மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணி நேரம் வரும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, நமது கடன் எத்தனை கோடி ரூபாய்க ளாக இருந்தாலும், அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.
அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக் னம் வரும் வேளையிலோ, அனுஷ நட்ச த்திரம் வரும் நாளில் விருச்சிக லக்னம் வரும் வேளையிலோ (பொதுவாக இதை மைத்ர முகூர்த்தம் என்று சொல்வார்கள்), நவமி திதி, வரும் செவ்வாய் கிழமையிலோ சதுர்த்தி திதி வரும் ஞாயிறு (அ) சனிக் கிழமையிலோ தினசரி காலண்டர் போட்டிருக்கும் குளிகை நேரத்தில் மேலே சொன்னது போல கடனைத் திருப்பிக் கொடுக்க லாம், செவ்வாய் கிழமை செவ் வாய் ஹோரையில் அப்படிச் செய் தால் நிச்சயமாக கடன் சுமை தீரும்.
பொதுவாகவே தமிழ் வருடங்களை அடிப்படையாக கொண்டு தான்மை த்ர மூகூர்த்தம் பட்டியல் வெளியிட முடியும்.நந்தன வருடம் பாதி முடிந்துவிட்டதால் மீதி நாட்களுக்கு பட்டியல் கீழே.,
19.1.13 சனி மதியம் 12.55 முதல் 2.55 வரை;
15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை;
23.2.13 சனி காலை 9.30 முதல் 11.30 வரை;
மதியம் 3.30 முதல் 5.30 வரை;
இரவு 9.30 முதல் 11.30 வரை;
9.3.13 சனி காலை 8.45 முதல் 10.45 வரை;
மதியம் 2.45 முதல் 4.45 வரை;
இரவு 8.45 முதல் 10.45 வரை;
31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;
11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;
இந்த நேரத்தின் மைய பாகத்தைப் பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்; பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன் படுத்திட, விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்து விடும். பலரி டம் நாம் கடன் வாங்கியிருந்தால், ஒவ்வொரு வருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்; வங்கிக் கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர் த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
The dates entered here are already over. No use of this article.
பரவலாக எழும் கேள்வி… கடன் சுமை தீர, வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் போதும். கடன் திருப்பி அடைக்க மூஹுர்த்தம் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?
வங்ககிகளில் மாதாமாதம் முன்தேதியிட்ட காசோலை வழங்கியவர்கள் அல்லது ECS மூலம் கடன் திரும்ப செலுத்துபவர்கள் எப்படி இந்த மைத்ரமுகூர்த்த நேரத்தை பயன்படுத்துவது, தயவுசெய்து விளக்கவும்