயோகிக்கும் பெண்கள், புகையிலை மற்றும் மது பழக்கம் உள்ள பெண்கள். குடும்பத்தில் இதற்குமுன் பாட்டி, அம்மா, அக்கா என்று எவருக்காவது மார்பக புற்றுநோய் இருந் தாலும்  புற்று நோய் வர வாய்ப்பு இரு ப்ப‍தாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய நோய் தாக்குதலுக்கு ஆளான பெண்கள், தனது உயிருக்கே ஆபத்து ஏற் பட்டுவிட்ட‍தாகவும், தான் இனி பிழைக்க‍ முடியாது என்றும், இது ஏதோ வரக்கூடாத நோய் வந்துவிட்ட‍தாகவும் தங்களுக்குள் ளே யே ஒருவித கற்பனையை செய்து கொ ண்டு, மருத்துவரிடம் செல்வதிலை. மருத்து வரிடம் சென்றாலும், இது குறித்த‍ போதிய விழிப்புணர்வு இல்லாத தால் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கும், அறுவை சிகிச்சை களுக்கும் உட்பட பயந்து, வாழ்ந்து வருகின் றனர்.

அத்தகைய பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்த‍ விழிப்புணர் வை ஏற்படுத்தி, அவர்கள் தேவையான மரு த்துவ சிகிச்சையோ அல்ல‍து தேவைப் பட்டால் அறுவை சிகிச்சையோ செய்து கொண்டு, இந்நோய், முற்றிலும் குண மாகி  வாழ்க்கையில் பயமின்றி, வாழவே, யூ-டியூப்பில் கண்டெடுத்த‍ இந்த அனிமேட்ட‍ட் வீடியோக் களை பகிர் ந்துள்ளேன். 

.

.

.

.

மார்பக புற்றுநோய் – சுய பரிசோதனை

Leave a Reply